சனி, அக்டோபர் 17, 2009

அறிவியலும் அரையவியலும் - 3

டந்த 9 அக்டோபர் 2009 திண்ணை இதழில் அப்துல் அஸீஸ் எனும் பெயரில் எழுதுபவர், "அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப்பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன [021:033] என்று இவர் குறிப்பிடும் இடத்தில் தெளிவாக தரையும் அப்படியே சூரியனை சுற்றி வருகிறது என்று எழுதியிருக்கிறதா என்று படித்து சொல்ல வேண்டுகிறேன்" என்று திண்ணை ஆசிரியரை (அன்புள்ள ஆசிரியருக்கு) வேண்டியிருந்தார்.
முதல் மடலில், "உலகம்" என்றும் "பூமி" என்றும் எழுதியவர் இப்போது "தரை"க்கு இறங்கி விட்டார். தரை என்பது நீர் உட்பட எதுவுமில்லா நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும். பூமியின் மூன்றில் இரண்டு பங்கைச் சூழ்ந்திருக்கும் கடல், நமது "தரை"க்குத் தொடர்பற்றது போல் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது!

வானில்தான் சூரியனும் சந்திரனும் இருக்கின்றன என்பது, நிலவைக் காட்டி உணவூட்டும் தமிழ்த் தாயின் இடுப்பில் இருக்கின்ற குழந்தைக்கும் தெரிந்ததுதான். என்றாலும் அதைக் குர்ஆனின் சொற்களால் நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் எனக்கு. ஏனெனில், போகிற போக்கைப் பார்த்தால், "வானில்தான் சூரியனும் சந்திரனும் உள்ளது என்று குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கிறதா?" எனக் கட்டுரையாளர் அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டு விடும் வாய்ப்பிருப்பதால்,
"ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கக் கூடாதா? அவற்றில் சந்திரனை வெளிச்சமாகவும் சூரியனை ஒளிவிளக்காகவும் அமைத்தவன் அவனே!" [071:015,016] Allah has created the seven heavens in tiers and has made the moon a light therein, and made the sun a lamp meaning, He made a distinction between them (the sun and moon) in reference to their lighting. He made each one of them in a set manner with a distinct quality so that the night and day may be known. They (the night and day) are known by the rising and setting of the sun. He also determined fixed stations and positions for the moon, and He made its light vary so that sometimes it increases until it reaches a maximum, then it begins to decrease until it is completely veiled. This shows the passing of months and years.
என்று குர்ஆன் தெளிவாகக் கூறுவதை உறுதி செய்வது எனது கடமையானது.

அடுத்து,

"வானில் இருக்கும் சூரியன்-சந்திரனோடு வானுக்குச் சம்பந்தம் இல்லாத பூமியைக் 'கொண்டுபோய்' சேர்த்துச் சொல்வது சரியாகுமா?" என்பது கட்டுரையாளரது முக்கிய ஆட்சேபணையாகும்.
"திண்ணமாக, வானங்கள்-பூமி ஆகிய அவ்விரண்டும் விலகி விடாதவாறு அல்லாஹ்தான் தடுத்து வைத்திருக்கிறான்.  அவை இரண்டும் விலகுமாயின் அவை இரண்டையும் தடுத்து நிறுத்த அவனையன்றி எவராலும் முடியாது ..." [035:041] Verily, Allah grasps the heavens and the earth lest they should move away from their places, and if they were to move away from their places, there is not one that could grasp them after Him.
மேற்காணும் இறைவசனத்தில் அரபு மொழியின் சிறப்பு எண்ணான இருமை تَزُولاَ  ஆளப் பட்டுள்ளது ஈண்டு நோக்கத் தக்கது.

ஏனெனில், எனது முதல் எதிர்வினையில் எடுத்துக் காட்டாகக் குறிக்கப் பட்டதும் கட்டுரையாளரின் மறுப்புக்குரியதுமான, "...அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப்பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" எனும் 021:033 இறைவசனத்தில் சூரியன் - சந்திரன் ஆகிய இரண்டையும் குறிக்க இருமைச்சொல் ஆளப்படவில்லை என்பதும் "ஒவ்வொன்றும்/எல்லாமும்" எனப் பன்மைச் சொல் كُلٌّ பயன் படுத்தப்பட்டுள்ளதும் கட்டுரையாளர் விளங்க வேண்டிய கட்டாயக் கருவாகும்.

அந்த வசனத்தில் ஏன் இருமை ஆளப்படவில்லை? எனும் வினாவுக்கு விடை, அந்த இறைவசனத்தில் இருமைக்கு மேற்பட்டவை இடம் பெறுகின்றன என்பதுதான். அந்த வசனம் முழுமையாக :
"அவன் தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" [021:033] And He it is Who has created the night and the day, and the sun and the moon, each in an orbit floating.
மேற்காணும் இறைவசனத்தில் உள்ள இரவு-பகல் என்பன பூமிக்குச் சொந்தமானவை. இரவு-பகல் மாறி வரும் பூமியும் வானங்களும் பால்வளிப் பயணத்தின் சகபயணிகள் என்பதை இதைவிடத் தெளிவாகச் சொல்லவும் வேண்டுமோ?

கட்டுரையாளரின் கருத்துப்படி சூரியன்-சந்திரன் இரண்டும் பூமியை அம்போ என்று விட்டுவிட்டு நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன எனக் கொண்டால் ... பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூரிய ஒளியின்றி இருளில் மூழ்கி எப்போதோ செத்திருப்போம்.

மேற்காணும் விளக்கங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதல்ல. தலைக்குள் இருப்பதைப் பயன் படுத்தும் எவருக்கும் எளிதாக விளங்கக் கூடியவைதாம் - அதுவும் கட்டுரையாளரின் கூற்றுப்படி, "700 ஆண்டுகளுக்கு முன்னர் சரியாக எழுதி வைத்த இமாம் இபுனு கஸீர்" விளக்குவதால்.

மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).
ஃஃஃ
திண்ணை குறிப்பு:
இந்த விவாதம் இத்துடன் முற்றுப்பெறுகிறது.

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

அறிவியலும் அரையவியலும் - 2

டந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில், "அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல்குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் கட்டுரை ஒன்று அப்துல் அஸீஸ் என்ற பெயரில் வெளியாகி இருந்தது. அதற்கு எதிரிவினையாகக் கடந்த வாரம், "அறிவியலும் அரையவியலும்" எனும் தலைப்பில் அவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தேன்.

கட்டுரையாளர் அப்துல் அஸீஸுடைய பார்வையில் முதல் குற்றவாளியான டாக்டர் மாரிஸ் புகைல் விசாரிக்கப்பட்டுவிட்டதால் இரண்டாவது குற்றவாளியான புவியியல் முனைவர், பேரா. ஸக்லூல் ராகிப் முஹம்மது அல்-நஜ்ஜாரை இந்த வாரம் திண்ணைக் கூண்டில் ஏற்றுவோம்.

"பூமி சுழன்று கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருக்கிறது; அதனால்தான் இரவு-பகல் ஏற்படுகிறது" என்று அல்-நஜ்ஜார் கூறும் "காஃபிர் (!) கருத்தை" விசாரிப்பதற்கு முன்னர் சூரியன், சந்திரன், இரவு, பகல் குறித்து இறைமறை குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்துவிட வேண்டியுள்ளது. ஏனெனில் அது தெரியாவிட்டால் அல்-நஜ்ஜார், தன் விருப்பத்திற்கு ஏற்ப விஞ்ஞானக் கருத்துகளைக் கூறுகிறாரா? அல்லது குர்ஆன் கூறுவதை ஆய்ந்து விளக்குகிறாரா? என்பது நமக்குத் தெளிவாகாது.

சூரியனும் சந்திரனும்
"சூரியன், தனக்கு விதிக்கப் பட்ட காலம்வரை அதற்கென வரையறை செய்யப் பட்ட வழியில் ஓடிக் கொண்டிருக்கிறது ..." And the sun runs on its fixed course for a term (appointed) ....;
"மேலும் உலர்ந்து வளைந்த பழைய ஈச்சைமட்டையைப் போல் மீளும்வரை சந்திரனுக்கு நாம் பல படிநிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்" And the moon, We have decreed for it stages, till it returns like the old dried curved date stalk;
"சூரியன், சந்திரனை எட்ட முடியாது. இரவு, பகலை முந்த முடியாது. அனைத்தும் (வரையறை செய்யப் பட்ட) தம் வழிகளில் நீந்திச் செல்கின்றன" [036:038-040] It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit.
"இரவுவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் அவன்தான் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தம் வரையறை வழிகளில் நீந்திச் செல்கின்றன" [021:033] (and the sun and the moon,) the sun with its own light and its own path and orbit and allotted time, and the moon which shines with a different light and travels on a different path and has its own allotted time.
நமது சூரியக் குடும்பத்தில், இரவு-பகல் மாறிமாறி வரும் பூமி உட்பட அனைத்தும் நீந்திக் கொண்டிருக்கின்றன. அதாவது தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்தையும் சூரியன் இழுத்துக் கொண்டு எங்கோ சென்று கொண்டு இருக்கிறது என்றும் அனைத்துக்கும் விதிக்கப் பட்டுள்ள காலம்வரை இந்த 'இழுவை இயக்கம்' நிற்காது என்றும் விளங்குகிறது. பால்வளிப் பயணம் எனும் இந்த இழுவை இயக்கத்துக்கு உள்ளேயே சூரியன், சந்திரன், பூமி ஆகிய அனைத்தும் தன்னுள் சுழன்று கொண்டும் இன்னொன்றைச் சுற்றிக் கொண்டுமிருப்பதன் அடிப்படையின்தான் நாள், மாதம், ஆண்டுகளை நாம் கணக்கிடுகிறோம். இரவும் பகலும் பிறையும் கிரகணங்களும் சுழற்சி-சுற்றல்களால் ஏற்படுபவையே.

அப்துல் அஸீஸ் என்ற பெயரில் எழுதிய கட்டுரையாளர், "பாம்பு கவ்விக் கொள்வதால் கிரகணம் ஏற்படுகிறது" எனும் பாட்டிக் கதையை இஸ்லாத்தோடு இணைத்து எழுதாதது ஆறுதல் அளிக்கிறது!.

கிரகணம்

நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகன் இபுறாஹீம் எனும் பாலகன் இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. "அல்லாஹ்வின் தூதரின் மகனது இறப்புக்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்கிறது" என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். தன் பாலகனை இழந்திருந்த அந்த வேளையிலும் மக்கள் பேச்சை மறுத்து, அதைத் திருத்தும் விதமாக, "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு சான்றுகளாகும். எவருடைய பிறப்புக்காகவோ இறப்புக்காகவோ அவை ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும்வரை தொழுங்கள்" என்று நபிகள் நாயகம் கூறினார்கள் [புகாரீ 1060].
"இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் அவனுடைய படைப்பாற்றலுக்கான சான்றுகளாகும். எனவே, நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை வணங்குபவர்களாயின் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜூது செய்ய வேண்டாம். அவற்றைப் படைத்தவனான அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்" [041:037] And from among His signs are the night and the day, and the sun and the moon means, He created the night with its darkness and the day with its light, and they alternate without ceasing. And He created the sun with its shining light, and the moon with its reflected light. and He allotted their stages and gave them separate orbits in the heavens, so that by the variations in their movements man may know the stages of night and day, of weeks, months and years, and time periods related to people's rights, acts of worship and various transactions. Moreover, because the sun and moon are the most beautiful of the heavenly bodies that can be seen in both the upper and lower realms, Allah points out that they are created entities which are in a state of enthrallment to Him, subject to His dominion and control. (Do not prostrate yourselves to the sun nor to the moon, but prostrate yourselves to Allah Who created them, if you (really) worship Him.) meaning, `do not associate anything in worship with Him, for your worship of Him will be of no benefit to you if you worship others alongside Him, because He does not forgive the association of others in worship with Him.
இரவும் பகலும்
"திண்ணமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான் ..." [031:029] See you not that Allah merges the night into the day, and merges the day into the night ... "...
அவன்தான் பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான் ..." [039:005] He makes the night to go in the day and makes the day to go in the night.) means, He has subjugated them and He causes them to alternate without ceasing, each seeking the other rapidly. "...
அவன்தான் இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; பகலைக் கொண்டு இரவை மூடுகிறான் ..." [007:054] He brings the night as a cover over the day, seeking it rapidly, meaning, the darkness goes away with the light, and the light goes away with the darkness. Each of them seeks the other rapidly, and does not come late, for when this vanishes, the other comes, and vice versa.
"... சந்திரனின் மீதாணை! பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதாணை! (அதனால்) வெளிச்சம் பெறும் விடிகாலை மீதாணை! ..." [074:032-034] ... And by the moon. And by the night when it withdraws And by the dawn when it brightens).
மேற்காணும் வசனங்களில் உள்ள, "புகுத்துவது", "சுருட்டுவது", "மூடுவது" ஆகிய சொற்கள் ஆழ்ந்து நோக்கத் தக்கன. ஏனெனில் அவைதாம் இரவு-பகல் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைத் தெளிவு படுத்துகின்றன.

பகலாக இருக்கும் இடத்தை இரவு மறைத்தாலே அந்த இடம் இரவாக மாறும். எனவே, பகலாக இருக்கும் இடத்தை இரவாக மாற்றுவதற்காக அப்பகலை இரவு மறைத்தல் வேண்டும்.

கட்டுரையாளரின் கருத்துப்படி, சூரியன் பூமியைச் சுற்றுவது என்றால் அதன் ஒளி முழுமையும் சேர்ந்து பூமியைச் சுற்ற வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகல் நகர்ந்த இடத்தை இரவும் இரவு நகர்ந்த இடத்தைப் பகலும் பிடித்துக் கொள்ளும்.

சூரியன் பூமியைச் சுற்றி வருமானால் பூமியின் மீது விழுந்து நகரும் அதனுடைய ஒளி பூமியின் மீதும் அதற்கு வெளியிலும் நகரும். அவ்வாறு சூரிய ஒளி நகர்ந்தால் அந்த ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். ஒளி நகரும் வேகத்தில் ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். எனவே சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் ஒளியும், இருளும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் நகர்ந்து கொண்டே செல்வதால் அவ்விரண்டும் ஒன்றையொன்று சுருட்டாது.

ஆனால், பகலுக்குள் இரவு புகவேண்டுமென்றால் பகல் நகராமல் இருக்க வேண்டும். அவ்வாறே இரவுக்குள் பகல் புகவேண்டுமெனில் இரவும் நகராமல் இருக்க வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவுக்குள் பகல் புக முடியாது; போலவே, பகலுக்குள் இரவு புக முடியாது.

குர்ஆனுடைய உயர்ந்த விரிவுரை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும்போது, "முதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்" என்று தனது கட்டுரையில் அப்துல் அஸீஸ் என்பார் குறிப்பிட்டிருந்தார்.

அதே அடிப்படையில்தான் பேரா. அல்-நஜ்ஜார் தமது ஆய்வுகளை முன்வைக்கிறார். காட்டாக, இறைவசனம் 017:012இல் "இரவையும் பகலையும் நாம் இரு சான்றுகளாக ஆக்கியிருக்கிறோம்" என்று அல்லாஹ் கூறுவதை, ஆண்டுக் கணக்கில் ஆய்வு செய்ததாகக் கூறுகிறார். அவரது ஆய்வுகள் கட்டுரையாளரின் "உயர்ந்த தஃப்ஸீர்" மதிப்பீட்டுக்கு உரியனவாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையெனில் மறுத்து விடலாம்.
"... எச்சொல்லை யாரிடமிருந்து கேட்பினும் அவற்றில் நற்சொல்லை மட்டும் ஏற்றுப் பின்பற்றுபவர்களைத்தாம் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான் ... அவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" [039:017].
மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).

ஃஃஃ 

திண்ணையில் ... http://www.thinnai.com/?module=displaystory&story_id=80910095&format=html

ஞாயிறு, அக்டோபர் 04, 2009

அறிவியலும் அரையவியலும்

"றிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் தலைப்பில் அப்துல் அஸீஸ் என்ற பெயரில் கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில் ஒரு பதிவு வெளியானதைப் படிக்க நேர்ந்தது.

அறியாமையினாலோ அறிந்துகொண்டோ மிகத் தவறாக அவர் விளங்கிய/விளக்கிய இறைமறை வசனங்களின் உண்மை நிலையை இங்கு விவரிப்பதற்கு முன்னர் ஒரு பழித்துறப்பு (Disclaimer):

புதிதாக ஏதேனும் ஓர் அறிவியல் தகவல்/கண்டுபிடிப்பு வெளியானவுடன் அது நிறுவப்பட்டதா ஆய்வில் உள்ளதா என்பதைக்கூட அறிந்து கொள்ளும் பொறுமையின்றி, அந்தத் தகவல்/கண்டுபிடிப்பு "ஏற்கனவே குர்ஆனில் இன்னின்னவாறு சொல்லப்பட்டு இருக்கிறது" என்று தங்கள் விருப்பப்படி பரப்புரை செய்வதற்குப் படித்த முஸ்லிம்களில் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அவ்வாறு அவசரகோல பரப்புரையைச் செய்து முடித்து விட்டு, இஸ்லாத்துக்குப் பெரிய சேவை செய்து விட்டதாக எண்ணி மகிழும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான் அல்லன் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைமறை குர்ஆன் அருளப் படுவதற்கு ஏறத்தாழ 750 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் அரிஸ்டாட்டில் (கி.மு. 370-286) என்ற அறிவியல் மேதை, புவிமையக் கோட்பாடு (Earth Centre Theory) என்பதாக இரு முடிவுகளை அறிவித்தார். அவையாவன:

(1) நாம் வாழும் பூமி உருண்டையானது.
(2) ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்கும் பூமியை, சூரியன் சுற்றி வருவதால் இரவு-பகல் ஏற்படுகிறது.

பூமியின் வடிவத்தைப் பற்றி, "அது தட்டையாக இருக்கிறது" என்றோ "முட்டையாக இருக்கிறது" என்றோ குர்ஆன் எங்குமே சொல்லவில்லை. ஆனால், "... கடலில் பயணிக்கும் கப்பல்களிலும் ... சிந்தித்துப் பார்ப்போருக்கு சான்றுகள் இருக்கின்றன" [ 002:164] என்று கூறுகிறது.

பூமி எவ்வாறு இருக்கிறது என்று குர்ஆன் கூறுவதைப் பின்னர் பார்ப்போம்.

"பூமி ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது" எனும் அரிஸ்டாட்டிலின் இரண்டாவது முடிவை, "... அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" [021:033] எனக் கூறி, குர்ஆன் முற்றாக மறுத்தது.

குர்ஆனின் மறுப்புக்குப் பத்து நூற்றாண்டுகள் கழித்து, 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய கோப்பர் நிக்கஸ் (Coper Nicus, 1473 – 1543), கெப்லர் (Kepler, 1571 – 1630) ஆகிய இரு அறிவியல் மேதைகள் அரிஸ்டாட்டிலின் புவியியல் கோட்பாட்டின் இரண்டாவது முடிவை மறுத்து, "பூமி நகர்ந்து செல்கிறது" எனக் கூறினர்.

இதன் மூலம் நாம் விளங்க வேண்டியது யாதெனில், அறிவிக்கப்படும் எல்லா அறிவியல் முடிவுகளுக்கும் தோதாக இறைமறை வளையாது. நிரூபிக்கப் பட்ட அறிவியலுக்கு எதிராக எதுவும் இறைமறையில் இருக்காது என்பதே.

***

இனி,

மறுப்பு 1 - அறிவியலை அடிப்படையாகக் கொண்டு இறைமறைக்கு எவரும் விரிவுரை எழுதவில்லை
"அறிவியலை அடிப்படையாகக் கொண்டு இறைமறைக்கு விரிவுரை எழுதுவது ஆபத்து" என்பதாகக் கட்டுரையாளர் கவலை தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் தொடக்கத்தில் சுட்டுவது டாக்டர் மாரிஸ் புகைல் 1976இல் எழுதிய In 'La Bible le Coran et la Science' (அறிவியல் ஒளியில் பைபிளும் குர் ஆனும் -The Bible, the Qur'an and Science) என்ற நூலாகும்.

ஆறாயிரத்திற்கும் அதிகமான வசனங்களைக் கொண்ட இறைமறையில், டாக்டர் மாரிஸ் புகைல் அவரது ஒப்பீட்டு ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே, இறைமறைக்கு இதுவரை யாரும் அறிவியலை அடிப்படையாக வைத்து முழு விரிவுரையையும் எழுதிவிடவில்லை என்பதை இங்கு அழுத்திச் சொல்ல வேண்டியதாகிறது.

ஏனெனில்,

இறைமறை அல்குர்ஆன் என்பது ஒரு புவியியல் நூலன்று; வானியல், கடலியல் இன்ன பிற அறிவியல் நூலுமன்று. பள்ளியிலோ கல்லூரியிலோ மாணவர்களுக்குப் புவியியலையும் வானியலையும் கடலியலையும் இன்னபிற அறிவியல்களையும் கற்றுக் கொடுக்குப்பதற்காக இறைவன் அதை அருளவில்லை. மாறாக, "மனிதர்களுக்கு இது தெளிவான நேர்வழியைக் காட்டும்" [002:185] என்று அறிமுகப் படுத்துகிறான். ஆனால் இறைமறை கூறியிருக்கும் எந்த இயலும் நிரூபிக்கப் பட்ட அறிவியலோடு மோதாது; மாறாக, "சிந்தித்துப் பாருங்கள்" எனக்கூறி மேற்கொண்டு ஆய்வுக்குத் தூண்டும். முற்றாக நிரூபிக்கப் படாத "டார்வின் தியரி" என்ற பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பல்லாண்டு கொண்டாடப்பட்ட காலகட்டம் நெடுகிலும் குர்ஆனின் நிலைபாட்டை வளைத்து, "குரங்கிலிருந்து மனிதன் என்று குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கிறது" என்பதாக எவரும் "அறிவியல் விரிவுரை" எழுதவில்லை. நமது சமகாலத்தில் டார்வின் தத்துவம் பொலபொலத்துப் போனது. "மனிதனைப் பொருத்தவரை படைப்புதான் சரி; பரிணாம வளர்ச்சி என்பது அறிவியலுக்கு ஏற்புடையதன்று" என்பதைத்தான் டாக்டர் மாரிஸ் புகைல் தனது "மனிதனின் மூலம்" எனும் நூலில் விளக்குகிறார்.

மறுப்பு 2 - "பூமி தட்டையாக இருக்கிறது" என்று குர்ஆன் கூறவில்லை
"அரபி மொழியில் தட்டை என்ற பொருளில் எத்தனை வார்த்தைகள் உண்டோ அத்தனை வார்த்தைகளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வசனங்களை இறக்கியுள்ளான்" என்று எழுதி கட்டுரையாளர் தம் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தம் கருத்தை வலியுறுத்த அவர் மேற்கோள் காட்டும் அரபுச் சொற்கள்: (1)ஃபிராஷா, (2)மத்த, (3)மதத்னாஹா, (4)மஹ்தன், (5)தஹாஹா, (6)ஸுடிட், (7)மிஹாதா, (8)பிஸாடா, (9)ஃபரஷ்னாஹா ஆகியன.

மேற்கண்ட 9 சொற்களிலும் 1ம் 9ம் ஒரே சொல்லோடு இணைந்த உரியும் வினையுமாகும்; 2ம் 3ம் படர்க்கையும் தன்னிலையும் இணைந்த சொற்களாகும்; 4ம் 7ம் ஒரே சொல்லின் இருவகை உரிகளாகும்; 6இலும் 8இலும் கட்டுரையாளர் பயன் படுத்தியிருக்கும் 'ட'கரங்கள் அரபு மொழியிலேயே இல்லாதவையாகும்.
கட்டுரையாளர் எழுதிய சொற்களுக்கு அகராதிப் பொருள்கள்:

ஃபிராஷ் : படுக்கை.
மஹ்து : தொட்டில்.
மத்த/மதத் : விரிவு.
பிஸாத் : தரை விரிப்பு.
ஸுத்திஹத் : பரந்துபட்ட.

மேற்காணும் அகராதிச் சொற்களில்கூட "தட்டை" என்று தமிழாக்கக் கூடிய எச்சொல்லும் இல்லை.

புகழ் பெற்ற இறைமறை விரிவுரையாளர் இமாம் இபுனு கஸீர் 700 ஆண்டுகளுக்கு முன்னர் "சரியாக" எழுதி வைத்த விரிவுரையைப் படித்திருப்பதாகப் புகழ்ந்துரைக்கும் கட்டுரையாளரின் பார்வைக்கு இமாம் இபுனு கஸீரின் சொல் விளக்கங்கள் ஆங்கிலத்தில் (மூலமொழியில் வேண்டுமெனக் கேட்டாலும் தருவேன்):
ஃபிராஷ் : "Who has made the earth a resting place for you, and the sky as a canopy, and sent down water (rain) from the sky and brought forth therewith fruits as a provision for you. ... ".

"And We have made the earth a Firash, meaning, We have made it a resting place for the created".

மஹ்து : "Who has made earth for you like a bed; and has opened ways for you therein, and has sent down water (rain) from the sky ...".

"Mahdan, which means a place of rest that you settle down upon. It also may mean that which you stand upon, sleep upon or travel upon its back".

"Who has made for you the earth like a bed, means, smooth, stable and firm, so that you can travel about in it, and stand on it and sleep and walk about, even though it is created above water, but He has strengthened it with the mountains, lest it should shake" 043:010.

"Have We not made the earth as a bed, meaning, an established, firm and peaceful resting place, that is subservient to them" 078:006.

மத்த : "And it is He Who spread out the earth, and placed therein firm mountains and rivers and of every kind of fruit He made Zawjayn Ithnayn (two in pairs). He brings the night as a cover over the day. Verily, in these things, there are Ayat (signs) for people who reflect" 013:003.

"And We have spread out the earth, and have placed firm mountains in it, and caused all kinds of things to grow in it, in due proportion" 015:019.

"And the earth! We have spread it out, means, We made it spacious and spread it out" 050:007.

தஹாஹா : "By the earth and Ma Tahaha, Mujahid said, Tahaha means He spread it out''.

"And after that He spread the earth, He explains this statement by the statement that follows it" 079:030.

பிஸாத் : "And Allah has made for you the earth a wide expanse meaning, He spread it out, leveled it, settled it, and stabilized it with firm and lofty mountains" 071:019.

ஸுத்திஹத் : "And at the earth, how it is outspread meaning, how it has been spread out, extended and made smooth ..." 088:020.

மேற்காணும் ஏதேனும் ஒரு வசன விளக்கமாவது "பூமி, தட்டை" என்று சொல்கிறதா?

"பூமி தட்டை வடிவத்தில் இருக்கிறது என்று குர்ஆன் சொல்கிறது" என ஏதோ ஓர் உள்நோக்கத்தோடு கூற முயல்வதாகத்தான் கட்டுரையாளரைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில், கட்டுரையாளர் இணையத்தில் கட்டுரை எழுதும் அளவுக்குப் படித்தவராக இருக்கிறார்.

அவர் பள்ளியில் படித்த காலத்தில், "கடலில் இருந்து கரையை நோக்கி வரும் கப்பலின் பாய் மரத்தின் நுனி முதலாவதாக நம் கண்களுக்குத் தெரிவதும் கரையிலிருந்து கப்பல் [ 002:164] புறப்பட்டுச் செல்லும்போது முதலாவதாக அதன் அடித்தளமும் இறுதியாகப் பாய்மரமும் மறைவதும் ஏன்?" என்ற கேள்விக்கு பதிலைத் தெரிந்து சரியாகத்தான் எழுதியிருப்பார்.

"சூரிய-சந்திர கிரகணங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன?" என்ற கேள்விக்கும் பதில் எழுதி இருப்பார். "முதல் பிறை வளைவாகப் பிறப்பதேன்?" என்றும் "ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எப்படிக் கணக்கிடப் படுகிறது?" என்றுங்கூட தெரியாத அறிவிலியாகக் கட்டுரையாளரை நினைக்க முடியவில்லை.

பிற மறுப்புகள் பின்னர் (இன்ஷா அல்லாஹ்).

ஃஃஃ