சென்ற வாரத் திண்ணையில் நேச குமார் எழுதியதைப் படிக்க நேர்ந்தது.
இப்படி எடுத்தவுடன் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுவதற்கு, முன்/பின்/இடை/கடை/முற்போக்கு/பிற்போக்கு/இடைப்போக்கு/கடைப்போக்கு நவீனத்துவங்கள் இன்றுவரை எனக்குப் பிடிபடாதது காரணமாக இருக்கக் கூடும்.
என்றாலும், என் பாட்டனார் பர்மாவுக்குச் சென்று பொருளீட்டினார் என்பதையும் என் மாமன் மலேயாவுக்குச் சென்று, திரும்பி வராமல் அங்கேயே மரணித்தார் என்பதையும் நான்கு பக்கக் கதையாகச் சொல்வதில் வாசகர்களுக்கு எந்த ஒரு நவீனத்துவப் பயனும் விளையப் போவதில்லை என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஆனால், என் மாமன் தம் அன்னைக்கு இரு திண்ணைகள் வைத்த வீடு வாங்கிக் கொடுத்தார் என்பதில் 'திண்ணை' இருக்கிறது. எனவே, அந்தப் பழங்கதையை ஒரு வரியோடு நிறுத்திக் கொண்டு, வாசகர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிற, சுவை நிறைந்த புதுக்கதை ஒன்று சொல்லப் போகிறேன்:
ஓர் ஊரிலே கிச்சா,கிச்சா என்றொரு ஸைபர் ப்ரம்மா இருந்தாராம். அவர், நேச குமாரைத் தன் வீட்டிற்கு வரவழைத்து, நேரடியாகப் பார்த்து ஒரு நேர்காணல் நடத்தினாராம். இருவரும் இஸ்லாத்தைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டார்களாம் - அதாவது நாகூரைப் பற்றி. இரண்டு விஷயங்கள் முக்கியமானதாம். ஒன்றாவது நாகூர் ரூமியாம்; இரண்டாவது நாகூர் தர்ஹாவாம். மூன்றாவது தனி. அது சங்கராச்சாரியார் சம்பந்தப் பட்டதாம். எல்லாவற்றையும் அப்படியே தொகுத்து 'நேசகுமாருடன் ஒரு நேர்காணல்' என்று தலைப்பிட்டுத் தன்னுடைய தளமான, 'பெட்டிக்கடை'யில் கடந்த 25.05.2005ஆம் தேதி காலை 07:53க்குக் கிச்சா பதிவாகப் போட்டாராம். அதன் ஒரிஜினல் சுட்டி http://kichu.cyberbrahma.com/?p=61 என்பதாம் (ஆவலோடு இந்தச் சுட்டியைச் சொடுக்கினீர்களெனில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. எங்குக் கிடைக்கும் என்பதை அடுத்தப் பகுதியில் சொல்வேன்).
அந்த 'நேர்காணல்' வெளியாகி இரண்டாண்டுகள் கழித்து வலையுலகில் 'ஆபரேஷன் சல்மா அயூப்' என்ற சுனாமி ஏற்பட்டதாம். அதாவது, ஒரு முஸ்லிம் பெண்ணின் பெயரில் ஒளிந்து கொண்டு காமக் கதைகளை ஒருவர் எழுதிக் குவித்தாராம். கையும் களவுமாக அவர் பிடிபட்டவுடன் நம்ம கதையின் நாயகர் கிச்சா, "நேசகுமாரை நான் பார்த்ததே இல்லை" என்று சூடம் கொளுத்திச் சத்தியம் செய்து விட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'நேர்காணல்' பதிவையும் அழித்து விட்டாராம்.
ஏன்? ஏன்? ஏன்?
சல்மா அயூப் என்ற பெயரில் எழுதியவருக்கும் கிச்சாவுக்கும் என்ன தொடர்பு?
' ஆபரேஷன் சல்மா அயூபு'க்கும் 'நேர்காணல்' அழிப்பிற்கும் என்ன தொடர்பு?
அழிக்கப் பட்ட அந்த 'நேர்காணல்' கிடைக்குமா?
எங்குக் கிடைக்கும்?
விபரங்கள் அடுத்த வாரம்.
அதுவரைக்கும்,
1. பார்ப்பனரை எவ்வாறு குறிக்க வேண்டும்? (எதிர்கால பயன்பாட்டுக்காக).
2. சங்கர மடத்து ஆச்சாரியாரை எவ்வாறு குறிக்க வேண்டும்? (சங்கராச்சாரியார் என்று எனது திண்ணப் பதிவில் குறித்தேன்).
ஆகிய இரண்டு விளக்கங்களைத் தெரிந்தவர்கள் யாராவது தெரியப் படுத்துவீர்களாயின் நன்றியோடு ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், ஏற்றுக் கொள்வதற்கும் திருத்தி எழுதுவதற்கும் எனக்குச் சொல்லாண்மையும் எழுத்து நேர்மையும் இருக்கின்றன. அடுத்து, "பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதன குட்டை" என்ற சொற்களை நான் பயன் படுத்தி இருப்பதாக வழக்கம்போல் நேச குமார் உளறி இருக்கிறார். அவருடைய மனநிலை குறித்து எனக்கிருக்கும் பரிதாபம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காகத் திண்ணையில் நான் அவ்வாறெல்லாம் 'தகாத' சொற்களைப் பயன் படுத்தி இருப்பதாகக் குற்றச்சாட்டை வைத்திருக்கும் நேச குமாருக்கு எதிர்க் கேள்வி வைக்கவில்லை எனில் நான் குற்றவாளி ஆகிப் போவன். எனவே, ஒருவார காலத்தைப் பயன் படுத்திக் கொண்டு, நேச குமார் தன் குற்றச்சாட்டை நிரூபித்தே ஆகவேண்டும். அப்படியே திருத்தப் பட்ட குர்ஆன் பிரதிகள் கிடைத்த சவூதிப் பள்ளியைப் பற்றியும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கவும். அதை விசாரித்து உறுதி செய்யும் பொறுப்பையும் சவூதி நண்பருடைய தலையில் போட்டு விட எனக்கு ஏதுவாகும்.
(தொடரும்)

ஃஃஃ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக