இஃது ஒரு கவிஞனின் சொல்லன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே நம்புகின்றீர்கள். (இஃது) ஒரு குறிகாரரின் சொல்லுமன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே அறிவுரை பெறுகின்றீர்கள். (இஃது) அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டது. ஒரு சொல்லையேனும் (நபியாகிய) அவர் எம் மீது கற்பிதமாய்க் கூறினால், அவரை வலக்கரப்பிடியாகப் பிடித்து அவருடைய உயிர்நாடியைத் துண்டித்து விடுவோம் [069:041-046].என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். இந்த எச்சரிக்கை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயிலாக நம் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையேயாகும். இந்த அளவுக்குக் கடுமையான கண்டனத்தையும் தண்டனையையும் இறைவன் பிரகடனப்படுத்திய பின்னரும் இதையெல்லாம் பொய்யாக்கிப் புறந்தள்ளிவிட்டு, தம் மனம்போன போக்கில் செயல்படுபவர்களையும் நாம் காணுகின்றோம். இதையும், "உங்களில் இதைப் பொய்யெனக் கொள்பவர் உள்ளனர் என்பதைத் திண்ணமாக நாமறிவோம்" என்பதாக [069:049] இறைவன் முன்னறிவிப்புச் செய்துள்ளான். இவை மட்டுமின்றி, அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பதனை மிக வன்மையாகக் கண்டிக்கக்கூடிய ஏராளமான இறைவசனங்கள் இறைமறையில் மேலும் இடம் பெற்றுள்ளன: [003:024, 003:094, 004:048, 004:050, 005:101, 006:093, 006:138, 006:140, 006:144, 007:037, 007:152, 010:017, 010:039, 010:060, 011:018, 011:035, 016:056, 016:087, 016:105, 016:116, 017:073, 018:015, 020:061, 029:013, 029:068, 034:008, 046:008, 061:007]. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பவர்கள் அநியாயக்காரர்கள், வழிகேடர்கள், சாபத்திற்குரியவர்கள், நரகவாசிகள், பாவிகள் என்றெல்லாம் இவ்வசனங்களில் கடுமையாகக் கண்டித்துள்ளான் இறைவன். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.
சனி, ஜூலை 22, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 3
இறைவன் சொல்லாத ஒன்றை, அவன் மீது இட்டுக்கட்டிக் கற்பனை செய்து பொய்யுரைப்பது மாபெரும் பாவச் செயலாகும். இவ்வாறு எவர் பொய்யுரைக்கத் துணிகிறாரோ அவருக்கு இறைவன் மாபெரும் தண்டனையை வழங்கியே தீருவான் என்று இறைமறை வன்மையாக எச்சரித்துக் கூறுகின்றது.
இறைவனுடைய படைப்புகளிலெல்லாம் அவனுக்கு மிகவும் நேசத்துக்குரிய படைப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகழுகின்றார்கள். இறைவன் மீது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி மிகைப்படுத்திக் கூறுதலாகிய வெறுக்கத்தக்கச் செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிஞ்சிற்றும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். அப்படியிருந்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக