நம் கதையின் நாயகர் கிச்சாவின் 25.05.2005ஆம் தேதி காலை 07:53க்குப் பதிவு செய்யப் பட்ட, 'நேர்காணல்' பதிவிலிருந்து சில முத்துகள்:
சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். பலமுறை வலையுலகில் சந்தித்திருந்த போதிலும், நேரடித் தொடர்பொன்று நிகழும் என்று நான் எண்ணவேயில்லை. ஆனால் அது நிகழ்ந்ததுதான் ஒரு ஆச்சரியம்!நான் வசிக்கும் நுங்கம்பாக்கம் அருகேதான் அவரது அலுவலகம் இருக்கிறது என்று அவர் கூறியிருந்ததால், அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது எங்கள் வீட்டுக்கு வாருங்களேன் என்றழைப்பது வழக்கம். ஒரு முறை எதேச்சயாக அப்படி அழைத்து, அவர் வழக்கம்போல வரமாட்டார் என்று நினைத்து விட்டுவிட்டேன். பார்த்தால், வீட்டிலிருந்து போன், 'நேசகுமார்' என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒரு நபர் உங்களைப் பார்க்க வந்துள்ளார் என்று. உடனடியாக விரைந்து வந்தேன்.ஒரு மனநோயாளிக்கு இத்தனை பில்ட் அப் கொடுத்திருக்கும் இதே கிச்சாதான் "அவரை நான் பார்த்ததே இல்லை" என்று சூடம் கொளுத்துகிறார். பேட்டியினுள்ளே இவ்வளவு பில்ட் அப் என்றால் பின்னூட்டத்திலும் குறைச்சலில்லை. எம். கே குமார் என்பவர், "நேசகுமார் பேட்டியை இன்னும் நீட்டித்திருக்கலாம். என்ன வயது அவருக்கு?" என்று அவரது பின்னூட்டத்தில் கேட்டு வைத்தார். நேரில் பார்க்காத கிச்சா கூறுகிறார்:
ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!
பார்வைக்கு அவர் சுமார் 30-35 வயதுள்ள இளைஞர் போலத் தோன்றினாலும், உண்மையில் கொஞ்சம் கூட இருக்கும் என எண்ணுகிறேன். இந்தக் காலத்தில் "டை" என்கிற வஸ்து வயதைப் பொய்யாக்குகிறதே! ஆனால், அவர் பேசத் தொடங்கியவுடன் ஒரு கலைக்களஞ்சியம்போல் தங்குதடையில்லாமல் (பொருள் செறிந்த) அருவியாகக் கொட்டும் scholarship உள்ளவர். எப்படி இவ்வளையும் படித்துத் தெளிந்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் அடங்கவில்லை.நேரில் பார்க்காத நேர்காணலைக் கிச்சா பதித்தபோது இந்த மனநோயாளி "அது நேர்காணல் இல்லையே" என்று மறுத்துப் பின்னூட்டவில்லை. மாறாக, இந்த இரண்டு சிங்கியடிச் சப்தம் கேட்டவுடன் மிகப் பெரிய ஒரு கருப் பொருளைக் கட்டுடைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு ஓடி வருகிறார்:
எஸ்.கே, நான் டை அடிப்பதில்லை. வயது குறைவாகத் தெரிவதற்கு நாள் தவறாது செய்து வரும் நடைப்பயிற்சி, மனப்பயிற்சி ஆகியவை தான் காரணம். மன அழுத்தம் இல்லாமலிருந்தால் நரை-திரை விழாது, இளமையாகத் தென்படுவோம்.என்று விளக்கம் சொல்கிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த 'நேர்காணல்' பதிவை முற்றாக அழித்து விட்டதாகக் கிச்சா நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளையில், ஒரு காப்பிக்காரார் (பெயரே காப்பி மன்னன்) 'கூட்டுக் களவாணித்துவம்' என்ற ஒரு பதிவைப் போட்டு, 'நேர்காணல்' பதிவை "பெட்டிக்கடைக்கே சென்று நேரடியாகவே படியுங்கள்" என்று கூறி வியப்படைய வைத்தார். சரி, முற்றாய் அழித்துத் தொலைப்பதற்கு இந்த நேர்காணல் பதிவில் என்னதான் பிரச்சினை? கிச்சா ஓர் 'உண்மையான' காரணம் சொல்கிறார்:
இந்த இடத்தில் ஒரு உண்மையை உங்களுக்குத் தெளிவாக்க விரும்புகிறேன். நேசகுமார் ஒரு முன்ஜாக்கிரதையான மனிதர். முன்பின் அறியாத என் முன்னால் தன்னை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. நான் நட்சத்திரப் பதிவராக இருந்தபோது புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி அவருடைய பேட்டியை வெளியிடலாம் என்ற அவாவை அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவித்தேன். அவர் நேரில் வரமுடியாது என்றும் என் கேள்விகளை ஈமெயில் மூலமாகவே அனுப்பினால் அவர் பதிலுரைப்பார் என்று சொன்னார். ஆனால் ஒரு "த்ரில்" இருக்கட்டுமே என்று சற்று adventurous-ஆக நேரில் பேட்டி கண்டதுபோல் எழுதியிருந்தேன். ஆனால் உண்மையை இணைய நுணுக்கங்கள் தெரிந்த "ஆப்பு" என்பவர் கண்டுபிடித்து எழுதிவிட்டார். உண்மையில் நேசகுமார் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள பலரைப் போல் நானும் ஆசைப்பட்டேன். ஆனால் தன்னை அவர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. "நான் எழுதுவதைப் படியுங்கள். தொடர்பு கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நேரில் வேண்டாமே" என்று கூறிவிட்டார். இதுதான் உண்மை.ஆக, இருவரும் இதுவரை நேரில் சந்தித்ததே இல்லையாம்! (கதை தொடரும்) கதை சொல்லும் வேளை ... 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக