முறம் போலென்றார் - இல்லை
முற்றிய வாழைத் தாரென்றார்
உரல் போலென்றார் - இல்லை, பாதி
உதிர்ந்த வாருகோலென்றார்
அண்ணலார் வழங்கிய உன்னதப் பதவியால்
வல்லானை வணங்க இந்நேரம் விடுக்கும்
"அல்லாஹு அக்பர்"அழைப்போசையின்
அடிநாதமாய் உயிர் வாழும் நான்,
சாட்சியாளர்களான ஆட்சியாளர்கள்
"சய்யிதுனா"என விளித்த
பிலால் என்ற கருப்பான முழுயானை.
பாவம், குருடர்கள்!
ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=308092510&format=html
4 கருத்துகள்:
//பாவம், குருடர்கள்!//
அனைத்தும் அறிந்த, அறிவு ஜீவி குருடர்கள்!!
தெரிந்தெடுத்த வார்த்தைகளால், குருடர்களுக்கு 'உறைக்கும்' வகையில்
சவுக்கடியாய் விழுந்திருக்கிறது உங்களின் வார்த்தைகள்.
தவறாகச் சொல்கிறீர்கள் ஜாஃபர்.
சரியானது:
அனைத்தும் அறிந்ததுபோல் காட்டிக் கொள்ளும் அரைகுறைகள்.
வருகைக்கு நன்றி!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, பிறைநதிபுரத்தான்.
கருத்துரையிடுக