சனி, பிப்ரவரி 09, 2008

கதை சொல்லும் வேளை ... 1

சென்ற வாரத் திண்ணையில் நேச குமார் எழுதியதைப் படிக்க நேர்ந்தது. இப்படி எடுத்தவுடன் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுவதற்கு, முன்/பின்/இடை/கடை/முற்போக்கு/பிற்போக்கு/இடைப்போக்கு/கடைப்போக்கு நவீனத்துவங்கள் இன்றுவரை எனக்குப் பிடிபடாதது காரணமாக இருக்கக் கூடும். என்றாலும், என் பாட்டனார் பர்மாவுக்குச் சென்று பொருளீட்டினார் என்பதையும் என் மாமன் மலேயாவுக்குச் சென்று, திரும்பி வராமல் அங்கேயே மரணித்தார் என்பதையும் நான்கு பக்கக் கதையாகச் சொல்வதில் வாசகர்களுக்கு எந்த ஒரு நவீனத்துவப் பயனும் விளையப் போவதில்லை என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், என் மாமன் தம் அன்னைக்கு இரு திண்ணைகள் வைத்த வீடு வாங்கிக் கொடுத்தார் என்பதில் 'திண்ணை' இருக்கிறது. எனவே, அந்தப் பழங்கதையை ஒரு வரியோடு நிறுத்திக் கொண்டு, வாசகர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிற, சுவை நிறைந்த புதுக்கதை ஒன்று சொல்லப் போகிறேன்:

ஓர் ஊரிலே கிச்சா,கிச்சா என்றொரு ஸைபர் ப்ரம்மா இருந்தாராம். அவர், நேச குமாரைத் தன் வீட்டிற்கு வரவழைத்து, நேரடியாகப் பார்த்து ஒரு நேர்காணல் நடத்தினாராம். இருவரும் இஸ்லாத்தைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டார்களாம் - அதாவது நாகூரைப் பற்றி. இரண்டு விஷயங்கள் முக்கியமானதாம். ஒன்றாவது நாகூர் ரூமியாம்; இரண்டாவது நாகூர் தர்ஹாவாம். மூன்றாவது தனி. அது சங்கராச்சாரியார் சம்பந்தப் பட்டதாம். எல்லாவற்றையும் அப்படியே தொகுத்து 'நேசகுமாருடன் ஒரு நேர்காணல்' என்று தலைப்பிட்டுத் தன்னுடைய தளமான, 'பெட்டிக்கடை'யில் கடந்த 25.05.2005ஆம் தேதி காலை 07:53க்குக் கிச்சா பதிவாகப் போட்டாராம். அதன் ஒரிஜினல் சுட்டி http://kichu.cyberbrahma.com/?p=61 என்பதாம் (ஆவலோடு இந்தச் சுட்டியைச் சொடுக்கினீர்களெனில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. எங்குக் கிடைக்கும் என்பதை அடுத்தப் பகுதியில் சொல்வேன்).

அந்த 'நேர்காணல்' வெளியாகி இரண்டாண்டுகள் கழித்து வலையுலகில் 'ஆபரேஷன் சல்மா அயூப்' என்ற சுனாமி ஏற்பட்டதாம். அதாவது, ஒரு முஸ்லிம் பெண்ணின் பெயரில் ஒளிந்து கொண்டு காமக் கதைகளை ஒருவர் எழுதிக் குவித்தாராம். கையும் களவுமாக அவர் பிடிபட்டவுடன் நம்ம கதையின் நாயகர் கிச்சா, "நேசகுமாரை நான் பார்த்ததே இல்லை" என்று சூடம் கொளுத்திச் சத்தியம் செய்து விட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'நேர்காணல்' பதிவையும் அழித்து விட்டாராம்.

ஏன்? ஏன்? ஏன்?
சல்மா அயூப் என்ற பெயரில் எழுதியவருக்கும் கிச்சாவுக்கும் என்ன தொடர்பு?
' ஆபரேஷன் சல்மா அயூபு'க்கும் 'நேர்காணல்' அழிப்பிற்கும் என்ன தொடர்பு?
அழிக்கப் பட்ட அந்த 'நேர்காணல்' கிடைக்குமா?
எங்குக் கிடைக்கும்?
விபரங்கள் அடுத்த வாரம்.

அதுவரைக்கும்,
1. பார்ப்பனரை எவ்வாறு குறிக்க வேண்டும்? (எதிர்கால பயன்பாட்டுக்காக).
2. சங்கர மடத்து ஆச்சாரியாரை எவ்வாறு குறிக்க வேண்டும்? (சங்கராச்சாரியார் என்று எனது திண்ணப் பதிவில் குறித்தேன்).

ஆகிய இரண்டு விளக்கங்களைத் தெரிந்தவர்கள் யாராவது தெரியப் படுத்துவீர்களாயின் நன்றியோடு ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், ஏற்றுக் கொள்வதற்கும் திருத்தி எழுதுவதற்கும் எனக்குச் சொல்லாண்மையும் எழுத்து நேர்மையும் இருக்கின்றன. அடுத்து, "பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதன குட்டை" என்ற சொற்களை நான் பயன் படுத்தி இருப்பதாக வழக்கம்போல் நேச குமார் உளறி இருக்கிறார். அவருடைய மனநிலை குறித்து எனக்கிருக்கும் பரிதாபம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காகத் திண்ணையில் நான் அவ்வாறெல்லாம் 'தகாத' சொற்களைப் பயன் படுத்தி இருப்பதாகக் குற்றச்சாட்டை வைத்திருக்கும் நேச குமாருக்கு எதிர்க் கேள்வி வைக்கவில்லை எனில் நான் குற்றவாளி ஆகிப் போவன். எனவே, ஒருவார காலத்தைப் பயன் படுத்திக் கொண்டு, நேச குமார் தன் குற்றச்சாட்டை நிரூபித்தே ஆகவேண்டும். அப்படியே திருத்தப் பட்ட குர்ஆன் பிரதிகள் கிடைத்த சவூதிப் பள்ளியைப் பற்றியும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கவும். அதை விசாரித்து உறுதி செய்யும் பொறுப்பையும் சவூதி நண்பருடைய தலையில் போட்டு விட எனக்கு ஏதுவாகும்.

(தொடரும்)
ஃஃஃ

முகமதியம்/முகமதியன்

இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, 'கோட்ஸேக்குத் துப்பாக்கி ஏற்பாடு செய்ததே காந்திஜிதான்' என்ற தகவல் கட்டுரை வடிவில் வந்தாலும் வியப்படைந்து விடக்கூடாது. ஏனெனில் அண்மைக் காலமாக காந்திஜியின் வரலாறு அவ்வாறு மாற்றம் பெற்று வருகின்றது.

நிற்க.

முகமதியம்/முகமதியன் விவகாரத்தில் கடைசிச் சாட்சியான காந்திஜியும் கைவிட்டு விட்டச் சூழ்நிலையில், ஆங்கிலேயனிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார் மலர் மன்னன். நம் நாட்டின் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் 'Mohammedan Law' என்ற பெயரில் இருக்கிறதாம். அதனால், "முஸ்லிம்கள் எனப்படுவோருக்குச் சட்டப்படியான பெயர் முகமதியர்தாம்" என்று மலர் மன்னன் நிறுவ முயற்சி செய்திருக்கிறார். செய்த முயற்சியை முழுமையாகச் செய்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும். ஒரு காலத்தில், அதாவது நாட்டு விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கான உரிமைச் சட்டங்கள் 'Anglo-Mohammedan Law' என்ற முழுப் பெயருக்குள் அடங்கி இருந்தன:
Fyzee pointed out that Muslim Personal Law, known earlier as Anglo-Mohammedan law, was itself a product of the inter-action between Islamic jurisprudence and the British colonial legal system, and was, therefore, not equivalent to the shari'ah. In preparing the principles of Anglo-Mohammedan law, colonial jurists drew heavily on British notions of justice, thus modifying traditional jurisprudence in several respects.".
பின்னர், 'Anglo' என்ற சொல் அகற்றப் பட்டு அது 'Mohammedan Law' என்ற பெயரில் சுருங்கியது. அதற்குப் பின்னர் 'Muslim Personal Law' என்றே தற்போது அது அறியப் படுகின்றது. 'Mohammedan' என்பது இந்திய முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயன் வைத்த பெயர் என்ற ஒரு காரணமே போதும், அதை மாற்றியே ஆக வேண்டும் என்பதற்கு. அவன் யார் எங்களுக்குப் பெயர் வைக்க?. இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சட்ட அமைப்பின் பெயர் All India Muslim Personal Law Board (AIMPLB) but not 'Mohammedan Law Board'. இன்னும் இங்குஆங்கிலேய ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு எழுதும் மலர் மன்னனின் வரலாற்று அறிவைப் பற்றி நான் ஏதும் சொல்லிவிடக் கூடாது. "ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான்" கனவில் என்னை சவூதிக்கு அனுப்பி வைக்க முயன்ற மலர் மன்னனுக்கு அங்கு நான் எவ்வாறு அறியப் படுவேன் என்பதை விசாரித்து, அவருடைய கூற்றைத் தவறென நிறுவி இருந்தேன். ஒன்று, தாம் கூறியதே சரியானது என்பதைச் சான்றுகளோடு நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், நான் விசாரித்தறிந்த தகவல் பொய்யானது என்றாவது சொல்ல வேண்டும். இங்கும் இரண்டில் ஒன்றுதான். இவ்விரண்டையும் விடுத்து இசைக் கலைஞர்கள் சிலரின் பெயரைப் பட்டியலிட்டிருப்பதை எதில் சேர்ப்பது? எல்லா முஸ்லிம்களின் பெற்றோரும் முஸ்லிம்களல்லர்; அவ்வாறு இருந்திருப்பின் உலகின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் வளர்ந்திருக்காது. அவ்வாறே முஸ்லிம் குடும்பத்தில், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லாருமே உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதும் தரம் தாழ்வதும் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதைப் பொறுத்திருக்கிறது.
ஆதியந்தம் கடந்த உமையாள் தன் பாதம் அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம் சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம் தொழுதிறைஞ்சிக் கரம் குவித்துப் போற்றி செய்து ...
பாடிய (தாயுமானவரின் தத்துப் பிள்ளையான) குணங்குடியை முழுமையான இந்துவாகவே மலர் மன்னன் வரித்துக் கொள்ளலாம்; எதிர்ப் பேச்சே இல்லை. இறுதியாக, மலர் மன்னன் கேட்டிருந்த ஃபத்வா விஷயத்துக்கு வரலாம். வன்முறையும் பயங்கரவாதமும் மதங்களற்றவை. அவற்றை யார் செய்தாலும் குற்றமே. "அநியாயமாக ஒரு மனிதனைக் கொல்பவன் உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் கொலை செய்தவனுக்கு ஒப்பாவான்" என்று எங்கள் இறைமறை கூறுகிறது:
"திண்ணமாக, ஒரு கொலைக்குப் பதிலாகவோ உலகில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, ஒருவனைக் கொலை செய்கிற இன்னொருவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் உலக மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம் -அல் குர்ஆன் [005:032].
("முகமதியக் கடவுளான அல்லாஹ், யூதர்களான இஸ்ரவேலர்களுக்கு விதிப்பதெப்படி?" என்று மலர் மன்னன் சிந்திக்காமலா போவார்?) இனி, திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமியின் கருத்து:
இஸ்லாம் அமைதியான மார்க்கம்தான். ஆனால் நீங்கள் அடித்தால் நாங்கள் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று அதற்குப் பொருளல்ல. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொன்ன இயேசுகூட ஒரு கட்டத்தில் கோயிலின் புனிதத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்து விரட்டியதாக புனித பைபிள் கூறுகிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொன்றால் சாதாரணமாக அது கொலை என்று சொல்லப்படுகிறது. அதையே போர்க்களத்தில் ஒரு ராணுவ வீரன் செய்தால் அது நாட்டுப் பற்று என்றும் தியாகம் என்றும் பாராட்டப்படுகிறது. போலீஸ் 'என்கௌண்ட'ரில் ஒரு தாதா சுட்டுக் கொல்லப்பட்டால் அதையும் சட்டம் கொலை என்று சொல்வதில்லை. தூக்கு தண்டனை கொடுப்பதை கொலை என்று சட்டம் சொல்வதில்லை. ஆனால் இந்த எல்லா உதாரணங்களிலுமே போவது மனித உயிர்கள்தான்.
செயல் நடக்கும் இடத்தைப் (context) பொறுத்து வரையறைகள், இலக்கணங்கள், அளவுகோல்கள் மாறும். மாற வேண்டும். அதுதான் அறிவுடைமை. நீதிமன்றங்களும், தண்டனைகளும், காவல் நிலையங்களும், சட்டங்களும் இருப்பது இதற்காகத்தான். நீங்கள் என்னை என் வீட்டில் வந்து அடிக்க வந்தீர்களென்றால் உங்களைத் திருப்பி அடிக்கும் உரிமையோ அல்லது குறைந்த பட்சமாக என்னை உங்கள் வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமையோ எனக்கு இருக்கிறது. அமைதி மார்க்கம் என்று சொல்லி கோழையாக இருந்து உயிரை விட அங்கே அனுமதி இல்லை.
இஸ்லாமிய ஃபத்வா என்பது என்ன என்பதை, 'பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்' என்ற எனது திண்ணைக் கட்டுரையில் விளக்கி இருந்தேன்; நேரமிருப்பின் பார்வையிடலாம். நன்றி!.
ஃஃஃ
சுட்டிகள்: 1- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801315&format=html 2 - http://www.milligazette.com/Archives/2004/16-31Aug04-Print-Edition/163108200454.htm 3 - http://nrcw.nic.in/shared/sublinkimages/60.htm 4 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610062&format=html 5 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html