புதன், பிப்ரவரி 01, 2006

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2

வகாபிசமும் நவீன முதலாளியமும் என்ற தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை-2
இஸ்லாமிய அடித்தள (அறிவுகூட கற்பிக்கப் படாத பாமர) மக்கள் முன்வைக்கும் பாரம்பரிய (பிறமத) மரபுகள், (மூட)நம்பிக்கைகள், (போலிச்)சம்பிரதாயங்கள் மீதான தீவிரமான அறிவுவாத விமர்சனங்களை வகாபிசம் முன்வைக்கிறது. பகுத்தறிவின் (அடிப்படையான இறை)விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லை(?) வரை சென்று தர்க்க ரீதியாக நிலைநிறுத்த முயல்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய கூறான அறிவுவாதம் மேற்குலகில் மதவிலக்கக் கூறுகளை கொண்டதாக இயங்கியது. அரபு மற்றும் ஆசிய சூழலில் இது அடித்தள மக்கள் சார்ந்த இஸ்லாத்தின் (பாற்படாத) விளிம்பு நிலை மரபுகளை விலக்க முனைந்தது. மைய நீரோட்ட ஏகத்துவத்தின் மீது மட்டும் தனது பகுத்தறிவு பார்வையை(ப்) பயன்படுத்த(த்) தடைவிதித்தது. எனவேதான் அடித்தள மக்களின் (இஸ்லாத்திற்குத் தொடர்பில்லாத) சிறுமரபுகளின் மீது எதிர்ப்பும், (இஸ்லாத்தின் அடிப்படையான இறைமறை மற்றும் நபிவழிப்) பெருமரபு மீது பரிபூரண நம்பிக்கையும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது.
(")விஞ்ஞானங்களின் தாயாக(த்) திருக்குர்ஆன் வாழ்கிறது. இஸ்லாத்தைவிட அறிவு சார்ந்த மார்க்கம் வேறில்லை" என்பதான பிரச்சாரங்களினூடே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பதே "அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளுதலே ஆகும்" என்பதாகச் சொல்லி அறிவின் இடத்தை நம்பிக்கையால் நிரப்பியது.
அடைப்புக் குறிகள் தவிர்த்த மேற்காணும் கருத்துகள், ஹெச். ஜி. ரஸூலுக்குச் சொந்தமானவை. அடைப்புப் குறிக்குள் உள்ளவை என்னுடையவை.

'அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளும் ஒரு நம்பிக்கையாளன் அறிவாளியாக இருக்க முடியாது அல்லது தன்னை அறிவாளி என்று சொல்லிக் கொள்பவன், மேற்காணும் நம்பிக்கை கொள்ளக் கூடாது' என்பதுதான் கட்டுரையாளர் கூற முனையும் கருத்தாக இருக்க முடியும்.

கட்டுரையாளரின் கற்பனையில் உதித்த போலிஅறிவாளியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.

- தொடரும்

1 கருத்து:

muslimeen சொன்னது…

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நாட்டு மரபுகளை இஸ்லாம் உட்க்கொண்டது என்றால் அன்றைய குறைஷிகளின் பல தெய்வ வழிபாட்டை ஏன் ஒழித்தது?நிர்வாணமாக காபாவை ஹஜ்ஜின்போது வலம் வருவதை ஏன் தடைச்செய்தது?பெண் சிசுக்கொலையையும் பல்வேறு வகையான கீழ்த்தரமான திருமண முறைகளையும் ஏன் தடைச்செய்தது?தமிழ் இலக்கியத்தில் சிலவற்றை படித்துவிட்டு தன்னை மேதையாக நினைத்து எழுதிவரும் ஹெ.ஜி.ரசூலை முஸ்லிம் தமிழ் சமூகம் புறக்கணிக்கவேண்டும்.இவரின் நயவஞ்சக தனத்தை புரிந்துக்கொள்ளாத சில முஸ்லீம் வெளிநாட்டு அமைப்புகள் இவரை பெரிய மனிதராக்கி விடுகின்றன.