சிரிப்பு என்பது மனிதனுக்கு "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆத்திகர்களும் "இயற்கையின் அன்பளிப்பு" என்று நாத்திகர்களும் வகை பிரிப்பர். வரமோ அன்பளிப்போ, சிரிப்பதால் மனிதனுக்கு நலன் விளைவது மட்டும் உண்மை என்று அறிவியல் கூறுகிறது.
கடவுளின் இருப்பை நம்புவது கடவுளை மறுப்பவர்க்குச் சிரிப்பைத் தரும்; அதுபோலவே, கடவுளின் இருப்பை நம்புபவர்க்குக் கடவுளை மறுப்பது சிரிப்பைத் தரும்.
வெறும் உதட்டளவில் இல்லாது மனமாரச் சிரித்ததாகச் சென்ற வாரம் கோபால் ராஜாராம் திண்ணையில் எழுதியிருந்தது மகிழ்வளிக்கிறது! ஆனால், அதற்கு அவர் கூறிய காரணம் இயல்புக்கு முரணாக இருக்கிறது.
//எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன்//என்று கோ.ரா. எழுதியிருக்கின்றார்.
புரியாத மொழியில் எழுதப்பட்ட ஒரு கருத்தை, அம்மொழியைத் தெரியாதவர் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், புரியாத ஏதோ ஒன்றுக்காக, எதிர்க் கருத்து என்பதாக ஒரு கட்டுரையே வடிக்க முடியுமா?
வடித்திருக்கிறார் கோ.ரா. இதைத்தான் நகைமுரண் என்று கூறுவர் போலும்.
திண்ணையின் 20 மார்ச் 2008 பதிப்பில் வெளிவந்த எனது கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த,
"எல்லா மகவுகளும் (இஸ்லாம் என்ற) இயற்கை நெறியில்தான் பிறக்கின்றன. அவற்றின் பெற்றோர்தாம் யூதராகவோ, கிருத்துவராகவோ தீவணங்கியாகவோ அவற்றை வளர்த்து விடுகின்றனர்..." (புகாரீ 6110).
என்ற நபிமொழியில் அரபி மொழி எங்கே இருக்கிறது என்பதை கோ.ரா. தெரியப் படுத்தினால் நன்றியுடையவனாவேன். பெயர்ச் சொற்களைத் தவிர்த்து முடிந்தவரை எளிய தமிழில் எழுத வேண்டும் என்ற எனது விருப்பத்தை, பழக்கத்தைச் செம்மைப் படுத்திக் கொள்ள கோ.ரா. உதவ வேண்டும்.
//நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மா-அப்பா குரொமோசோம்களின் கலவையும், முன்னோர்களின் மரபணுப் பதிவின் கலவையுமாகப் பிறந்த நான் ஒரு எழுதப் படாத சிலேட் தான். அதற்குப் பின்பு என் பெற்றோர், என் சூழல், என் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப் பாடுகளும், சிந்தனைகளும் பெற்று வளர்ந்து நிற்கிற ஒருவன் நான். எல்லோருமே அப்படித்தான், வஹாபி உட்பட//என்று கோ.ரா. கூறுவது நான் எடுத்தாண்ட நபிமொழியின் வேறொரு கோணமான விளக்கம் என்றே நினைக்கிறேன்.
முன்னொரு காலத்தில் எங்கள் பகுதியில் இதே மாதிரி சிலேட் ஒன்று இருந்தது. அதற்குச் சட்டம் கட்டும்போதே அதன் சாதியின் பெயர் எழுதப்பட்டு விட்டதாக அதனிடம் சொல்லப் பட்டது. அதற்குச் சட்டையும் செருப்பும் அணியும் தகுதி மறுக்கப் பட்டது. தெருக்கள் பெரிதாக இருந்தும் ஓரமாக, பணிவுடன் நடக்க வேண்டும் என்று பயிற்றுவிக்கப் பட்டது. மற்றவர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிடும்போது எங்கள் சிலேட்டுக்கு மட்டும் பலகாரக் கடைகளின் உள்ளே போகக்கூட அனுமதி மறுக்கப் பட்டது. கல்வி கற்பது தடுக்கப் பட்டது.
சிலேட்டுக்குச் சிந்தனை வந்தது. ஒரு நாள் நிமிர்ந்து நின்று சொன்னது: "நான் முஸ்லிமாகிட்டேன்". அந்த சிலேட்டு தாங்கிக் கொண்ட சோதனைகளால் தன் சந்ததியரின் சாதிப் பெயரை அழித்தொழித்து, எல்லா உரிமைகளையும் வரித்தெடுத்துத் தன்மானத்துடன் வாழ வழி செய்தது.
உலகில், நம் நாட்டில், குறிப்பாக நம் தமிழகத்தில் தம் பழைய அடையாளங்களை அழித்துக் கொண்ட சிலேட்டுகள் நிரம்பக் கிடைக்கின்றன.
பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே எழுதப் படாத சிலேட்தான் என்பதில் எனக்கு எதிர்க் கருத்தில்லை. ஒரு குழந்தை இஸ்லாமியக் குடும்பத்தில் பிறப்பதால் மட்டும் 'முஸ்லிம்' ஆகி விடுவதில்லை. அதற்குப் பின்பு அதன் பெற்றோர், அதன் சூழல், அதன் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப்பாடுகளும் சிந்தனைகளும் பெற்று வளர்ந்து, இஸ்லாத்தை முழுதாக மனதளவில் ஏற்று அதன் வழிகாட்டுதல்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும்போதுதான் அது உண்மையான முஸ்லிம் ஆகிறது. எல்லாக் குழந்தைகளுமே தம் வாழ்க்கைப் பயணத்தை ஒரே எல்லைக் கோட்டிலிருந்துதான் தொடங்குகிறார்கள். யாருக்கும் யாரும் உயர்ந்தவர் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை.
"வர்ண பேதம், உயர்வு-தாழ்வு, சாதி, மதம், இனம், மொழி போன்ற வெறியோ வேற்றுமையோ ஒரு குழந்தையோடு ஒட்டிக் கொண்டு பிறப்பதில்லை; அவை வளர்ப்பால் வருபவை" என்பதுதான் நான் எடுத்தாண்ட நபிமொழியின் கரு என்பதும் அதில் கடுகளவு பொய்யோ மிரட்டலோ இல்லை என்பதும் சின்னப் பிள்ளைக்கும் தெரியும்; திண்ணை வாசகர்களுக்கும் நன்கு தெரியும்.
***
இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இறுதிநபியைப் பற்றியும் ஏற்கனவே திண்ணையில் ஆவணப் படுத்தப் பட்டுள்ள பேரா. நாகூர் ரூமியின் கட்டுரையில் காணப் பட்டப் புகழுரைகளை நான் சுட்டியதன் நோக்கம் மிகத் தெளிவானதாகும். "உலகம் முழுதும் இஸ்லாம் எள்ளி நகையாடப் படுகிறது" என்று போகிற போக்கில் (திண்ணையில்) போட்டு விட்டுப் போனதை மறுக்கும் முகமாகத் திண்ணைச் சான்றுகளை மட்டும் முன் வைத்திருந்தேன். அவையனைத்தும் பிறமதத் தலைவர்களால், புகழ் பெற்ற அறிஞர்களால் கூறப் பட்டவை என்பதால் அவை சான்றுகளாக முன்வைக்கும் தகுதியைப் பெறுகின்றன. அவை மட்டுமின்றி, இதை எழுதத் தொடங்குவதற்குச் சற்றுமுன் படிக்கக் கிடைத்த வாடிகன் செய்தியான,
Islam has surpassed Roman Catholicism as the world's largest religion, the Vatican newspaper said Sunday. "For the first time in history, we are no longer at the top: Muslims have overtaken us," Monsignor Vittorio Formenti said in an interview with the Vatican newspaper L'Osservatore Romano. Formenti compiles the Vatican's yearbook.
போன்ற செய்திகளும் வேதவாக்குகளாக எடுத்துக் கொள்ளப் படவில்லை; பொய் சொல்லி ஆள் சேர்க்கும் அவல நிலையில் இஸ்லாமும் இல்லை; இஸ்லாத்துக்கு வெட்டி விளம்பரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாடிகன் இதழும் இல்லை என்பதே உண்மை.
சிலர் போற்றுவதாலும் வேறு சிலர் தூற்றுவதாலும் ஒரு கொள்கை ஆதிக்கம் செலுத்துவதாகவும் பாதிக்கப் படுவதாகவும் இருப்பின் அது கொள்கையேயன்று.
***
கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் நான் பிறந்த ஈரானை விட்டு இஸ்ரேலுக்குக் குடியேற மாட்டேன் என்பதை, "Iran's Jews not for sale" என்ற தலைப்பில் "The identity of Iranian Jews is not tradeable for any amount of money" என்று கூறும் ஈரானிய யூதர்கள் தங்களின் பிரதிநிதியாக மோரிஸ் மொடாமெட் என்பவரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்று முழுமதச் சுதந்திரத்தோடுதான் ஈரானில் வாழ்கிறார்கள்.
குவைத்தை இராக் ஆக்கிரமித்த வளைகுடாப் போரின் தொடக்கத்தின்போது இராக்கின் துணைப் பிரதமராக இருந்த தாரிக் அஸீஸ் ஒரு கிருத்துவர். சமாதானம் செய்வதற்கு வந்த ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் புத்ரோஸ் புத்ரோஸ் காலியும் எகிப்து நாட்டுக் கிருத்துவர். புத்ரோஸின் தந்தை யூஸுஃப், எகிப்து அரசின் நிதியமைச்சராகப் பதவி வகித்த கிருத்துவர்.
'அரபு நாட்டில் மதச் சுதந்திரம்' என்ற பேசுபொருளுக்குப் பொருத்தமாக அங்குக் கடந்த 24 மார்ச் 2008இல் புதிய சர்ச் ஒன்றை அந்நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் ஆய்வக அமைச்சர் திறந்து வைத்திருக்கிறார் என்ற செய்தியை இங்குச் சொல்லி வைக்கிறேன்.
நான் சொல்ல வருவது என்னவெனில் இதெல்லாம் வஹ்ஹாபி குரல் கொடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் இயல்பாக நடைபெற்று வருகின்றன என்பதைத்தான்.
***
//முகம்மது கார்ட்டூன்களுக்குத் தானே முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மோசஸ், ஏசு பற்றி காமெடியும், கார்ட்டூன்களும் வழமையாய் எல்லா மேற்கு நாடுகளிலும் உண்டே அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே// என்பது கோ.ரா.வின் ஆதங்கம்.
நாங்கள் இறைத் தூதர்கள் என்று நம்பும் எவர் இழிவு படுத்தப் பட்டாலும் கொதிப்படைவோம். ஏசுவை விமரிசிக்கும் டான் ப்ரவுனின் 'தி டா வின்ஸி கோட்' நாவலாக வெளிவந்தபோதும் திரைப்படமாக அது நீட்சி பெற்ற போதும் முஸ்லிம்கள் வாளாவிருக்கவில்லை. என்னதான் டான் ப்ரவுன் தனது முன்னுரையில், "இந்தக் கதையில் வர்ணிக்கப்படும் கலை, மதம், சம்பிரதாயங்கள் மற்றும் மதக்கோட்பாடுகள் எல்லாம் ஆதாரபூர்வமானவை; எதுவும் கற்பனையில்லை" என்று கதையளந்தாலும் முஸ்லிம்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கவில்லை:
The Da Vinci Code is a novel, a work of fiction. It does not present facts about Jesus's (as) life in a serious and respectful manner. It has fictionalized his life and story, and in this sense it has downgraded this great messenger of Allah. The author of The Da Vinci Code took some historical facts and then spun a mystery story to thrill and chill his readers. Allah's prophets and messengers should not be treated in this manner. They are entitled to receive utmost honor and respect from us. It is for this reason that Islam forbids making pictures of Allah's prophets and messengers and also forbids creating fictitious stories and movies about them. We as Muslims do not want to be known as people who react only when something wrong is done to the blessed name of our Prophet Muhammad(Peace be on him) We stand for the respect of all religious figures of all religions. Furthermore, Jesus (as) is also a blessed prophet for us. We believe in him and honor him. We also have something to say about this novel and movie.
"அன்னை மரியம்" என்று கண்ணியத்துடன் நாங்கள் குறிப்பிடும் மேரி அவர்களின் கற்பையும் ஆண் துணையின்றி அவர் ஏசுவைப் பெற்றெடுத்தது குறித்து விமரிசனம் வந்தபோதும் அதற்கான மறுப்பை ஆதாரங்களோடு ஆவணப் படுத்த முஸ்லிகள் தவறவில்லை:
In their recent books entitled Mary: The Mother of Jesus and Mary: A Dogmatic Journey, two "Catholic" writers, the journalist Jacques Duquesne and the theologian Dominique Cerbelaud, display an overt disbelief in the virginity of Mary the mother of Jesus Christ. Mr. Duquesne argues that it is a belief that is "not compatible with science." Mr. Cerbelaud asserts that the faith in the virgin birth came about "for reasons that spring from collective psychology." I believe both arguments to be inconsistent and based on a flawed understanding of science. Before explaining these, however, let me elaborate on why the virgin birth matters for me—since some non-Muslims might wonder why a Muslim cares about this controversy at all. The Virgin Birth According to the Qur'an As a Muslim, I am a passionate defender of the virgin birth of Christ, and all Muslims should be so. Why? Because this is one of the very important themes in the Qur'an. The Qur'an tells a great deal about the birth, works, and miracles of Jesus (`Isa in Arabic). His story starts with the angels' call to Mary (Maryam in Arabic) by which they declare the miracle of God—a son without a father. Mary is surprised: [She said, "My Lord! How can I have a son when no man has ever touched me?" He said, "It will be so. God creates whatever He wills. When He decides on something, He just says to it, 'Be!' and it is."] (Aal `Imran 3:47) There are many passages in the Qur'an in which Mary is highly praised. We read that angels said to her, ["Maryam, God has chosen you and purified you. He has chosen you over all other women"] (Aal `Imran 3:42). These verses make clear that Mary—along with Jesus himself—is a sacred figure for all Muslims.
நடிகை மாதுரி தீட்ஷித்தின் பரம பக்தரும் தான் பிறந்த ஊரான பந்தர்பூரிலுள்ள 'வித்தோபா' விக்கிரத்தை வணங்கி ஆராதனை செய்பவருமான ஓவியர் எம்.எஃப். ஹுஸைன், இந்து மதத்தினர் தெய்வமென வழிபடும் சரஸ்வதியை நிர்வாண நிலையில் ஓவியமாக வரைந்தபோது அந்தக் கிறுக்குக் கிழவரையும் அவருடைய கிறுக்குத் தனத்தையும் கண்டித்த முஸ்லிம்கள் நம் தமிழ் இணைய உலகிலும் உண்டு.
//1400 வருடங்கள் முன்பு இஸ்லாம் தோன்றவில்லை என்று வஹாபி சொல்வதும் எனக்கு விளங்கவில்லை// என்று கோ.ரா. வெளிப்படையாகக் கூறும்போது மீண்டும் நன்றாக விளக்க வேண்டியது என் மீது கட்டாயமாகிறது.
மக்கா நகரிலுள்ள 'கஅபா' என்னும் இறையில்லத்துக்குச் சென்று 'ஹஜ்' என்ற வணக்கத்தை நிறைவேற்றுவது முஸ்லிம்களின் ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றாகும். இது, முஸ்லிம்களுள் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கடமையாகும். இந்தக் கஅபாவைத் தம் மகன் இஸ்மாயீல் (இஸ்மவேல்) உதவியுடன் மறு சீரமைப்புச் செய்து கட்டியவர், முஸ்லிம்களின் இறைமறை பெருமை பொங்கப் பேசும் அண்ணல் இபுறாஹீம் (ஆப்ரஹாம்) என்ற இஸ்லாமிய இறைத்தூதர் ஆவார் [இறைமறை 022:026].
இறையில்லத்தைக் கட்டுவதற்காக அவர் நின்ற இடத்தருகில் ஹஜ்ஜுக்குச் செல்லும் முஸ்லிம்கள் வணக்கம் புரிய வேண்டும் என்பது [002:125] இறைக் கட்டளையாகும். இறைதூதர்களில் பலர் இவருடைய வழித்தோன்றி வந்ததால் 'நபிமார்களின் மூலத்தந்தை' என்று முஸ்லிம்களால் போற்றப் படுபவர்.
அவர்தாம் உலக வரலாற்றில் முதல் சிலைவணக்க எதிர்ப்பாளார்.
அண்ணல் இபுறாஹீம் அவர்களைப் பற்றிக் கூடுதல் விபரம் வேண்டும் எனில், 'கி.மு- கி.பிக்களின் கட்டுடைப்பு' என்ற திண்ணைக் கட்டுரையிலிருந்து பெறலாம்.
முஸ்லிம்களின் இறைத்தூதர்கள் பலரின் பெரும் பாட்டனார் அண்ணல் இபுறாஹீம் அவர்களின் காலம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அண்ணல் இபுறாஹீம் அவர்களுக்கும் அவர் வழி வந்த இறுதித் தூதரான நபிகள் நாயகத்துக்கும் இடையிலுள்ள இஸ்லாமிய இறைத் தூதர்கள் ஏராளம். எனவே, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் புதிதாகத் தோன்றவில்லை என்பதையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இஸ்லாம் மறு எழுச்சி பெற்றதே உண்மை என்பதையும் மீண்டும் ஒருமுறை நிறுவ விரும்புகிறேன்.
இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அதை, "இஸ்லாமிய மார்க்கம்" என்று குறிப்பிடுவர். மார்க்கம் என்பது "மார்க்" என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பதால் அதை, "வாழும்வழி", "வாழ்க்கைநெறி" என்று தமிழ்ப் படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மோஸஸும் ஏசுவும் அவ்விருவருக்கும் முப்பாட்டனாரான அண்ணல் இபுறாஹீமும் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைத்த முஸ்லிம் நபிகள் பலருள் மூவர் என்பது முஸ்லிம்களின் இறைமறை வழியாகப் பெறப் பட்ட ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.
இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுவதில்லை என்று நம்புகிறேன்.
நன்றி!
ஃஃஃ