"எந்தவொரு விஷயம் குறித்தும் ஒருவரிடம் விசாரித்து விவரங்களைப் பொது நலன் கருதி மக்களுக்குத் தெரிவிக்கும் கடமையும் உரிமையும் ஊடகத்தாருக்கு உண்டு"என்ற அறிவுரையை எழுதியவரே மலர் மன்னன்தான். போகட்டும். சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாகச் சென்று, கேட்டு முடிவு செய்ய முடியாத நிலை மலர் மன்னனுக்கு இருக்கக் கூடும். அவருக்கு மட்டுமின்றி, திண்ணை வாசகர்களுக்காகவும் கென்னெத் வில்ஸனின் 'The Columbia Guide to Standard American English' அகராதியின் MUHAMMADAN பகுதி:
MUSLIM, MOHAMMEDAN, MOSLEM, MUHAMMADAN (adjs., nn.) A Muslim (variously pronounced, but most commonly MUHZ-luhm, MUHZ-lim, or MUZ-lim) is an adherent of Islam. Moslem (MAHZ-luhm or MAHS-luhm) is a variant of Muslim. Muhammadan and Mohammedan are based on the name of the prophet Mohammed, and both are considered offensive. Muslim, as both noun and adjective, seems to be the most acceptable to all concerned.முகமதியர்/முகமதியம் ஆகிய இரு சொற்களும் முஸ்லிம்களைக் காயப் படுத்துவதற்காக ஆளப்படும் (both are considered offensive) சொற்கள் என்பதுதான் உண்மை. இதற்குப் பின்னரும் முஸ்லிம்களைக் 'காயப் படுத்துதல்' தொடர்வதையோ முடிவுற்றதையோ மலர் மன்னனின் எதிர்கால எழுத்துகளால் வாசகர்கள் இனங் கண்டு கொள்வார்கள். ***
"நான் பழகியவரை வட மாநிலங்களில் முகமதியர் என்றோ முகமதியம் என்றோ குறிப்பிடுவதை எவரும் ஆட்சேபிப்பதில்லை. ஹிந்தி என இக்பால் குறிப்பிட்டது ஹிந்துஸ்தானத்தவர் நாம் என்பதாக என்கிற விஷயத்தைத்தான் நினைவூட்டினேன். அன்பர் வஹ்ஹாபி சவூதிக்குப் போனால் அவரை ஹிந்தி என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்தியன் என்றல்ல!"என்று மலர் மன்னன் தன் கடிதத்தை முடிக்கிறார். இறுதிச் சொற்றொடரில் அவர் குறிப்பிடும் ' ஹிந்தி' பற்றி நான் விசாரித்து அறிந்து கொண்டவை யாவையெனில், ஒருவேளை நானும் மலர் மன்னனும் சவூதிக்குப் போனால் எனது தேசியத்தைக் குறிக்கும்போது هندي என்று அரபியிலும் Indian என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். இஸ்லாமியச் சமயச் சார்பினால் என்னை مسلم என்று அரபியிலும் Muslim என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். மலர் மன்னனாயிருப்பின், தேசியத்தைக் குறிக்கும்போது هندي என்று அரபியிலும் Indian என்று ஆங்கிலத்திலும் சமயம் என்பதில் هندوسي என்று அரபியிலும் Hindu என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். மலர் மன்னனுக்கும் திண்ணை வாசகர்கள் பலருக்கும் சவூதியில் வாழும் நண்பர்கள் இருக்கலாம். விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்க! அப்படியே, காந்திஜி வடநாட்டுக்காரர்தானா? என்று உள்ளூரிலும் விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய புதுக் கட்டாயமும் நமக்கு இப்போது ஏற்பட்டு விட்டது! ஏனெனில், (1) முஸ்லிம்களைத் தனது பேச்சிலும் எழுத்திலும் Muslims, முஸல்மான் என்று முறையே ஆங்கிலத்திலும் ஹிந்தி மொழியிலும் குறிப்பிட்ட காந்திஜி, வடநாட்டுக்காரார் அல்லர். (2) "முஸ்லிம்களை வேண்டுமென்றேதான் முகமதியர் என்று எழுதுகிறேன்" என்று கூறுவதற்குச் சொல்லாண்மை இல்லாத மலர் மன்னன், வடநாட்டுக் கதையளக்கிறார். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அந்த ஒன்று எதுவெனத் திண்னை வாசகர்கள்தாம் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
ஃஃஃ
சுட்டிகள்:
1 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801177&format=html
2 - http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/
3 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&format=html
4 - http://www.bartleby.com/68/87/3987.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக