வெள்ளி, டிசம்பர் 29, 2006

கால் நகங்களைப் பிய்த்துக் கொள்ளும் காவிப் பூனைக்குட்டி

திண்ணையின் 21 டிஸம்பர் 2006 இதழில் சூபி என்னும் காவியின் இன்னொரு குருட்டு, 'பெண்குறி' வடிவில் வெளிப்பட்டிருந்தது. விவாதத்தில் நான் 'சிக்கி'க் கொண்டேனாம். குரு குலாமைப் போலவே கொ.ப.செ.வும் நன்றாகச் சிரிப்பு மூட்டுகிறார். "அப்ரஹாவின் யானைப்படையைப் பறவைகள் அழித்த அதிசயம், வெறும் மூடநம்பிக்கையன்று. மாறாக, பதிவு செய்யப் பட்ட வரலாறு" என்று எனது பதிலில் உள்ள 'வரலாறு' என்ற சொல், இந்தக் குருட்டுப் பூனைக்குத் தெரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. 'யானை ஆண்டு' என வரலாறு குறிப்பிடுவதைத்தான் நான் எடுத்தெழுதினேன்.
The Year of the Elephant (عام الفيل `Âm al-Fîl) is estimated at 570 CE and reported in Muslim historical accounts as the same year as that of the birth of their prophet Muhammad.[1] It is so named for an event that occurred at Mecca, in which it is reported that Abraha, a Christian King of Yemen, marched upon the Kaaba with elephants in order to demolish it.[2]

வஹ்ஹாபிகளின் தலைவரின் பிறந்த ஆண்டை, 'யானை ஆண்டு' என்று ஏன் வரலாறு குறிக்கின்றது?

As Abraha neared Mecca, he sent them an emissary, telling them that he would not fight them if they did not resist his destruction of the Kaaba. Abdul Muttalib, the chief of Quraysh, responded that he would defend his own property, but God would defend His house, the Kaaba, and withdrew with his people. The next day, as Abraha prepared to enter the city, swarms of birds carrying small rocks came and bombarded the Ethiopian forces; each man that was hit was killed, and they fled in panic, as Abraha died a horrible death. The tribes saw this as a sign of the Kaaba's holiness.
"என்னைப் பொறுத்தமட்டில் தர்காக்களின் சமாதி வழிபாட்டிற்கு ஆதாரம் முஸ்லிம்களின் கபா வழிபாடே ஆகும்" என்கிறார் காவி. எங்களின் மார்க்கத்தில் சமாதி வழிபாட்டுக்கு எம் தலைவர் கிஞ்சிற்றும் இடமளிக்கவில்லை என்பது காவிக்குத் தெரியாமலேயே இருக்கட்டும்; ஆனால் திண்ணை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.

"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...": அஹ்மது 8449, அபூதாவூது 1746 .

"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.

"கபாவின் ஹஸ்ருல் அஸ்வத் பெண்குறி வடிவமைப்பை முத்தமிடும் வழிபாட்டிற்கும்,தமிழக சக்ராயி தெய்வ பெண்குறி வழிபாட்டிற்கும் எப்படி ஒப்புமை ஏற்பட்டது ... " என்ற காவியின் இந்தக் கேள்விக்கு இரண்டு வகைப் பட்ட விளக்கங்கள் உள: 1. காவியின் தலைச்சோறு புளித்து நாறிப் போனதால் இந்த ஒப்புவமை ஏற்பட்டிருக்கலாம். 2. ஹஜருல் அஸ்வத் என்பது உடைந்து, பல சிதிலங்களாகி விட்ட சிறு-சிறு கற்கள்:
The Stone is actually broken into several pieces, damage which occurred when the stone was stolen in 930 C.E. Ismaili (Qarmatian) warriors sacked Mecca and carried the Black Stone away. It was returned twenty-two years later. In the process, the Black Stone was cracked. It is now held together by a silver band, which is fastened by silver nails to the Stone.
காவி பார்த்துச் சொல்லும் சக்ராயி யோனி, பல துண்டுகளால் இணைக்கப் பட்ட யோனியா என்று அவர் படம் போட்டால் நானும் திண்ணை வாசகர்களும் பார்த்துக் கொள்ள ஏதுவாகும். இடம் தெரியாமல் பிராண்டி, காவிப் பூனைக்குட்டியின் நகங்கள் பிய்த்துக் கொண்டன ... பாவம்.
ஃஃஃ

வெள்ளி, டிசம்பர் 15, 2006

கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி

நவம்பர் 16, 2006 திண்ணை இதழில் இடம் பெற்றிருந்த எனது கடிதத்தில்
நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், 'உள்ளதும் போச்சுதே நொள்ளைக் கண்ணா' என்ற சொல்வழக்கை நினைவூட்டி வந்து நிற்கிறார் சூபி. இதிலே குலாம் ரஸூலின் கொ.ப.செ. ஆகத் தன்னை நியமித்துக் கொண்டது வேறு. தலைவர்கள் தளர்ந்து தடுமாறும்போது கை கொடுக்க வேண்டியது கொ.ப.செ.க்களின் பொறுப்பு என்ற கடமை உணர்வோடு வந்திருக்கும் சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல முடிவு! இந்தக் கடிதத்தின் இறுதில் 'திண்ணையில் வஹ்ஹாபி' என்றொரு சுட்டி இருக்கும். அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன. "சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு ' முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன? இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு?"லிருந்து தொடங்கி, 'வெற்றிலைப் பிள்ளை' வரைக்கும் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து எல்லாவற்றுக்கும் பதில்களைத் தந்து, வஹ்ஹாபியைத் தோலுறித்துக் காட்டி, கொ.ப.செ. பதவியை சூபி தக்க வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் .. அந்த 'முலையறு சபத'த்தை மறந்து விடவேண்டாம்!
என்று நான் கேட்டிருந்தேன். எனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாத, கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டியாகிப் போன சூபி, உலகம் இருண்டு விட்டதாகப் புலம்புகிறார். அப்ரஹாவின் யானைப்படையைப் பறவைகள் அழித்த அதிசயம், வெறும் மூடநம்பிக்கையன்று. மாறாக, பதிவு செய்யப் பட்ட வரலாறு. எமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ஆண்டுதான் அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற 'யானை ஆண்டு'. சென்ற வாரத் திண்ணையில் சூபியின் கடிதமும் அதற்கான (ஹமீது ஜாஃபரின்) பதிலும் ஒரே இதழில் வெளிவந்ததும் ஓர் அதிசயமே! இன்னொரு அதிசயமும் உண்டு! அதுதான் சூபி என்னும் காவியை ஹமீது ஜாஃபர் இனங் கண்டு கொள்ள இத்தனை காலம் எடுத்துக் கொண்டது! பிப்ரவரி 24, 2006 திண்ணை இதழிலேயே 'சூபியின் முகமூடி மட்டும்' என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தில் அந்த முகமூடியைச் சற்றே நீக்கிக் காட்டியிருந்தேன். பின்னும், ஜூலை 6, 2006 திண்ணை இதழில் வெளியான 'நியாயமான கேள்விகள்' என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளில்
திண்ணை வாசக நண்பர்: பூனக்குட்டி வெளியே வந்து பொத்துன்னு விழுந்துடுச்சே தெரியுமா? நான்: என்ன சொல்றீங்க? நண்பர்: சூபிமுகமது என்ற பெயரில் திண்ணையிலெ எழுதுற ஆளு முஸ்லிமில்லே! நான்: எப்படிச் சொல்றீங்க? நண்பர்: அல்லாவின் சமாதி, அல்லாவின் சிலை, கபாவுக்குள்ளே இபுராகீம் பீடம், ஸ்ங்கே அஷ்வேத, சிவலிங்கம் அப்டில்லாம் எழுதுறது இருக்கட்டும். ஒரு முஸ்லிமுக்கு இப்டியெல்லாம் நினைக்க முடியுமா? இது அவ்ளவும் ஆர்.எஸ்.எஸ் சைட்டிலேர்ந்து சுட்டது. நான்: இருக்கட்டும். யாராயிருந்தா என்ன? சூபின்னோ முகமதுன்னோ முஸ்லிமல்லாதவங்க உண்மையிலேயே பேரு வச்சிகிட்டா நீங்க கேஸா போட முடியும்? நண்பர்: முடியாதுதான். ஆனா இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை சந்தேகம்ங்கிற பேர்ல எழுதி திண்ணையை ஏமாத்தலாமா முடியாதா? இதையே ஒரு கிரிஸ்டின் பேர்லெயோ இந்து பேர்லெயோ எழுதி இருந்தா ... திண்ணை பப்ளிஷ் செய்யுமா?
என்று சூபியின் முகமூடியை முற்றிலும் கிழித்திருந்தேன். பொத்தென்று வந்து விழுந்த அந்தப் பூனைக்குட்டிதான் இப்போது கோரைப்பாயென்று நினைத்துக் கொண்டு மாமலையைப் பிராண்டுகின்றது. அந்தக் கொ.ப.செ. பூனைக்குட்டிக்கு எனது பழைய பதிலையே பதிவு செய்கிறேன்:
பெரிய-கொடிய மிருகங்கள் எல்லாம் மோதிப் பார்த்த மலைதான் குர்ஆன். அதில் மோதிச் செத்துப் போன மிருகங்களின் உக்கிப்போன எலும்புகள் அம்மலையின் அடிவாரத்தில் இன்னும் எஞ்சிக் கிடக்கின்றன. கழிவிடக் கொசுக்களின் கடிக்கெல்லாம், மலை அசைந்து கொடுத்து விடாது.
ஃஃஃ

வெள்ளி, டிசம்பர் 01, 2006

இல்லாத இடம் தேடும் ...

மனுதர்மத்தைக் குர்ஆனில் தேடுகின்ற சூபியின் மாறாத மடத்தனம் கடந்த வாரத் திண்ணையில் வெளிப் பட்டிருக்கிறது. "மனிதர்களே!" என்று மொத்த மனுக்குலத்தையும் விளித்து, "நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய்-தகப்பனின் வழி வந்தவர்கள்" என்றும் "உங்கள் அனைவரின் இறைவனும் ஒரேயொருவனே!" [004:001] என்றும் தீண்டாமையை அழித்தொழிக்கும் குர்ஆனில் மனு தர்மத்தைத் தேடி அலையும் சூபியை எதில் சேர்ப்பது? என்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும். இனி, அபூலஹபைக் குறித்து சூபி கேட்டிருப்பதற்கு விளக்கம்: அபூலஹப் என்பவன் யார்? அப்துல் உஸ்ஸா என்ற இயற் பெயருடைய அபூலஹப், அப்துல் முத்தலிபின் மகன்களுள் ஒருவனும் வஹ்ஹாபிகளின் தலைவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையுமாவான். ஹர்புடைய மகளும் அபூஸுஃப்யானின் சகோதரியுமான அர்வா என்பவள் அபூலஹபின் மனைவியாவாள். "உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுப்பீராக!" [026:214] என்ற இறைகட்டளை வந்தவுடன், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் உள்ள 'ஸஃபா' என்ற குன்றின் மீதேறி நின்று, ''யா ஸபாஹா! யா ஸபாஹா!!'' என்று குரலெழுப்பினார்கள். (எதிரிப் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த அரபுச் சொல் பயன்படுத்தப்படும்.) பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: "ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே!" என்று அழைத்தார்கள். அவர்களது அழைப்பைச் செவியேற்றவர்கள், "இவ்வாறு அழைப்பவர் யார்?" என வினவ சிலர் ''முஹம்மது'' என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் உட்பட பலரும் அங்குக் குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள். அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்), ''இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காகக் குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், ''ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

''குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. கஅபு இப்னு லுவய்யின் வழித்தோன்றல்களே!

முர்ரா இப்னு கஅபின் வழித்தோன்றல்களே!

குஸைய்யின் வழித்தோன்றல்களே!

அப்துல் முனாஃபின் வழித்தோன்றல்களே!

அப்து ஷம்ஸ் வழித்தோன்றல்களே!

ஹாஷிம் வழித்தோன்றல்களே!

அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்களே!

அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே!

அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே!

உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே!

எனது செல்வத்திலிருந்து விரும்பியதைக் கேட்டு பெற்றுக்கொள். உன்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்! நிச்சயமாக நான் உனது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உனக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்''

என்று கூறி முடித்தார்கள். இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். ''நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?'' என்று கூறினான். அவனைக் கண்டித்து ''அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...'' என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் அருளப் பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதீ,ஃபத்ஹுல் பாரீ). அபூலஹபின் மீது தணியாத பாசம் கொண்ட சூபியின் கேள்வி யாதெனில், "கருணையாளனான அல்லாஹ் தெருச் சண்டைக்காரன் போல் சாபமிடலாமா?" என்பதே! முஸ்லிம்களின் இறைவனைக் குறித்து எதுவுமே தெரியாத அறிவிலித்தனத்தால் விளைந்த கேள்வியைத்தான் சூபி கேட்கிறார். அல்லாஹ் கருணையாளன்தான். அதேவேளை கையாலாகாதவன் அல்லன். அடக்கியாள்பவனும் அவனே! அவனுடைய அன்பிற்குரிய அடியார்கள் பலரையே அடக்கி வைத்தவன்; வைத்திருப்பவன் எனும்போது அபூலஹப் அவனுக்கு எம்மாத்திரம்? அடுத்து, "இது அல்லாவின் வார்த்தையா?" என்று சூபி ஒரு கேள்வியை வைக்கிறார் - அந்தக்கால அபூலஹபைப் போலவே. மேற்காணும் 111ஆவது அத்தியாயம் அருளப் பட்ட பின்னரும் பத்தாண்டு காலத்திற்கு மேல் அபூலஹப் உயிர் வாழ்ந்திருந்தான். அந்தப் பத்தாண்டுகளில் அவனுடைய குரைஷிக் குலத்தினரில் பெரும்பாலோர் சத்திய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டனர். சூபியைப் போலவே இறைவாக்கைப் பொய்ப் படுத்திவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்த அபூலஹப், சற்றே அறிவைப் பயன் படுத்தி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? "நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன்" என்ற ஓர் அறிவிப்பு அபூலஹபிடமிருந்து வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? 1 - "குர்ஆன் இறைவாக்கு இல்லை" என்று நிறுவுவதற்கு 1400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய பரிதாப நிலை தொடந்திருக்காது. 2 - நபி (ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் தூதர் என்ற உயர் பதவியிலிருந்து இறக்கி, வெறும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று ஆக்குவதற்கு இன்றுவரை செய்யப் பட்டுக் கொண்டிருக்கும் பூனையைக் கட்டி வைத்து சிரைக்கும் வேலை மிச்சமாகிப் போயிருக்கும். 3 - உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பின்பற்றுகின்ற - எதிர்ப்புகளை எதிர்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து செம்மாந்து நிற்கின்ற - வாழ்க்கை நெறியான இஸ்லாம், இல்லாமலாகி இருக்கும். கேள்வி: அபூலஹப் ஏன் அதைச் சொல்லாமலே அழிந்து போனான்? பதில்: அல்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இன்னொரு சாட்சியாக!
ஃஃஃ

வெள்ளி, நவம்பர் 17, 2006

மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்

"குரங்குகளும், பன்றிகளும் அல்லாவின் படைப்பினங்கள் இல்லையா? அவற்றை ஏன் தாழ்ந்தவைகளாக சித்தரிக்க வேண்டும்...." என்ற கேள்வியோடு சென்றவாரத் திண்ணை (நவம்பர் 9, 2006) இதழில் 'ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா...' என்று சூபி வெளிவந்திருக்கிறார். சூபிக்கு மதிப்பளிப்பதே இவ்வாரத் தலைப்பின் நோக்கம். இனி, சூபியின் கேள்விகளுக்கும் வஹ்ஹாபின் பதில்களுக்கும் வருவோம்:
1-"வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும் எங்களுக்கு அருளப்பட்ட(வேதத்)தின்மீதும் இதற்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்ற காரணத்திற்காகவே நீங்கள் எங்களைப் பழிக்கின்றீர்கள். திண்ணமாக, உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக (-தண்டனைக்கு உரியவர்களாக) இருக்கின்றீர்கள்" என்று (நபியே!)நீர் கூறுவீராக! [005:059].
2-"அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட தண்டனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எவர்களை அல்லாஹ் சபித்து, எவர்கள் மீது கோபமுங்கொண்டு, எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும் ஷைத்தானை வழிப்பட்டவர்களும்தாம் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! [005:060].
3-தடையை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம் [007:166].
4-சனிக்கிழமை (மீன் பிடிக்கக் கூடாது என்ற நம்) தடையை உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி, "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று நாம் கூறினோம் [002:065].
மேற்கண்டவற்றுள் இரண்டாவதுதான் சூபியுடைய கேள்வியின் கரு. கேள்விகள் அனைத்தும் ஒரேயோர் உண்மைக் கடவுள் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற அல்லாஹ்விடம் கேட்கப் பட்டுள்ளன. எனவே, அவனே பதில் சொல்கிறான்:
அவன் உயிர் கொடுக்கிறான்; அவனே உயிர் பறிக்கிறான். ஆகவேண்டிய ஒன்றுக்கு, அவன் 'ஆகுக!' என்று கூறுவான். உடன் அஃது ஆகிவிடும் [040:068].
சூபிக்கும் வஹ்ஹாபிக்கும் அவரவர்களுக்குரிய வேளையில், "சடலமாய் ஆகுக!" என்ற அவனது கட்டளை வரும். அப்போது கண்கள் நிலைகுத்தி விடும். உடல் விறைத்துப் போகும். அவனுடைய "ஆகுக!"வுக்கு எதிரே சூபியின் விஞ்ஞானம் மண்டியிட்டுக் கிடக்கும். "அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டி விடாதீர்கள் ..." [006:108] என்ற வஹ்ஹாபின் கட்டளைக்கு அடிபணிந்து, சூபி மதிக்கும் கடவுளர்கள் இருவருக்கு, தலைப்பில் கூடுதலாக மரியாதை செய்து விட்டேன். நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், 'உள்ளதும் போச்சுதே நொள்ளைக் கண்ணா' என்ற சொல்வழக்கை நினைவூட்டி வந்து நிற்கிறார் சூபி. இதிலே குலாம் ரஸூலின் கொ.ப.செ. ஆகத் தன்னை நியமித்துக் கொண்டது வேறு. தலைவர்கள் தளர்ந்து தடுமாறும்போது கை கொடுக்க வேண்டியது கொ.ப.செ.க்களின் பொறுப்பு என்ற கடமை உணர்வோடு வந்திருக்கும் சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல முடிவு! இந்தக் கடிதத்தின் இறுதில் 'திண்ணையில் வஹ்ஹாபி' என்றொரு சுட்டி இருக்கும். அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன. "சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு' முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன?" "இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு?"லிருந்து தொடங்கி, 'வெற்றிலைப் பிள்ளை' வரைக்கும் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து எல்லாவற்றுக்கும் பதில்களைத் தந்து, வஹ்ஹாபியைத் தோலுறித்துக் காட்டி, கொ.ப.செ. பதவியை சூபி தக்க வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் .. அந்த 'முலையறு சபத'த்தை மறந்து விடவேண்டாம்!
ஃஃஃ

ஒன்றும் ஒன்றும் ஒன்று

"ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?" என்ற கேள்வியை எழில் என்பவர் சென்ற வாரத் திண்ணையில் எழுப்பியுள்ளார். "முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்" என்று ஜாகிர் நாயக் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் எழில். ஜாகிரின் கூற்று மிகத் தவறானது என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. அவரே ஆற-அமர சிந்தித்துப் பார்த்தாரெனில், தன் பதிலில் உள்ள தவறு ஜாகிருக்குப் புரியும். "நான் பிறந்த நாடு எனக்கு உரிமை அளித்திருக்கிறது; நான் பிரச்சாரம் செய்கிறேன்" என்று நாச்சறுக்கின்றி பதில் கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சறுக்குதல் என்பது ஜாகிருக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் ஏற்படுவதுதான். எழிலையே எடுத்துக் கொள்வோமே! "காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி" என்ற முதல் எட்டிலேயே எழிலின் சறுக்கல் தொடங்கி விட்டது. 'காலி' தமிழ்ச் சொல்லா? 'பாத்திரம்' தமிழ்ச் சொல்லா? காலிப் பாத்திரம் சப்தமிடுமா? சப்தம் தமிழ்ச் சொல்லா? ('சத்தம்' தமிழ்தான் 'கூலி' என்ற பொருளில்). எழுத வந்த செய்திக்குப் பொருந்தாத் தலைப்பிட்டு, அந்தப் பழியைத் தமிழின் தலையில் சுமக்கச் செய்வது எழுத்து நேர்மையன்று. சரியான 'தமிழ்'ப்பழமொழி: குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் ததும்பாது என்பதே! குறையுள்ள ஒரு மனிதனை ஒன்றுமே தெரியாத 'காலி' என்று மிகைபடக் கூற முனைந்ததால் தொடக்கத்திலேயே சறுக்கினார் எழில் என்பதே உண்மை. தான் நம்பும் கொள்கையைச் சரி என நிலைநாட்டுவதற்கு எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. அதற்காக, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற தசம அடிப்படைக் கணக்கையும் ஒன்றோடு ஒன்று பத்து என்ற பைனரியையும் சனாதனத்துக்கான உதாரணமாக முன் வைத்தது எழிலின் சறுக்கலில்லையா? தசமக் கணக்கு ஒரு கொள்கை அடிப்படையிலும் பைனரி வேறொரு கொள்கை அடிப்படையிலும் இயங்கக் கூடியவையன்றோ? தசமமோ பைனரியோ முடிவே இல்லாதவையா என்ன? சரி, அப்படியே இருக்கட்டும். ஒரு கம்ப்யூட்டர் பயனாளர், காலத்துக்கும் டிபக் நிலையிலேயே தொடர்ந்து இருந்து வரும் ப்ரோக்ராமை விரும்புவாரா முழுமையடைந்த ப்ரோக்ராமை விரும்புவரா? தனக்கு எது பயனுள்ளதாக இருக்குமோ அந்த முழுமையடைந்த ப்ரோக்ராமைத்தான் ஒரு அறிவுள்ள பயனாளி தேர்ந்தெடுப்பார் என்றும் அதுதான் இயல்பு என்றும் நான் நினைக்கிறேன்.
ஃஃஃ

சனி, நவம்பர் 04, 2006

சிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்

கடந்த (26 அக்டோபர், 2006) திண்ணைப் பதிப்பில், 'துண்டு துண்டாக்கப் பட்ட நான்கு பட்சிகளில் உடல்கள்' என்பதாக குலாம் ரஸூல் என்னென்னவோ பிதற்றி இருந்தார். வழக்கம்போல தொடக்கத்திலேயே என்னுடைய பெயரைப் பற்றி, வஹ்"ஹாபி என்ற ஒரு நபரே ஒரு புனைவு" - அதாவது கற்பனை - என்று பிதற்றி இருந்தார். இல்லாத ஒருவன் வாரமிருமுறை இவருடைய உளறல்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறானாம்.! என்னதான் எழுதுவது என்று தெரியாமல் வாசகர்களுக்குச் சிரிப்பூட்டுகிறார் குலாம். அப்படி என் பெயரில் என்னதான் இருக்கிறது? இவர் ஏன் இவ்வளவு அச்சத்துக்குள்ளாகிப் பிதற்றுகிறார் என்று தெரியவில்லை! முதலில் என் பெயரினால் ஏற்பட்ட அச்சத்தை இவர் நீக்கிக் கொள்தல் நலம்; இல்லையெனில், யார்-யாருடைய மகள் என்று தெரிந்து கொண்டே மாற்றி எழுதக் கூடிய படபடப்பு மாறாது. "நபிகளாரை கடிந்து கொள்வது போன்ற வசனங்களும் நபிகளாரின் உள்மனம் வெளிமனத்தை நோக்கி எழுப்பும் குரல்களாகும்" என்று இறைமறையை இழித்துரைக்கும் குலாமையே நான் காஃபிர் என்று குறிப்பிட்டு எழுதுவதில்ல என்பதைத் திண்ணை வாசகர்கள் அறிவர். இஃது இப்படி இருக்க, செத்துப் போன இரு முஸ்லிம் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களிருவரும் காஃபிர்களா? என்று குலாம் கேட்கிறார். இஸ்லாத்தின் கொள்கைகளை வெள்ளைக்காரனின் காலடியில் வைத்து அவனுக்கு அடி வருடியதற்காக, சையத் அஹ்மது கானுக்கு, அவர் உயிரோடிருக்கும் காலத்திலேயே தேவ்பந்து தீர்வாயத்திலிருந்து பட்டம் கொடுக்கப் பட்டு விட்டது - வெள்ளைக்காரன் தரப்பிலிருந்து சர் பட்டமும் பகதூர் பட்டமும். இன்றைய அலிகர் பல்கலைக் கழகத்தின் ஆணிவேர் என்பதைத் தவிர பொது வாழ்வில் கடைசிவரை வெள்ளைக்காரனுக்கு விசுவாசமாய் இருந்து செயல் பட்டது மட்டுமே கானுடைய சாதனைகள் என்பதால் அவரைப் பற்றி இங்கு நான் அதிகம் எழுதப் போவதுமில்லை; எந்தப் பட்டமும் கொடுக்கப் போவதுமில்லை; அஃது என் வேலையுமில்லை. அடுத்த ஆள், குலாம் அஹ்மது பர்வேஸ். இந்த குலாமைப் பற்றி அறிவதற்கு முன், இவர் பகுத்தறிவுப் பால் குடித்த இனாயத்துல்லாஹ் கான் அல்-மஷ்ரிகீ என்பவரைப் பற்றி அறிந்து கொள்வது நலம் பயக்கும். பேரா. ஹபீபுல் ஹக் நத்வீ எழுதுகிறார்:
Al-Mashriqui, a graduate of Cambridge and a rationalist, started his movement through free interpretation of the Holy Quran. In his AT-TAZKIRAH (1924) and HADITH-AL-QURAN (1951), he explained his views on religion and politics. He abridged the teachings of the Quran to ten points that replaced the five accepted pillars of Islam. He was acclaimed by western scholars for his courage and reconstruction of Islamic Faith (AQAA'ID).' (Note: This is in line with the conspiracy of the West against Islam).

Professor C W Smith in his book MODERN ISLAM IN INDIA (pages 264-276) and Professor Kramer in his article in the THE MUSLIM WORLD, an American Journal, VOL 21, No.2 April 1930, have praised Al-Mashriqui for his ANTI-HADITH views and took special interest in his AT-TAZKIRAH, which is almost non-existent for the last 40 years.

Page 105 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT. பகுத்தறிவுப் பால் சுரந்து வழிந்த சுனைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். இனி, குலாம் அஹ்மது பர்வேஸைப் பற்றிய நத்வீயின் கண்ணோட்டம்:
Ghulam Ahmad Parwez not only continued and carried on the message of Al-Mashriqui, but he went further and expounded his own theories. He (Ghulam Ahmad Parwez) disowned the corpus of Hadith as well as classical Tafaaseer (commentaries of the Quran), which according to him cannot be trusted as a source for understanding the Quran by a modern man. Like Al-Mashriqui, he had to redefine and recoin Quranic terminology. Moreover, his translation of the Ouran had been mingled and fused with his personal views and reviews. The four volumes of his LUGHAAT-UL-QURAN were prepared in order to support their new messages and interpretations. They were jointly compiled and written by various authors with similar persuasions but were published under his name.
Page 107 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT.
These theories, expounded by Parwez, sparked opposition among the orthodox Ulama as well as among the modernists. He was taken by many as a closer ally to Western economic thought and philosophy rather than to the Ouranic system. Dr. Aziz Ahmad, himself a modernist and a great admirer of Parwez, was very unhappy with his NIZAAM-E-RUBUBIYYAH concepts. In his book ISLAMIC MODERNISM IN INDIA AND PAKISTAN (pages 224-225), Dr Aziz Ahmad concludes that no modernist, right from the time of Sir Sayed Ahmad Khan to the present, was so close to Western thought as was Parwez.
Page 108 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT. இன்னும் நிறைய உண்டு. இங்கு முழுதும் படிக்கலாம். அடுத்து, குலாம் ரஸூல் விளக்கம் கேட்ட இறை வசனம்:
என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய் என்பதை எனக்குக் காட்டேன்" என்று நபி இபுறாஹீம் கேட்டபோது, "நீர் நம்பவில்லையா?" என்று (அல்லாஹ் திருப்பி) வினவினான். "இல்லையில்லை (நான் நம்புகிறேன், அதைக் கண்களால் கண்டு) என் மனம் நிறைவு பெறும் பொருட்டு (காட்டுவாயாக! என்று வேண்டி நின்றார்). "நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை(ப் பெயர்கூறி அழைத்தால்) உம்மிடம் வருமாறு பழக்கிய பின்னர், அவற்றைத் துண்டு-துண்டுகளாக ஆக்கி, அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மலையில் வைத்ததன் பிறகு அவற்றை(ப் பெயர் கூறி) அழைப்பீராக! அவை உம்மிடம் பறந்து வந்து சேரும்(படிச் செய்வேன்)" என்றும் "அறிந்து கொள்வீர்! அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்" என்றும் அல்லாஹ் கூறினான் [002:260].
படிப்பினைகள்: (1) சிறிதளவு ஐயம் இருந்தாலும் அந்த ஐயத்துடனே கண்மூடித் தனமாக எந்த ஒன்றையும் நம்பும்படி இஸ்லாம் கூறவில்லை. ஐயத்தைப் போக்கிக் கொள்வதற்கு சாத்தியமான எல்லா வழிகளையும் ஆராயச் சொல்லுகிறது. 2) பிற உயிரினங்களைப் பழக்கி, அடக்கியாளும் திறமையை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிறான். 3) மனிதனுடைய ஆற்றல் வரையறுக்கப் பட்டது. 4) வரையறையற்ற ஆற்றல் என்பது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது. இறைவனுடைய வரையறையற்ற ஆற்றல்களில் சிலவற்றின் அறிவியல் சான்றுகள் இந்தச் சுட்டியில் (குலாமுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக THE PHYSICS OF THE DAY OF JUDGMENT) ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. இறுதியாக, சிறப்புச் செய்திகள்-4 ஷாஹுல் ஹமீது வலீ, ஹஜ்ஜுக்குப் போகும் வழியில் லாகூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது லாகூரின் முஃப்தியாக இருந்த ஷேக் நூருத்தீன் என்பார் (ஷாஹுல் ஹமீது வலீயைப் போலவே) பிள்ளைப் பேறற்று இருந்தார். தனக்குப் "பிள்ளைப் பேறு வழங்க வேண்டும்" என்று முஃப்தி ஷேக் நூருத்தீன் (பிள்ளைப் பேறற்ற) ஷாஹுல் ஹமீது வலீயிடம் வேண்டினார். அதற்கு, விடலைப் பருவத்தில் இறந்துபோன தம் சகோதரர் யூஸுஃப் என்பாரின் பெயரை முதலில் பிறக்கும் ஆண் மகவுக்கு இட வேண்டும் என்று ஷாஹுல் ஹமீது வலீ நிபந்தனை விதித்தார்; அதையும் முஃப்தி ஏற்றுக் கொண்டார். ஷாஹுல் ஹமீது வலீ வெற்றிலைக்குள் ஒரு பொருளைச் சுருட்டி வைத்துக் கொடுத்தார். அந்தப் பொருளினால் முஃப்திக்கு நான்கு ஆண் மக்களும் சில பெண் மக்களும் பிறந்தனர். கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட - பகுத்தறிவுப் பால் குடித்த குலாமின் 'பண்பாட்டு' - மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 228-229இல் இரண்டாவது ஹிக்காயத்தாக மேற்காணும் 'வெற்றிலைப் பிள்ளை'ச் சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. சிறுவர்களோடு விளையாடுவதே எனக்கு விருப்பம் என்று முன்னர் கூறி இருந்தேன். நான் விளையாட விரும்பும் சிறுவர்கள் ரொம்ப நோஞ்சானாகிக் கொண்டே போகும்போது விளையாட்டில் ஆர்வம் குன்றி விடுகின்றது! இன்னும் வேண்டிய அளவு யாரிடமிந்தும் குலாம் பகுத்தறிவுப் பால் குடித்து விட்டு வரலாம்.

ஃஃஃ

வெள்ளி, அக்டோபர் 20, 2006

சிறப்புச் செய்திகள்-3 அல்லது குருட்டுத்தனக் கட்டுடைப்பு

சென்றவாரம் (12.10.2006) திண்ணையின் அரசியலும் சமூகமும் பகுதியில் இடம் பெற்ற குலாம் ரஸூலின் 'திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள் ...' என்ற கட்டுரை, திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்கு வியப்பையோ சினத்தையோ அல்லது இரண்டையுமோ ஏற்படுத்தியிருக்கலாம். எனக்கு ஏற்படுத்தவில்லை! 

யானையைத் தடவிப் பார்த்து, தமக்குத் தோன்றியவாறு கூறிய குருடர்களைப் பற்றிப் படித்தபோது, யாருக்காவது வியப்போ சினமோ ஏற்பட்டதுண்டா? இனி, குருட்டுத்தனமான சங்கதிகளை ஒவ்வொன்றாய்க் கட்டுடைக்கலாம்: 

1. "இமாம் அபூபக்கரின் காலத்தில் இம்முயற்சி துவங்கி சைதுஇப்துதாபித் என்ற குர்ஆன் தலைமை எழுத்தாளாரின் முன்முயற்சியில் மனனம் செய்யப்பட்ட நபித்தோழர்களின் வசனங்கள் அவர்களின் முன்னிலையிலேயே உறுதி செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு முதல் கலீ·பா அபூபக்கர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தம் மரணத்திற்கு பிறகு மகளாரும் நபிமுகமதுவின் மனைவியுமான ஹப்சாவிடம் இப்பிரதி பாதுகாக்கப்பட்டு வந்தது" என்று கூறுவது யார் தெரிகிறதா? அன்னை ஹஃப்ஸா யாருடைய மகள் என்று கூடத் தெரியாத 'குர்ஆனை வரலாறு சார்ந்து அறிவு ரீதியாக அணுகு'வதாகப் பீற்றிக் கொள்ளும் குலாம்தான். 

அன்னை ஹஃப்ஸா, இரண்டாவது கலீஃபா உமர் அவர்களின் மகளாவார்; முதலாவது கலீஃபா அபூபக்ரு அவர்களின் மகளல்லர். குர் ஆனின் தொகுப்பு குறித்த வரலாற்றுச் சான்றுகளைப் படித்துப் பார்த்து, அவற்றை விளங்கி, பின்னரே எழுதத் துணிய வேண்டும். இல்லையெனில், இழுக்குதான். 

2. "ஒலிவடிவம் / எழுத்து வடிவமாகும்போதே ஒரு மாற்றத்திற்குள்ளாகிறது என்பதே முதல் உண்மை." மிகவும் மெனக்கெட்டு இந்த உண்மையைக் கண்டு பிடித்ததுபோல் குறிப்பிடுகிறார் குலாம் - பெயருக்கே உரிய சிறுபிள்ளைத் தனமாய். الله என்ற வரிவடிவத்தை "அல்லாஹ்" என்ற ஒலிவடிவத்தால் மொழியும்போது உண்டாகும் அந்த 'ஒரு மாற்றம்' என்னவோ? குலாமுக்கே வெளிச்சம். الله என்ற வரிவடிவத்தை 'அல்லாஹ்' என்று சரியாக எழுதத் தெரியாத குலாம்தான் 'வடிவ மாற்ற'ங்களைப் பற்றிய 'உண்மை'யை வெளிக்கொணர முயல்கிறார்; வேடிக்கையாயில்லை? 

3. "அரபு எழுத்து மரபில் ஸேரு, ஸபரு, பேஷ், ஷத்து, மத்து, நுக்தா உள்ளிட்ட உயிர்க் குறிகள் சார்ந்து இலக்கணமுறைமைகளும், வாக்கிய அமைப்பு, தொகுப்பு, தலைப்பிடுதல் உள்ளிட்டவை பிற்காலத்தில் இணைக்கப்பட்டவையாகும்." என்று எழுத்து மரபெல்லாம் சொல்ல வருகிறார் குலாம். 'ஸேரு, ஸபரு, பேஷ்' ஆகியன அரபுச் சொற்களே அல்ல; மாறாக அவை உருதுச் சொற்கள். எகர-ஏகார ஒலி வடிவங்கள் அரபு மொழியில் இல்லாதவை என்ற அடிப்படை விதி, பாவம் 'ஸே'ரும் 'பே'ஷும் சொல்ல - அரபுப் பேராசிரியர் வேடமிட்டு - வந்திருக்கும் குலாமுக்குத் தெரியாததில் வியப்பொன்றுமில்லை. 

இந்தப் படத்தில் உள்ள இறைவசனங்களை அகர, இகர, உகரக் குறியீடுகள் எவையுமின்றி துல்லியமாகப் படிப்பதற்கு, வேண்டியதெல்லாம் அரபு மொழியறிவே! வேடம் பூண்டு வந்தால் விளங்கி விடாது; வேடம் கலைந்து விடும். 

4. "அல்லாஹ் தன்னையே தான் ஒருபோதும் புகழ்வதாக சொல்வதில்லை" என்று, அல்லாஹ்வின் வேதத்தைக் கரைத்துக் குடித்தவர்போல் அடித்துக் கூறுகிறார் குலாம். விரிவஞ்சி, மிகச் சில மறுப்புகள் மட்டும்: "வானங்களையும் பூமியையும் படைத்து, இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [006:001]; "எவ்விதக் கோணல் குறைபாட்டையும் கொண்டிராத இவ்வேதத்தைத் தன் அடியார் (முஹம்மது) மீது அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [018:001]; "இரவிலும் பகலிலும் வானங்களிகளிலும் பூமியிலும் உள்ள அனைத்து(உயிரினங்களு)ம் போற்றும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [030:018]; "வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. திண்ணமாக அல்லாஹ் தேவையற்றவனும் மிகப் புகழுக்குரியவனுமாவான்." [031:026]; "புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே ... " [034:001]; "அகில உலகத்தாரையும் படைத்தாளும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [037:182]; "வானங்களின், பூமியின் மற்றும் அகிலத்தாரின் இறைவனுமான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [045:036].  

இவையன்றி, "தூய்மையானவன்", "அன்பு நிறைந்தவன்", "கருணையாளன்", "மன்னிப்பவன்" போன்ற தன் பண்புப் பெயர்களை அல்லாஹ் தானே எடுத்தியம்பிப் புகழ்ந்து கொள்ளும்/புகழக் கற்பிக்கும் ஏராள வசனங்கள் குர்ஆனில் உள - அவனுடைய சொற்களாகவே. 

5. "நபியே நீர் கூறும் என்பதான சிலபகுதி வசனங்களை அல்லாவின் வார்த்தைகளாக சிலர் ஆதாரம் காண்பிக்க கூடும். ஆனால் இவ்வார்த்தைகள் நபிமுகமதுவின் உள்மனக் குரலாகவே வெளிப்பட்டுள்ளது" என்றும் "திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளாகும்" என்றும் "திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகள்தான் என்பதற்கு திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பாத்திகாசூரா சுட்டிக்காட்டுகிறது" என்றும் "எனவே திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளென உறுதிப்பட கூறலாமென்ற கருத்தும் விவாதிக்கப்படுகிறது" என்றும் 'திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த சில கற்பிதங்களை கட்டுடைக்க' முயன்று தன் அகக் குருட்டைத் திண்ணையில் வெளிப்படுத்தும் குலாம், முதலில் தன்னுடைய குருட்டுத் தனத்தைக் கட்டுடைத்து விட்டு வர வேண்டும். இதைத்தான் என்னுடைய 24.02.2006 திண்ணைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். 

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: மேற்காணும் 1-5 எண்களிட்ட சொற்றொடர்களை முறையே, குருட்டுத் தனம்-1, குருட்டுத் தனம்-2 ... என்று படித்துக் கொள்ள வேண்டுகிறேன். 

இனி, சிறப்புச் செய்தி-3: 
தன்னைச் சுற்றிக் கூடியிருந்த சீடர்களிடம் முஹைதீன் ஆண்டவர் கூறினார்: "காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் என்னிடம் வந்து ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை எனக்கு அறிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து அந்த ஆண்டில் நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும் தம்மிடம் என்னென்ன மறைவான விஷயங்கள், ரகசியங்கள் (இரண்டும் ஒன்றுதானே என்று யாரும் கேட்கக் கூடாது) நடக்கவுள்ளன என்பதை எனக்குத் தெரிவிக்கின்றன." கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 189இல் 19-21 வரிகளில் மேற்காணும் மாயாஜாலச் சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. 
"(நபியே! அவர்களிடம் கூறுவீராக:) அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளனவென்று நான் கூறவில்லையே! மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நான் ஒரு வானவர் என்றும் உங்களிடம் கூறவில்லை. எனக்கு இறைச் செய்தி மூலம் அறிவிக்கப் படுவதையன்றி எதையும் நான் பின்பற்றுவதில்லை ... [006:050].

"மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறிய முடியாது ..." [006:059]. 
அகிலத்தின் அருட்கொடையாக வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே வழங்கப் படாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மையை முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குச் சூட்டி அழகு பார்க்கும் 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிதை, குலாம் ஏன் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்கிறார் என்று வாசகர்களுக்கு இப்போது விளங்கியிருக்கும். 

பெரிய-கொடிய மிருகங்கள் எல்லாம் மோதிப் பார்த்த மலைதான் குர்ஆன். அதில் மோதிச் செத்துப் போன மிருகங்களின் உக்கிப்போன எலும்புகள் அம்மலையின் அடிவாரத்தில் இன்னும் எஞ்சிக் கிடக்கின்றன. கழிவிடக் கொசுக்களின் கடிக்கெல்லாம், மலை அசைந்து கொடுத்து விடாது. 

கட்டுடைப்பு தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ

ஞாயிறு, அக்டோபர் 08, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 5

இஸ்லாம் என்பது சான்றாதரங்களாகிய 'இஸ்னாது' என்னும் தூண்களின் மீது நிறுவப் பட்ட வாழ்க்கை நெறியாகும். "நமக்கும் மற்றவருக்குமுள்ள வேறுபாடு, இஸ்னாது எனும் தூண்களாகும்" -அறிவிப்பவர்: இபுனுல் முபாரக், ஆதாரம்: முஸ்லிம். இஸ்லாத்தின் சான்றாதரங்களாகத் திகழும் குர்ஆன்-ஹதீஸ் என்னும் அடிப்படைகளைப் பற்றிக் கவலைப் படாமல், பொய்யும் புனைவும் கலந்து பாடப்பட்ட, மார்க்கத்துக்குப் புறம்பான பாடல்கள் பலவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழனியில் களைகளாக மலிந்துள்ளன. இன்று நம்மிடையே காணப் படுகின்ற இஸ்லாமிய இலக்கியங்கள் பல, இஸ்லாத்துக்கு வலு சேர்ப்பதைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை. இலக்கியத்தின் நாளங்களிலெல்லாம் இரத்தம் பாய்ச்ச வேண்டிய இவை, சீழைச் செலுத்தி இஸ்லாத்தை வியாதிப் படுத்த முயன்றுள்ளன. மார்கத்துக்கு முரணான இத்தகையக் கவிதைகளைப் பற்றி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளம் காட்டிச் சென்றுள்ளார்கள்.
"உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" புகாரீ-5688.
இஸ்லாமியத் தமிழ்க் கவிதைகளைக் குர்ஆன்-ஹதீஸ் முன்னால் நிறுத்தி நுணுகி ஆராயும்போது - ஸ்கேன் செய்து பார்க்கும்போது - அவற்றினுள்ளே எந்த அளவுக்குச் சீழ் மண்டியுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. ஒருவருடைய உடலில் எங்கேனும் சீழ் கட்டியிருப்பது அவருடைய முழு ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஊறு விளைவிப்பதாகும். எனவே, எத்துணை வேதனையாலும் தாங்கிக் கொண்டு, சீழை அப்புறப் படுத்தி, நலம் பெறுவதையே எவரும் விரும்புவர். இப்படியிருக்க, நம் உயிரினுமினிய இஸ்லாத்தின் மீது சீழ் நிரம்பியுள்ள எத்துணையோக் கவிதைக் கொப்புளங்கள் கிளம்பிப் புரையோடிப் போயுள்ளதை நம்மில் பலர் கண்டும் காணாது போகின்றனர். இந்தச் சீழ் வடியும் கவிதைகளைப் பிதுக்கிக் காட்டும்போது, இவர்கள் வேதனையால் துடித்துப் போகின்றனர். இவ்வேதனை எந்த விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளத் தக்கதுவே என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர். இஸ்லாத்தைப் புண்படுத்தும் கவிதைகளை அடையாளம் காட்டுவோரை இவர்கள் புண்படுத்தத் தொடங்குகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத்துக்கு முரணான கவிதையைச் "சீழ்" என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, அத்தகையக் கவிதைகளைப் புனையும் கவிஞனை "ஷைத்தான்" எனவும் வெறுத்துக் கூறியுள்ளனர். அல்குர் ஆனின் 026:221ஆவது வசனத்தில் பொய் புனைபவர்களை ஷைத்தான் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றும் அமைந்துள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் 'அர்ஜ்' என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்; உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, அவருடைய உள்ளத்தில் சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" என்று கூறினார்கள் - முஸ்லிம் 4193.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

புதன், அக்டோபர் 04, 2006

சிறப்புச் செய்திகள்-2

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முடவன், "வானம் ஏறி வைகுண்டம் போவேன்" என்று வாய்ச் சவடால் விட்டானாம். வாசகர்களுக்கு விளங்கியிருக்கும்! திண்ணையில் கடை விரித்து, குலாம் ரஸூல் விற்க முயன்ற மவ்லிதுச் சரக்கு [சுட்டி-1] எத்துணை உளுத்துப் போனது என்பதற்கு அவருடைய சரக்கிலிருந்தே நான் எடுத்துக் காட்டிய ஒரேயொரு சான்றான மவ்லிதுக் காவியத்தின் வில்லி தாரியாவின் 'முலையறு சபத'த்திற்கு [சுட்டி-2] பதில் சொல்ல வக்கற்ற குலாம், படைத்த இறைவனின் வேதச் சொற்களை ஏளனம் செய்வதைத் தொடர்கிறார். இதில் இவருடைய பெயர் குறித்து, திண்ணையின் பாதி இடத்தை அடைத்துப் பிலாக்கணமும் கூடவே. 

அது சரி, குலாம் என்ற 'யாரோ ஒருவரு'க்கு நான் அளிக்கும் விளக்கங்களுக்கு, மறுப்பு என்ற பெயரில் ஹெச்.ஜி. ரஸூல் என்பவர் ஏன் கிளை தாண்டிக் குதிக்க வேண்டும்? என்று வாசகர்கள் யாரும் கேட்டு விடக் கூடாது. இவர்தான் 'தீவிர விவாதம்' செய்யும் இஸ்லாமிய (?) முற்போக்கு (??) எழுத்தாளராம்! 

குலாமுடைய உளுத்துப் போன எழுத்துகளை இனங் காட்டுவதற்கு ஒரு வஹ்ஹாபி வீட்டு குலாம் (சிறுவன்) போதும். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களின் பாடங்களுக்கு ஊறு நேர்ந்து விடக் கூடாது என்பதால் நான் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். "தொடர்கிறார்" என்று இங்குக் குறிப்பிடுவதற்குக் காரணம் யாதெனில், 13 ஜனவரி 2006 நாளிட்ட திண்ணை இதழில் வெளியான இவருடைய கட்டுரையில் இறைமறை குர்ஆனில் இடம் பெறும் பல நிகழ்வுகளும் இறைவனின் கட்டளைகளும் இவரால் முன்பே ஏளனம் செய்யப் பட்டிருந்தன [சுட்டி-3]. 

'இறைவேதம்' என்று முஸ்லிம்கள் நம்புகின்றக் குர்ஆனை இவர் நம்ப மறுத்து ஏளனம் செய்வதால் குர்ஆனின் ஓரெழுத்துக்கும் குறைவு வந்து விடாது; இஸ்லாமுக்கு எவ்வித இழப்பும் ஏற்பட்டு விடாது என்பதை இனங் காட்டி, திண்ணையில் விளக்கமளித்திருந்தேன் [சுட்டி-4]. அதையெல்லாம் மறந்து விட்டு இப்போது 'நிழல் சண்டை' என்பதாக மாய்ந்து போகிறார் குலாம். எனக்கு குலாம்களோடு விளையாடுதலே விருப்பம்; சண்டையிடுதலன்று. இனி, விளையாட்டைத் தொடருவோம்: குலாமுக்கு என்னுடைய கேள்வி :
நபிகள் நாயகத்தின் பிறந்த தேதியும் நேரமும் குர் ஆனில் இல்லை என்பதால் இஸ்லாமிற்கு ஏற்படும் இழப்புகள் யாவை?
குலாமுடைய உளறல்:
நபிகள் நாயகம் பிறந்த தேதி, நேரம், குறித்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் எதற்கு என பூஞ்சைத்தனமான கேள்வியைக் கேட்கிறார் ஹாபி. (அப்படியா?) குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் இல்லை எனில் எதையும் ஏற்கமாட்டோம், நிராகரிப்போம் என்று முழங்கி வருகிறீர்களே... நபிகள் நாயகத்தின் பிறப்பு விவரங்கள் குறித்து எதுவும் குர்ஆனில் இல்லை. உங்கள் தர்க்கவாத அடிப்படையில் குர்ஆன் ஹதீஸ் படி பிறக்காத ஒருவரை எப்படி இறுதிநபியாக பின்பற்றுவீர்கள்? அவர் மூலம் அறிவிக்கப்பட்ட திருக்குர்ஆனை அல்லாவின் வேதமாக எப்படி நம்புவீர்கள்....
கேள்வி என்ன என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத குலாமின் உளறலுக்குக் குர்ஆனின் விளக்கங்கள்: முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறைவனின் தூதர் [003:144] ; [048:029]. இறைவனிடமிருந்து அருள்மறை குர்ஆனை வஹீ எனும் இறைச் செய்தியாகப் பெற்றவர் [002:097, 004:163, 010:002-015, 018:110, 046:009, 053:002-004 ; 076:023]. எம் தலைவரைக் குறிக்கும் கருவுக்குத் தொடர்புடைய வசனங்களை மட்டுமே ஈண்டு எடுத்தாண்டு, மற்ற வசனங்களை விரிவஞ்சி விடுத்தேன். "அரிசியைச் சமைத்துச் சோறாக்கி உண்ணுங்கள்" என்ற அறிவுரையும்தான் குர்ஆனில் இடம் பெறவில்லை. தமிழ் முஸ்லிம்கள் உட்பட பன்னூறாயிரம் முஸ்லிம்கள் அரிசிச் சோறு சாப்பிடுவதால் இஸ்லாமுக்கு என்ன இழப்பு? குர்ஆன் என்பது பிறப்பு-இறப்புப் பதிவுப் புத்தகமன்று என்ற அடிப்படையைக்கூட அறியாத இந்த அறிவுசீவிதான் இறைவனுடைய சொற்களை மனிதர்களின் கவிதை வரிகளின் சாயல் இருப்பதாக ஆய்வாளர்கள் (?) ஒப்பிட்டுக் கூறுவதாகக் கூத்தடிக்கும் இஸ்லாமிய முற்போக்கு எழுத்தாளராம் - சிரிப்பை அடக்கிக் கொள்ளச் சிரமமாயிருக்கிறது!  

"இவர் முதலில் தான் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் புனைவு மொழி கதையாடல்களிலிருந்து இந்த சிறப்புச் செய்திகளை ஆரம்பிப்பதே சரியானதாகும்" என்பதாக வேண்டுகோள் என்ற பெயரில் ஓர் அறிவுரையும் குலாமிடமிருந்து எனக்குக் கிடைத்திருக்கிறது. எதை, எப்படி ஆரம்பிக்க வேண்டும்; எப்படி 'பெருங்கதையாடல்களை' முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும். குர்ஆனையும் ஹதீஸையும் கதையாடல் என்று குறிப்பிடும் குலாமிடமிருந்தா நான் படித்துக் கொள்ள முடியும்? என்றாலும், குலாமுடைய வேண்டுகோளுக்கிணங்க குர்ஆனின் 19ஆவது அத்தியாயமான 'மர்யம்' வசனங்கள் 016 முதல் 024 வரைக்குமான விளக்கங்கள் இங்குத் தரப் படுகின்றன [சுட்டி-5]. அறிவுரையை அடுத்து, "தர்கா சியாரத்தையும் சாமி கும்பிடுவதையும் ஒன்றெனக் கூறும் வகாபியர்கள், கிராமப்புறங்களில் பத்திர காளி அம்மனுக்கும், கருப்பண்ண சாமிக்கும் ஆட்டை, மாட்டை பலி கொடுப்பதற்கும், முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளன்று ஆடுகளையோ, மாடுகளையோ, ராஜஸ்தானிலிருந்து வரவழைத்த ஒட்டகங்களையோ பலி கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?" என்ற குலாமுடைய வினா ஒன்றுக்கு, குர்ஆன் கூறும் விடையையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
"மேலும், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அல்லாஹ் உணவாக அருளியுள்ள(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவனுடைய பெயர் நினைவு கூரப்பட்டு அறுப்பதற்காகவே பலியிடுதலை(க் கடமையாக) விதித்திருக்கிறோம்" [022:034].
முஸ்லிம்கள் தம் இறைவனின் கட்டளையை ஏற்றுத்தான் ஹஜ்ஜின்போது மினாவில் மட்டுமின்றி, தம் இல்லங்களிலும் பலியிடுகின்றனர் என்பது குலாமுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் இது பாமர முஸ்லிம்களுக்கும் தெரிந்த மிகச் சாதாரணச் செய்தி. பத்ரகாளி அம்மன் மற்றும் கருப்பண்ணசாமிக்குப் பலியிடுவது குறித்தான விளக்கங்களை அவ்வாறு பலியிடும் 'கிராமப் புறத்து' நண்பர்களிடம் குலாம் கேட்டுத் தெளிவடைந்து கொள்ளட்டும். 

இறுதியாக, பொருத்தமான சிறப்புச் செய்தி-2:
"தென்காசிக்கு நாகூர்வலீ ஷாஹுல் ஹமீது வந்தவேளை அங்குக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அவரும் அவருடன் வந்த சீடர்களும் உண்ண உணவின்றித் தவித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாதாகோவில் மாட்டைத் திருடி, பலி கொடுத்து விருந்து வைத்துத் தின்று விட்டனர். இதையறிந்த மாதாகோவில் ஆட்கள் வந்து கேட்டபோது, ஷாஹுல் ஹமீது வலீயும் அவர்தம் சீடர்களும் சாப்பிட்டுப் போட்ட மாட்டின் எலும்புகளை ஒன்று திரட்டி, ஷாஹுல் ஹமீது வலீ தன் கோலால் அடிக்கவே மாடு எழுந்து (!) நின்றது. மாதாகோவில் ஆட்கள் தம் மாட்டை ஓட்டிச் சென்றனர்."
கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 234இல் 15-16 வரிகள் 5ஆவது ஹிக்காயத்தாக இச்சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. 

ஊரான் வீட்டு மாட்டைத் திருடி உண்டு கொழுப்பதுதான் குலாமுடைய கடைச் சரக்கான உளுத்துப் போன 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிதுக் காவியம் என்பது வாசகர்களுக்குத் தெளிவாகியிருக்கும். சமாதிப் புரோகிதர்களின் வயிறுகள் மட்டுமின்றி, எழுத்துப் புரோகிதர்களின் வயிறுகளும் எரிகின்றன என்றால் காரணமில்லாமலா? ஒருகாலத்தில் நிரம்பி வழிந்த உண்டியல்கள் வஹ்ஹாபிகளின் வரவால் இன்றைக்கு அதலபாதளத்தில்! 

சிறப்புச் செய்திகள் தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ

சனி, செப்டம்பர் 23, 2006

சிறப்புச் செய்திகள்-1

எனது 03.02.2006 திண்ணைக் கடிதத்தில் "சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் இஸ்லாமோடு என்ன தொடர்பு?" என்று குலாம் ரஸூலுக்கு ஒரு வினா வைத்திருந்தேன் [சுட்டி-1]. ஆறு மாதங்களாகியும் அதற்கு விடை சொல்ல முடியாமல் இப்போது 'பித் அத்' என்ற சொல்லாடலுடன் புதிதாக ஒரு அதி நவீனக் கண்டு பிடிப்பொன்றை, நான் ஏற்கனவே பதில் [சுட்டி-2] அளித்து விட்ட முஜீபு ரஹ்மானின் தலைப்பை[சுட்டி-3]க் காப்பியடித்து குலாம் வெளியிட்டிருக்கிறார். 

கருவிற்குள் புகுமுன் குலாமுக்கு இன்னொரு வினா: நபிகள் நாயகத்தின் பிறந்த தேதியும் நேரமும் குர் ஆனில் இல்லை என்பதால் இஸ்லாமிற்கு ஏற்படும் இழப்புகள் யாவை? இனி 'பித் அத்' என்றால் என்னவென்று அறிந்து தெளிவோம். எல்லாரையும் போலவே சமகால முஸ்லிம்களும் கணிணியைப் பயன் படுத்துகின்றனர்; சடுதியில் பயணிக்கும் நில-நீர்-வான் ஊர்திகளைப் பயன் படுத்துகின்றனர். அச்சிடப்பட்ட திர்ஹம், தினார், ரியால் மற்றும் பெட்ரோல் கைக்கடிகாரம், கண்ணாடி போன்று நாளாந்தம் கண்டு பிடிக்கப் படுகின்ற அறிவியல் சாதனங்கள் ஆகியனவும் மற்றவர்களைப் போலவே முஸ்லிம்களாலும் பயன் படுத்தப் படுகின்றன. இவை போன்ற எண்ணற்ற இன்ன பிறவும் நபிகள் நாயகம் காலத்தில் இல்லாதிருந்து 'புதிதாக உருவான புதுமைகள்'தாம். 'பொல்லாப் புதுமை - பித் அத்' என்று முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) கூறும் மவ்லிதுக்கும் மீக்கூறியப் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் என்ன தொடர்பு? கணிணியும் மவ்லிதும் நபிகள் நாயகத்தின் காலத்தில் இல்லாத, அண்மைக் கால 'கண்டு பிடிப்புகள்' என்றாலும் கணிணியைப் பயன் படுத்துவது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தர வல்லது என்று எந்த முஸ்லிமும் (அல்லது வஹ்ஹாபியும்) நம்புவதில்லை. ஆனால் மவ்லிதுக் கச்சேரிகளுக்கு அவ்வாறு சக்தி இருப்பதாக மவ்லிதுப் புரோகிதர்களால் பாமர முஸ்லிம்களிடம் மூடநம்பிக்கை போதை ஏற்றப் பட்டு, புரோகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர் முயற்சி நடக்கிறது. 

"எனது தாய் மொழியான அரபியைப் பேசுவோருக்கு வறுமை நீங்கும்; வளம் பெருகும். பிணிகள் அவியும்; நலன்கள் குவியும். அரபு மொழி மட்டுமே அல்லாஹ்வின் அருள் பெற்றது; மற்றவை அனைத்தும் பொருளற்றது" என்பதாக மனிதர்கள் பேசுகின்ற மொழிகளில் நபிகள் நாயகம் உயர்வு-தாழ்வு கற்பிக்கவில்லை. எனவே, வஹ்ஹாபியின் தாய்மொழியான தமிழோ வேறெந்த மொழியுமோ 'பித் அத்' பட்டியலில் வருவதற்கு வாய்ப்பேயில்லை. ஆனால் மவ்லிதுக் கச்சேரிக்கு அத்தனை ஆசை வார்த்தைகளும் கூறப் படுகின்றன. இன்னதென்று பொருளறியாது எழுதித் தள்ளுவதை விட மேற்காணும் இரு உவமைகளே திண்ணை வாசகர்களுக்குப் போதும். அவர்களுடைய புரிதலின் நீட்சி குறித்து எனக்கு நம்பிக்கை உண்டு. 

மனிதகுலத்துக்குப் பலனளிக்கும் 'நல்ல புதுமைகளை' இஸ்லாம் புறந்தள்ளச் சொல்லவில்லை; மாறாக, அவற்றுக்கு இஸ்லாமியப் போலி முத்திரை குத்தி, அவை இம்மை/மறுமை வாழ்க்கைகளில் இறைவனின் அருளைப் பெற்றுத் தர வல்லவை என்று பம்மாத்துச் செய்யும் செயலைத்தான் 'பித் அத் - பொல்லாப் புதுமைகள்' என்று இனங்காட்டுகிறது.
"வார்த்தைகளில் வாய்மையானது அல்லாஹ்வின் வேத(வார்த்தையா)ம். வழிமுறைகளில் சிறந்தது முஹம்மதின் வழிமுறை. செயல்களில் தீயது மார்க்கத்தில் புதிதாக ஒன்றைப் புகுத்துவதாகும். எல்லாப் புதுப் புகுத்தலும் பொல்லாப் புதுமைகளாம். பொல்லாப் புதுமைகள் எல்லாமும் வழிகேடே! எல்லா வழிகேடும் பொல்லா நரகில் சேர்க்கும்"
என்பதுதான் அண்ணலாரின் எச்சரிக்கை [சுட்டி-4]. ஆனால், "தமிழ் பேசினால் நரகம்தான்" என்று வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் திருகுதாள திரிபுவாதம் செய்ய முயல்கிறார் குலாம். பிஸ்கட் முதல் பிரியாணி வரை மவ்லிதுக் கச்சேரிகளில் வழங்கப் படும் பிரசாதங்கள் வஹ்ஹாபிகளுக்கு மட்டும் சுவைக்காதா என்ன? பின் ஏன் மவ்லிதுகளை மறுக்க வேண்டும்? கச்சேரிக்குள் புகுந்து விட்டால் புரிந்து விடும். 

போவோம், வாருங்கள் வாசகர்களே! 

அண்ணலாரின் காலத்துக்கும் முன்னர் இயற்றப் பட்டத் "திருக்குறளின் ஆசிரியர் யார்?" என்று கேட்டால், ஆரம்பப் பள்ளி மாணவ-மாணவியர்கூட "திருவள்ளுவர்" என்று விடை கூறிவிடுவர். ஆனால், முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட மவ்லிதுகளின் ஆசிரியர் இன்னார்தான் என்று எவருக்கும் தெரியாது என்பதுதான் இன்றுவரை உண்மை. எனினும் இஃது ஒரு பெரிய கெடுதியில்லைதான். கெடுதிகளெல்லாம் பின்னால் வருகின்றன. மவ்லிதுக் கச்சேரிகளில் இரு கண்ணிகளுக்கிடையில் 'ஹிக்காயத்' என்னும் மவ்லிது நாயகர்கள் குறித்தச் 'சிறப்புச் செய்திகள்' வாசிக்கப் படும். அரபு மொழிச் சொற்களால் பாடப் பட்டுள்ள மவ்லிதுகள் திண்ணை வாசகர்களுக்கு அலுப்பூட்டக் கூடும் என்று நான் அஞ்சுவதால், 'சிறப்புச் செய்திகளை' மட்டும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். ("அரபுச் சொற்கள் எங்களுக்கு அலுக்காது" என்ற உறுதிமொழியுடன் வாசகர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வற்புறுத்தினால் அரபியையும் எழுதுவேன்). சிறப்புச் செய்தி-1
நாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, "திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்டங் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்" என்று சபதமேற்றாள்.
(முஜீபு ரஹ்மானின் 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற காப்பியடிக்கப் பட்டத் திண்ணைத் தலைப்புடன் இணைத்து, இதைத்தான் 'வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகள்' என்று படிமமாக குலாம் கூறுகிறாரோ என்ற ஐயம் எனக்குண்டு).
அவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.
கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் ஏழாவது கண்ணி 27 முதல் 32 வரிகளில் முப்பதாவது ஹிக்காயத்தாக இச்சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. "பாதுகாக்கப் படவேண்டும்" என்று குலாம் பதறித் துடிக்கின்ற 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிது நூலில்தான் மேற்காணும் 'சிறப்புச் செய்தி' இடம் பெற்றுள்ளது. இதுபோல் நிறையச் சிறப்புச் செய்திகள் 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிது நூலில் உள்ளன. வாசகர்களின் ஆர்வத்தைப் பொருத்து ஒவ்வொன்றாய் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். 

கூர் மழுங்கிய வாட்களை இனிமேல்தான் தீட்டத் தொடங்க வேண்டும்.
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 22, 2006

கிச்சன் ஜர்னலிஸம்

முன் குறிப்பு: இவ்வாக்கம், நேசகுமார் என்பவர், திண்ணையில் உளறியதற்கான எதிர்வினையாகும். இதைத் திண்ணை பிரசுரிக்கவில்லை. தனிமனித எள்ளல் என்பதாகத் திண்ணை காரணம் வைத்திருக்கலாம். வலைப் பதிவர்களுள் பத்தோடு பதினொன்றான, அந்தப் பதினொன்றிலும் மனநோயாளியான நேசகுமாரை எள்ளுவது திண்ணையின் பாலிஸிக்கு எதிரானதாக இருக்கலாம். கோடானுகோடி முஸ்லிம்களின் உயிரினும் மேலான தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனம்போனவாறு திட்டித் தீர்ப்பது தனிமனிதத் தாக்குதலில்லையா? அதைப்பிரசுரிப்பது எழுத்து வக்கிரமில்லையா? நல்ல பாலிஸிதான் போங்க!
___________________________________________________ 

ஜன்னல் ஜர்னலிஸம் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிச்சன் ஜர்னலிஸம்? அதுதான் கமலா சுரைய்யா விஷயத்தில் நடந்தது. சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு, கழிவுகளைத் தெருவிலுள்ளக் குப்பைத் தொட்டியில் கொட்ட வந்த சுரைய்யாவின் வீட்டு வேலைக்காரியை இடைமறித்தது ஒரு பரிதாபக் குரல்: "அம்மோய்! இந்தப் பக்கமா போடுங்கம்மோய்" என்று கெஞ்சிக் கூத்தாடிக் கமலா சுரைய்யா வீட்டுக் கழிவுகளை வாங்கிப் போய், அந்தக் கொஞ்சக் கழிவுகளோடு, தன்னிடம் மிகுதியாய் மிஞ்சியிருந்தவற்றைப் போட்டுக் கலக்கி, தானே சமைத்ததுபோல் 'மடுத்த' தட்டில் வைத்து 'மாத்ருபூமி'யில் பரிமாறினார் அதன் ஃபோட்டோகிராஃபர்.

"ஆஹா எவ்வளவு அற்புதமான உணவு! என்னே மணம், என்னே ருசி! மலையாளிகள் மட்டும் இதை உண்பதா? தனியொரு தமிழனுக்கு இவ்வுணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற சூளுரையோடு அதற்கு உள்ளூர் மசாலா தூவி, திண்ணைத் தட்டில் வைத்துச் சுடச்சுடப் பரிமாறினார் இரா.முருகன்.

இதெல்லாம் இருபது மாதங்களுக்கு முன்னர் பரிமாறப் பட்டு ஆறிப்போன அவியல். உடனடியாக தேஜஸிலும் அண்மையில் விகடனிலும் வெளிவந்த கமலா சுரைய்யாவின் உண்மையான பேட்டிகளையும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதிலிருந்து இன்றுவரை மாறாத கமலா சுரைய்யாவின் நிலையையும் அறியாமல் திண்ணையில் உளறி [சுட்டி-1], அபூசுமைய்யா [சுட்டி-2] மற்றும் இப்னு பஷீர் [சுட்டி-3] ஆகியோரின் உறுதியான சான்றுகளுடன் கூடிய, நிதானமான எதிர் வினைகளால் முகமிழந்து நிற்கும் நேசகுமார் என்பவரைப் பற்றி அறிய முற்பட்டபோது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின! இவருடைய அகநோயின் வீரியம் புரியாமல், 'நட்புக்கான வழியும் மொழியும்' என்று நாகூர் ரூமி, இவருக்கு அமிர்தாஞ்சன் தடவி [சுட்டி-4] குணப் படுத்த வீண் முயற்சி செய்துள்ளார். 

இஸ்லாமோஃபோபியா என்ற மன நோயினால் மிகக் கடுமையாகப் பீடிக்கப் பட்டுள்ள இவருக்கு அனுபவமுள்ள சிறந்த மருத்துவர்களான அபூஆதில், அபூமுஹை, அப்துல்லாஹ், சுட்டு விரல், ஸலாஹுத்தீன், அக்பர் பாஷா, நல்லடியார், சுவனப் பிரியன், இப்னு பஷீர் போன்றோரால் தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை இவர் 'உள்வாங்க' மறுப்பதால் உளறல் நோய் நீங்கிய பாடில்லை. அதனால்தான் ஜிஹாதைப் பற்றி முன்னர் உளறியதையே மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுகிறார் [சுட்டி-5].

இவரது தொடர் உளறல்களுக்கு, குறிப்பாக "முஹம்மது விஷம் வைத்துக் கொல்லப் பட்டார்" என்ற உளறலுக்கு, திண்ணை மருத்துவர் ஒருவரும் தம்மால் முடிந்தவரை சிகிச்சை அளித்திருக்கிறார்; [சுட்டி-6] ம்ஹூம், பயனில்லை.

இவருக்கு அளிக்கப் பட்டத் தொடர் சிகிச்சையையும் இவருடைய அத்து மீறிய உளறல்களையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கம்பவுண்டர் இறை நேசன் என்பவர் இவரை 'மறை கழண்ட கேஸு' என்று [சுட்டி-7] முடிவுக்கு வந்திருக்கிறார். இறை நேசனின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. இவர் மறை கழண்ட கேஸல்ல; மாறாக, தேறாத கேஸ் என்பது என் கணிப்பு.

மன நோயாளி என்பதால் இவர் மீது பரிவும் இவருடைய உளறல்களால் சில முஸ்லிம்கள் மருத்துவப் படிப்பைப் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நன்றியுணர்வும் ஒருபுறமிருந்தாலும் இவர் மேலும் மேலும் உளறிக் கொட்டுவதைப் பார்க்கும்போது - அதுவும் திண்ணை என்ற திறந்த வெளியில் - இவர் மீது பரிதாமே எஞ்சி நிற்கிறது!
ஃஃஃ
4- http://www.tamiloviam.com/unicode/11030512.asp

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2006

களையிழந்தக் கச்சேரிகள்

ஒரு காலத்தில் பாமரத் தமிழ் முஸ்லிம்களைச் சுரண்டிக் கொழுத்த அரபுப் பாட்டுக் கச்சேரிகளைத் தாங்கிப் பிடிக்க வேண்டி, 'மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்' செய்வதற்கு குலாம் ரஸூல் திண்ணையில் குட்டிக் கரணமெல்லாம் போட்டுக் காட்டிப் படாத பாடு பட்டிருக்கிறார் [சுட்டி-1]. இஸ்லாத்தின் எதிரிகளாகத் திகழ்ந்த குரைஷியர்கள், அரபுக் கவிதைகளாலும் இஸ்லாத்தை இழித்துரைத்த காலகட்டத்தில், "அவர்களுக்கு(க் கவிதையால்) பதிலடி கொடுப்பீராக, உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்" [சுட்டி-2] என்று ஹஸ்ஸான் என்ற தம் தோழருக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டதை, குலாம் எவ்வாறு திரிக்கிறார் பாருங்கள்:

"... நபிகள் நாயகத்திற்கென அமைக்கப்பட்ட தனிமிம்பாரில் (மேடை) நபிநாயகத்தை புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் கவிதை பாட அல்லாஹ்வின் தூதரைப் புகழும் காலமெல்லாம் பரிசுத்த ஆவியைக் கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துகிறான் என நபிகள் நாயகம் வாழ்த்தியதும், ஹதீஸ்கிரந்தங்களின் சரித்திர சம்பவங்களாக நிலை பெற்றுள்ளன"

'ஹதீஸ் கிரந்தங்கள்' என்ற பெயரில் புரோகிதர்கள் 'புருடா' விட்டதெல்லாம் மலையேறி நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதை அவர் புரிந்து கொள்வது நலம் பயக்கும். நபித்தோழர்களில் ஓரிருவர் - வாதத்தைத் தொடர்ந்து முடிவை எட்டுவதற்காக - நபியைப் புகழ்ந்து பாடியதாகவே இருக்கட்டும். அந்தப் புகழ்ப் பாக்களை, "உங்கள் வீட்டில் பாடினால் செல்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொட்டும்; நோய்கள் ஓடிப்போம்; மகிழ்ச்சி தாண்டவமாடும்" என்றெல்லாம் கடந்தகாலப் புரோகிதர்கள் கதையளந்து, சமகாலப் பாமர முஸ்லிம்களை ஏமாற்றியதுபோல், எந்த நபித்தோழரும் பாட்டுப்பாடி வயிறு வளர்க்கவில்லை. நபித்தோழர்களின் வசைக் கவிகளின் நீட்சிதான் மவ்லிது என்னும் - ஐந்திற்கும் பத்துக்கும்; ஐம்பதுக்கும் நூறுக்கும், கூலி வாங்கிக் கொண்டு, பேசிய கூலிக்குத் தகுந்தாற்போல் கச்சேரியின் நேரத்தைச் சமன் செய்து கொண்டு பாடப்படும் - 'பிறந்தநாள்' புகழ்ப் பாடல்கள் என்பது கடைந்தெடுத்த புரட்டல்லாமல் வேறென்ன? "மவ்லாய ஸல்லி வஸல்லிம் தாஇமன் அபதா" (எம் தலைவா! என்றென்றும் எப்போதும் அருள்மழை பொழிவாயாக) என்பது மவ்லிதின் தலையாய ஒரு வரி. ஓர் அங்கீகாரத்துக்காக மவ்லிதில் புகுத்தப் பட்ட, கவிஞர் பூஸரீயின் 'கஸீதத்துல் புர்தா'வின் முதல் வரிதானது. ஒரு காவியத்தைப் புனையத் தொடங்கிய, அரபு மொழியில் வியக்கத் தக்கப் புலமை பெற்றிருந்த பூஸரிக்கு, இரண்டாவது அடி எழுத முடியவில்லையாம். அப்புறமென்ன? புராணத்துக்கு 'இஸ்லாமிய முத்திரை' பெறுவதற்காக அவர் கனவு காண வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டார். "அலா ஹபீக்க கைரில் கல்கி குல்லி ஹிமி" (அனைத்துப் படைப்புகளிலும் சிறந்தவரும் அதிமுக்கியமானவரும் உன் அன்புக்குரிய[நபிய]வரின் மீது) என்ற இரண்டாவது அடியை எடுத்துக் கொடுக்கக் கவிஞரின் கனவில் நபியே வந்து தற்புகழ்ச்சி செய்து கொண்டதும் அதுவே தமிழில் 'புரவலர் போர்த்திய பொன்னாடை'யுமானதும் பழங்கதை. ஆனால், உண்மை நிலை நேரெதிர்:

கவிதையை நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்கவில்லை; அவருக்கு அது தகுதியானதன்று"

என்று அல்லாஹ் [036:069] அறுதியிட்டுக் கூறுகிறான். மேலும் சொற்களுக்குச் சொந்தக்காரன் சொல்கிறான்:

"இஃது ஒரு கவிஞனின் சொல்லன்று ..." [069:041];

குலாமோ "திருக்குர்ஆனே தன்னை கவிதையாக அடையாளப்படுத்திக் கொள்கிறது" என்று திருகுதாளம் செய்யப் பார்க்கிறார். 1400 ஆண்டுகளுக்கும் முன்னர் நிறைவடைந்து விட்ட இஸ்லாத்திற்குள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து புகுந்து ஆட்டம் போட்டு ஓய்ந்து, களையிழந்துபோன மவ்லிதுக் கச்சேரிகளுக்குக் களையூட்டுவதற்காகக் குர்ஆனுடைய சொற்களைக் குப்பையில் வீசும்படி குலாம் வழங்கும் அறிவுரை, நம்மைப் பொருத்தவரை செல்லாக் காசுதான்.
***
உலகத்தில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரை ஒன்றுதான்.
"அண்மையில் சுன்னத் வல் ஜாமாத்துக்கும் தமிழ்நாடு தவ்ஹீது ஜாமத்துக்கும் இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதத்தில் சுன்னத் வல் ஜாமத்தின் மௌலவி ஜாமாலி நன்றாக பதில் சொல்லியிருக்கிறார். விவாத சி.டிக்கள் விற்பனையில் உள்ளது வஹ்ஹாபி வாங்கிபடித்து தெளிவடைவாரென்று நம்புகிறேன்"
இது முஜீபுரஹ்மான் எனக்குத் திண்ணையில் வழங்கிய அறிவுரை [சுட்டி-3]. அவருக்கு என் நன்றி!
முயன்றும் முடியவில்லை என்பதால் என்னுடைய தோல்வியை இங்கு நான் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்; அதுதான் எழுத்து நேர்மையுங்கூட. சீ.டீக்களை என்னால் 'படிக்க' முடியவில்லை; ஆனால் நல்லவேளை பாருங்கள், என்னுடைய சீ.டீ. ரோம் படித்தது! எனவே, என்னால் பார்க்க-கேட்க முடிந்தது. ஒளிப்பதிவு சுமார் ரகம்தான் என்றாலும் ஜாமாலி வகையாராக்களின் முகங்களில் தோன்றிய திடுக்கங்களின்போது தெளிவாகவே இருந்தது. நான் மட்டும் பார்த்தால் போதுமா? ஆர்வமும் நேரமும் உள்ள திண்ணை வாசகர்களும் பார்த்து-கேட்டுப் பயனடையட்டுமே! [சுட்டி-4]. ஆர்வமிருந்தும் நேரம் அதிகமில்லாதவர்களுக்கு விவாதச் சுருக்கம் படிக்கக் கிடைக்கிறது [சுட்டி-5] என்பதாக சீ.டீ. கொடுத்த அன்பர்கள் தெரிவித்தனர், அவர்களுக்கும் என் நன்றி!
***
"கடவுள் இல்லை" என்று சொல்லும் நாத்திகர்கள் யாரும் அதற்குச் சான்றுகள் தர வேண்டியதில்லை. "உண்டு" என்று வாதிப்பவரே சான்றுகளை முன்வைக்க வேண்டும். மீண்டும் மீண்டும், "இல்லை என்று நிரூபிக்கட்டும் பார்கலாம்" என்று 'மண்ணாந்தை'த் தனமாக சூபி வெற்றுச் சவடால் விடாமல் சற்றே அறிவைப் பயன்படுத்தி எழுத முன்வந்தால் மேற்கொண்டு பதில் தரலாம். இன்னொரு விண்ணப்பம்: கபா, அல்லா, இபுராகீம் முதலிய இஸ்லாம் தொடர்புடைய சொற்களை முஸ்லிம்கள் யாரிடத்திலாவது கேட்டு எழுதினால் என் திண்ணை வாசக நண்பருக்கு நான் விளக்கம் சொல்லும் நேரம் மிச்சமாகும்; நன்றி!
ஃஃஃ

புதன், ஜூலை 26, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 4

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்து மக்கத்துக்காரர்கள் பல தெய்வக் கொள்கையிலும் சிலை வழிபாட்டிலும் பற்றுறுதி கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்ற ஏகத்துவக் கொள்கையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இதைக் கேட்ட, பல தெய்வக் கொள்கையில் ஊறிப் போயிருந்த மக்கத்தவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறிப்பிட்டு, "பித்துப் பிடித்த ஒரு கவிஞருக்காக நாங்கள் எங்களுடைய கடவுளர்களை விட்டு விடுவோமோ?" எனப் பிராலாபித்தனர் [அல்குர்ஆன் 037:036]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துப் பைத்தியக்காரக் கவிஞர் என்றும் அவர்கள் எடுத்தோதிய அல்குர்ஆனைக் கவிதை என்றும் ஒதுக்கித் தள்ளக்கூடிய அளவுக்கு அந்த மக்கள் தங்களுடைய பல தெய்வக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், நம்முடைய முஸ்லிம் சகோதரர்களில் பலர் - "ஏகஇறைக் கொள்கையில் திடமான ஈமான் கொண்டிருக்கிறோம்" எனக் கூறிக் கொள்பவர்கள் - பைத்தியக்காரக் கவிஞர்களைப் போன்று பாடியுள்ளவர்களை எல்லாம் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் (கனவில்) அடியெடுத்துக் கொடுக்கப்பட்டவர்கள்" என்றும் அக்கவிஞர்களின் பொய்யான கற்பனைகளையெல்லாம் வேதம் போன்றும் காதலித்துத் திரிகின்றனர். மக்கத்துக்காரர்கள் வேதத்தைக் கவிதை எனத் தூற்றினர்; இவர்களோ கவிதையை வேதம் எனப் போற்றுகின்றனர். இருசாராரையும் ஒப்பு நோக்கினால், மக்கத்துக் குரைஷியருக்கு அவர்தம் பல தெய்வக் கொள்கையிலிருந்த பிடிமானம்கூட நம்மவருக்குத் தங்களுடைய ஏகஇறைக் கொள்கையில் இல்லாமற் போனது பரிதாபத்திற்குரியதன்றோ! இவர்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வேதப் புத்தகங்கள் என்பதுபோல் அவற்றின் மீது குன்றாத பக்தி கொண்டிருக்கின்றனர். இந்த இலக்கியங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தால் இந்த இலக்கியப் பித்தர்கள் கொதித்தெழுகின்றனர். அல்லாஹ்வின் வேதமும் அந்த வேதத்துக்கு விளக்கமாக அமைந்த, உறுதி செய்யப்பட்ட அவனுடைய தூதரின் வாழ்வியலும்தாம் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை. அவையல்லா எவையும் முற்றிலும் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்துவிட இயலாது. இதனையும் அல்லாஹ்வே தன் வேதத்தில் ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றான்:
"இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" [004:082].
மனிதர்களுள் மிகச் சிறந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த அறிஞர்களால் கண்ணும் கருத்துமாக வரையப்பட்ட அரசியல் சாசனச் சட்டங்களேகூட முரண்பாடுகளின் மொத்த உருவமாக அலைக்கழிக்கப் படுவதையும் பலமுறை அவை திருத்தப்படுவதையும் நாம் கண்டு வருகிறோம். அறிவுப் பூர்வமாக அணுகாமல் வெறும் உணர்வுப் பூர்வமாகவும் கற்பனை ரீதியாகவும் செயல்பட்டு, கவிதை புனைகின்ற நிலையிலேயே பெரும்பான்மையான கவிஞர்கள் திகழ்ந்துள்ளார்கள். எனவே, இந்த உணர்ச்சிப் படையல்களில் முரண்பாடே இடம் பெற்றிருக்க இயலாது என்று எங்ஙனம் கூறவியலும்? "Poet's appeal is sensuous, not intellectual. His function is not to prove, but to make to feel" (கவிஞனுடைய அணுகுமுறை உணர்வுப் பூர்வமானது; அறிவுப் பூர்வமானதன்று. அவனது பணி மெய்ப்பித்துக் காட்டுவதன்று; உணரச் செய்வது மட்டுமே) என நெய்ல்ஸன் என்னும் அறிஞர் தமது Essentials of Poetry என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். ஏனைய கவிஞர்களுக்கு இந்த அணுகுமுறை பொருந்தி வரலாம். ஆனால், இஸ்லாமியக் கவிஞனுக்கு இந்த விதியை நாம் செலுத்தவியலாது. ஏனெனில், குர்ஆன்- ஹதீஸ் கூறிடும் உண்மைகளை மெய்ப்பித்துக் காட்டுதலைப் புறக்கணித்துவிட்டு வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி மனம்போன போக்கில் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 22, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 3

இறைவன் சொல்லாத ஒன்றை, அவன் மீது இட்டுக்கட்டிக் கற்பனை செய்து பொய்யுரைப்பது மாபெரும் பாவச் செயலாகும். இவ்வாறு எவர் பொய்யுரைக்கத் துணிகிறாரோ அவருக்கு இறைவன் மாபெரும் தண்டனையை வழங்கியே தீருவான் என்று இறைமறை வன்மையாக எச்சரித்துக் கூறுகின்றது. இறைவனுடைய படைப்புகளிலெல்லாம் அவனுக்கு மிகவும் நேசத்துக்குரிய படைப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகழுகின்றார்கள். இறைவன் மீது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி மிகைப்படுத்திக் கூறுதலாகிய வெறுக்கத்தக்கச் செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிஞ்சிற்றும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். அப்படியிருந்தும்
இஃது ஒரு கவிஞனின் சொல்லன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே நம்புகின்றீர்கள். (இஃது) ஒரு குறிகாரரின் சொல்லுமன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே அறிவுரை பெறுகின்றீர்கள். (இஃது) அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டது. ஒரு சொல்லையேனும் (நபியாகிய) அவர் எம் மீது கற்பிதமாய்க் கூறினால், அவரை வலக்கரப்பிடியாகப் பிடித்து அவருடைய உயிர்நாடியைத் துண்டித்து விடுவோம் [069:041-046].
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். இந்த எச்சரிக்கை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயிலாக நம் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையேயாகும். இந்த அளவுக்குக் கடுமையான கண்டனத்தையும் தண்டனையையும் இறைவன் பிரகடனப்படுத்திய பின்னரும் இதையெல்லாம் பொய்யாக்கிப் புறந்தள்ளிவிட்டு, தம் மனம்போன போக்கில் செயல்படுபவர்களையும் நாம் காணுகின்றோம். இதையும், "உங்களில் இதைப் பொய்யெனக் கொள்பவர் உள்ளனர் என்பதைத் திண்ணமாக நாமறிவோம்" என்பதாக [069:049] இறைவன் முன்னறிவிப்புச் செய்துள்ளான். இவை மட்டுமின்றி, அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பதனை மிக வன்மையாகக் கண்டிக்கக்கூடிய ஏராளமான இறைவசனங்கள் இறைமறையில் மேலும் இடம் பெற்றுள்ளன: [003:024, 003:094, 004:048, 004:050, 005:101, 006:093, 006:138, 006:140, 006:144, 007:037, 007:152, 010:017, 010:039, 010:060, 011:018, 011:035, 016:056, 016:087, 016:105, 016:116, 017:073, 018:015, 020:061, 029:013, 029:068, 034:008, 046:008, 061:007]. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பவர்கள் அநியாயக்காரர்கள், வழிகேடர்கள், சாபத்திற்குரியவர்கள், நரகவாசிகள், பாவிகள் என்றெல்லாம் இவ்வசனங்களில் கடுமையாகக் கண்டித்துள்ளான் இறைவன். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 15, 2006

500 டாலர் நகைச்சுவை

மவ்லிதுகளின் ஒரேயொரு சொல்லெடுத்தும் பொருள் சொல்லாத 'மவ்லிதுகளின் அர்த்தப் பரப்புகள்' திண்ணையில் சென்ற வாரம் பரத்தப் பட்டிருந்தன. அதில், "அரபு மொழியிலமைந்த மவ்லிதுகளை நேரடி மொழிப்பெயர்ப்பை அளித்து அதற்கு மாசு கற்பிக்கும் உள்நோக்க வியாக்கியானம் செய்யும் அரசியல் வகாபிகளிடம் காணப்படுகிறது" என்ற அறிவார்ந்த? குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டதால் எதிர்வினை எழுத வேண்டியதாயிற்று. இல்லாததை மடியிலிருந்து எடுத்துப் போட்டால்தானே 'உள்நோக்க வியாக்கியானம்' என்று சீறிப் பாயலாம்? நேரடி மொழிபெயர்ப்பிலேயே மாசு படுகிறதென்றால் விளக்கம் சொல்லப் புகுந்தால் என்னவாகும்? மவ்லிது என்றால் தமிழில் 'பிறப்பு' என்ற பொருளையும் அதுவே மீலாது என்று வழங்கப் படுகிறது என்ற சிறு விளக்கத்தையுங்கூட அவ்வளவு பெரிய 'பரப்பில்' காண முடியவில்லை! எவராலும் பெற்றெடுக்கப் படாத, எவரையும் பெற்றெடுக்காத [112: 003] ஏக இறைவனுக்கும் மவ்லிது; எவருக்கும் பிறந்தநாள் கொண்டாடாத இறைத்தூதருக்கும் மவ்லிது. போதாதென்று, அரபு விழுமியங்களுக்கும் ஒரு மவ்லிது பாடுகிறார் கட்டுரையாளர். இவருடைய பாட்டுக்குக் குர்ஆனையும் ஹதீஸையும் தஃப்ஸீரையும் தாளம் போடச் சொல்லிக் கெஞ்சுவதுதான் இதில் உச்சகட்ட நகைச்சுவை:
"மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு விழுமியங்களை புகழ்ந்தும் பாடப்பட்டிருப்பதற்கு புனித நூல்களான திருகுர் ஆன்,ஹதீதுகள், குர்ஆன் விரிவுரைகள்,ஹதீது விரிவுரைகள் மற்றும் வரலாற்று நூல்களில் பதிவுகள் நிறைய இருக்கிறது"
முஜீப் ரஹ்மானின் மேற்காணும் நகைச்சுவைக்கு 500 டாலர் காத்திருக்கின்றது. பரிசு பெறுவதற்காக அவர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mawlid@muttaqun.com மவ்லிது ஆர்வமுள்ள வாசகர்களுக்குத் தமிழில் மவ்லிது இலவசமாகக் கிடைக்குமிடம்: http://www.angelfire.com/tv2/avmaulid/
ஃஃஃ

வெள்ளி, ஜூலை 07, 2006

நியாயமான கேள்விகள்

'கபாவில் சமாதியா?' என்ற தலைப்பில் 'சூபிமுகமது' என்பார் திண்ணையில் [சுட்டி-1] எனக்காகச் சில கேள்விகளை வைத்திருந்தார்: 1) தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது-சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா? பதில்: முடியும் [சுட்டிகள் 2 முதல் 8 வரை] 2) இஸ்லாமியர்களின் ஹஜ் வழிபாடு பிற சமயத்தவரின் பார்வையில் ஒருவகை சமாதி/கல் வணக்கமாகவே கருதப்படுகிறது. பதில்: அது பிற சமயத்தவரின் பார்வை. 3) பணக்காரர்கள் மக்காவின் கபாவுக்கு செல்கிறார்கள். அங்குதான் அல்லாவின் சமாதி இருக்கிறது. பதில்: இல்லை. அல்லாஹ்வுக்கு சமாதி இருப்பதாகச் சொல்லும் சூபிதான் சமாதியைப் படம் பிடித்துப் போட வேண்டும். 4) அரபு பழங்குடிகள் அல்லா என்னும் ஆண்கடவுளை சிலையாக வணங்கி வந்துள்ளார்கள் என்பது சமூக வரலாறு. பதில்: வளமான கற்பனையைச் 'சமூக வரலாறு' என்றெல்லாம் அறிவுடையோர் எவரும் கூறுவதில்லை. சூபி அவ்வாறு கூறிக் கொள்வதில் எனக்கு அட்டியில்லை. 5) கறுப்புக் கல்லை தொட்டு முத்தமிடுவது பிறருக்கு கல் வணக்கமாகவே படுகிறது. பதில்: பிறருக்குத்தானே? படட்டும். ஆனால் முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறு [சுட்டி-9] 6) கபாவின் உட்புறத்தில் என்ன இருக்கிறது வகாபி ஆதாரத்தோடு சொல்லமுடியுமா? பதில்: முடியும். இப்போது காற்று இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கஅபாவின் உட்புறத்தைத் தூய்மை செய்வதைத் தொலைக்காட்சியில் காட்டுவர். அப்போதுத் துப்புரவுத் தொழிலாளர்களையும் பார்க்கலாம். 7) மக்காவின் புனித எல்லைமுழுவதும் மகாமு இபுராகீம் என்றே அழைக்கப்படுகிறது. பதில்: இல்லை. 'ஹரம்' (புனிதம்) என்று அழைக்கப் படுகிறது. 8) கபாவிற்கு உள்ளே அஷ்ட கோண வடிவ மகாம் ஏ இபுராகீமின் பீடம் உள்ளது என்றொரு கருத்தும் உள்ளது. பதில்: யாரிடமுள்ளது? 9) ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக்கல்லை ஸ்ங்கே அஷ்வேத என்னும் பொருள்படும் வெண்மை அல்லாத கல் எனவும் இது சிவலிங்கத்திற்கு ஒப்பானது எனவும் கூட பொருள் கொள்ளப்படுகிறது. பதில்: யாரால் கொள்ளப் படுகிறது?
***
பதில்கள் முடிவுற்று, கேள்விகள் தொடர்கின்றன: திண்ணை வாசக நண்பர்: பூனக்குட்டி வெளியே வந்து பொத்துன்னு விழுந்துடுச்சே தெரியுமா? நான்: என்ன சொல்றீங்க? நண்பர்: சூபிமுகமது என்ற பெயரில் திண்ணையிலெ எழுதுற ஆளு முஸ்லிமில்லே! நான்: எப்படிச் சொல்றீங்க? நண்பர்: அல்லாவின் சமாதி, அல்லாவின் சிலை, கபாவுக்குள்ளே இபுராகீம் பீடம், ஸ்ங்கே அஷ்வேத, சிவலிங்கம் அப்டில்லாம் எழுதுறது இருக்கட்டும். ஒரு முஸ்லிமுக்கு இப்டியெல்லாம் நினைக்க முடியுமா? இது அவ்ளவும் ஆர்.எஸ்.எஸ் சைட்டிலேர்ந்து சுட்டது. நான்: இருக்கட்டும். யாராயிருந்தா என்ன? சூபின்னோ முகமதுன்னோ முஸ்லிமல்லாதவங்க உண்மையிலேயே பேரு வச்சிகிட்டா நீங்க கேஸா போட முடியும்? நண்பர்: முடியாதுதான். ஆனா இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை சந்தேகம்ங்கிற பேர்ல எழுதி திண்ணையை ஏமாத்தலாமா முடியாதா? இதையே ஒரு கிரிஸ்டின் பேர்லெயோ இந்து பேர்லெயோ எழுதி இருந்தா ... திண்ணை பப்ளிஷ் செய்யுமா? நியாயமான கேள்விகள்!
ஃஃஃ
சுட்டிகள்: 1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606303&format=html 2. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal3.html 3. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal4.html 4. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal6.html 5. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal7.html 6. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal8.html 7. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal9.html 8. http://wahhabipage.blogspot.com/2006_02_01_wahhabipage_archive.html 9. http://www.islamworld.net/black_stone.htm

உடன்படிக்கையில் இரு மறுப்புகள்

முஸ்லிம்களின் வேதமான அல்குர்ஆன் அருளப் பட்டது "படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக!" என்ற முதல் கட்டளையோடு [096:001]. இறைமறையை, "படைத்த என் இறைவனின் பெயரால் ..." என்று எந்த முஸ்லிமும் ஓதத் தொடங்குவதில்லையே அது ஏன்? என்று ஹமீது ஜா.பர் சிந்திக்க வேண்டும். மேற்காணும் கட்டளையில் ஆளப் பட்டிருக்கும் 'இறைவன்' என்ற ஒரு சொல்லுக்குள் புதைந்திருக்கும் 'அளவற்ற அருளாளன்(அர்ரஹ்மான்)', 'நிகரற்ற அன்பாளன்(அர்ரஹீம்)', 'வணங்குதற்குரியவன்(அல்லாஹ்)' பெயரால் ஓதுமாறு அல்லாஹ்வின் தூதர், (வஹ்ஹாபிகளின் தலைவர்,) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்ததால் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்று தொடங்குகிறோம். சுட்டப் படுபவனை விடுத்து, சொல்லை மட்டும் எடுத்துப் பார்த்தால் 'அல்லாஹ்' (அல்-இலாஹ்) வணங்குதற்குரியவன் என்ற ஒரே பண்பைத்தான் குறிக்குமேயன்றி அவனுடைய எல்லாப் பண்புகளையும் அச்சொல் உள்ளடக்கி நிற்கவில்லை என்பதையும் கூடுதல் விளக்கமாகச் சொல்லாம். "வஹ்ஹாபே, ரஸ்ஸாக்கே! ஜப்பாரே! என் பாவங்களை மன்னித்து விடு" என்று இறைவனை விளித்து வேண்டினாலும் என் பாவங்களை அவன் மன்னிப்பான் என்ற நம்பிக்கையோடு, "ஏன் என்னை கஃப்பாரே என்று விளிக்கவில்லை?" என்று அந்தக் கருணையாளன் எதிர் கேள்வி கேட்க மாட்டான் என்ற உறுதி எனக்குண்டு.
***
இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த 'ஹுதைபிய்யா உடன்படிக்கை' சுவையானதும்கூட. மக்காவிலுள்ள புனித இறையில்லமான கஅபாவில் உம்ரா வழிபாடு செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்த முஸ்லிம்களைத் தடுத்துத் திருப்பியனுப்பிய நிகழ்வின் தொடக்கம் அது. முஸ்லிம்களுக்குப் பாதகமாகவும் மக்கத்துக் குரைஷியருக்குச் சாதகமாகவும் ஹிஜிரி ஆறாம் ஆண்டு (கி.பி 628) எழுதப் பட்ட அந்த உடன்படிக்கை, பிற்காலத்தில் குரைஷியராலே மீறப் பட்டு, முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறிப் போனது.
The Meccans deliberately made their terms as rigorous and provocative as they could, but Muhammad refused to be provoked. As always he wanted peace not bloodshed, therefore he accepted all the terms with all the hardships and all the humiliation they implied. This treaty is known as the Treaty of Hudaibia. It was one of the most outstanding events in the life of Muhammad. According to R.V.C. Bodley in "The Messenger" (London, 1946, p. 257), "In point of fact, that the treaty was Mohammad's masterpiece of diplomacy. It was a triumph." Tor Andrae writes in "Mohammed the Man and his Faith" (London, 1936, p. 229) that, "The self-control which Mohammed revealed at Hodaibiya, his ability to bear occasional humiliation in unimportant issues, in order to achieve an exalted goal, shows that he was a person of unique ability."
"அளவற்ற அருளாளன்(அர்ரஹ்மான்), நிகரற்ற அன்பாளன்(அர்ரஹீம்), அல்லாஹ்வின் பெயரால்.
(முஸ்லிம்களின் சார்பாக) அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கும் (முஸ்லிமல்லாத குரைஷியரின் சார்பாக) அம்ருடைய மகன் ஸுஹலுக்கும் இடையே எழுதப் படும் ..." என்று தொடங்கும் அந்த உடன்படிக்கையின் முதலிரு வரிகளிலேயே இரண்டு மறுப்புகளைக் குரைஷிப் பிரதிநிதி ஸுஹைல் தெரிவித்தார். "அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியிருந்தால் உம்மை மக்காவை விட்டு நாங்கள் துரத்தியிருப்போமா? உம்மோடு போர் புரிந்திருப்போமா?" என்பது ஸுஹைலின் இரண்டாவது மறுப்பு. இனி, திண்ணையில் எழுதிய ஹமீது ஜா.பரின் கடித வரிகளில் சிலவற்றை நினைவு கூர்ந்து விட்டு, மீதியைத் தொடர்வோம்:

"இறைவனின் எல்லா பெயர்களையும் எல்லா இடத்திலும் உபயோகிக்க முடியாது மட்டுமல்ல உபயோகிக்கவும் கூடாது. அப்படி உபயோகித்தால் அதன் தன்மை முரண்பாடாகிவிடும்."

"அல்லாஹ் சொன்னான் என்றால் அவனது அனைத்து திருநாமங்களும் அவற்றின் பண்புகளும் உள்ளடங்கிவிடுகின்றன."

இதையேதான் ஸுஹைல் முதல் மறுப்பாக வெளியிட்டார்: "அளவற்ற அருளாளனா? யாரது புதுக் கடவுள்? அல்லாஹ்வின் பெயரால் என்று மட்டும் இருக்கட்டும்".
ஹமீது ஜா.பரின் "வஹ்ஹாபா? யாரு ... பண்டாரி வஹாபா?" என்ற கேள்வி ஸுஹைலைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது.
ஃஃஃ

செவ்வாய், ஜூலை 04, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2

அல்குர்ஆனின் கூற்றை மெய்ப்பிப்பது போலவே, இலக்கியங்கள் அனைத்திலும் ஏராளமான பொய்கள் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். கவிஞர்கள், தாம் கேள்விப்பட்டதை எல்லாம் அப்படியே காவியமாகவும் கவிதையாகவும் வெறும் சுவைக்காகப் பாடிக் குவித்துள்ளமையே இதற்குக் காரணமாகும். தாம் கேள்விப்பட்டவை எந்த அளவுக்கு உண்மையானவை எனச் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருளைக் காணுகின்ற அறிவு பெறுதலை அடகு வைத்து விடுகின்றது கவிதையுள்ளம். பெரும்பாலானக் கவிஞர்கள் நிகழாதவற்றையெல்லாம் நிகழ்ந்தது போலக் கற்பனை செய்து பாடித் தீர்த்தனர். அத்தகைய பொய்ப் பாடிகளை - கவிஞர்களை - ஒரு கூட்டம் பின்பற்றி வழிகேட்டில் மூழ்கிக் கிடக்கக் காண்கிறோம். இந்நிலை, அல்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னரும் இருந்தது; பின்னரும் இருந்தது; இன்றும் இருக்கின்றது.
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது --- உள்ள முறைகள் கதையெனக் கண்டோம் நன்று புராணங்கள் செய்தார் - அதில் --- நல்ல கதைகள் பலப்பலத் தந்தார் கவிதை மிக நல்லதேனும் - அக் --- கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.
என இதனையே தமிழ்ப் பெருங்கவிஞர் பாரதியாரும் பாடுகின்றார். புராணக் கவிதைகள் பலவற்றைக் கவிஞர்கள் பாடினர். கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது. எனினும் அக்கவிதை சொல்லும் கதைகள் அனைத்தும் கடைந்தெடுத்தப் பொய்களாகும் என்கிறார் கவி பாரதி. கவிஞர் சுரதா கூறுகின்றார்:
எதார்த்தத்தில் எது உண்மையோ அதை நம்மவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. அடிப்படையை மறந்து விட்டுப் பின்னாளில் அதன் மீது எழுந்தக் கற்பனையைப் பெரிதாக நினைக்கின்றோம். ஒரு நாட்டில் ஒழுக்கம் இருக்க வேண்டுமென்றால் இலக்கியம் வளரக் கூடாது என்று கூடக் கூறுவேன். ஏனென்றால் அது கவர்ச்சி மயக்கத்தை உண்டாக்கும். மூலப் பொருளைக் காட்டாது. இலக்கியம் வந்த பிறகு உழைப்பு வீணாகி விட்டது. இன்னொன்று, கவிதை நயம் பார்க்க ஆரம்பித்து விட்டோம். "அருமையாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானே தவிர சரியாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானா? -நேர்காணல் சுபமங்களா, ஆகஸ்ட் 1993.
கவிதை இலக்கியத்தின் தீமையைக் கவிஞர் சுரதா இங்குத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். பெரும்பாலான கவிஞர்களின் பொய்க்கவிதை காரணமாக, கவிதை இலக்கியமே கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஒரேயடியாக இதனை ஒழித்துக் கட்டக் குரல் கொடுக்கிறார் சுரதா. ஆனால், அல்குர் ஆன் இலக்கியத்தை - கவிதையைச் சில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்கிறது. "தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதற்காகப் பதிலுக்குக் கவிதை பாடுபவர்களாகிய - நம்பிக்கை கொண்ட - நற்செயல்கள் புரிகின்ற - அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற கவிஞர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கின்றான்" எனக் குர்ஆன் [026:227] கூறுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எதிரிகளுக்குக் கவிதையால் பதிலடி தருகின்ற கவிஞர்களைக் கீழ்க்காணும் ஹதீஸில் ஊக்குவித்துள்ளார்கள்: "அவர்களுக்கு பதிலடி கொடுங்கள், உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்" - முஸ்லிம் 4541. நல்ல கவிதைகளைப் பாடுவோருடன் வானவர் ஜிப்ரீல் இருப்பது போலவே, தீய கவிதைகளைப் பாடுவோருடன் ஷைத்தான் கலந்திருக்கிறான். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளை அறியும் ஆர்வம் கொள்ளாமல், தாம் கேள்விப் பட்டதையெல்லாம் கூறுவோரும் கவிஞர்களுள் உளர். அவர்கள் பொய்யையே புகல்கின்றனர். பொய்யுரைக்கும் அந்தப் பாவிகள் ஒவ்வொருவர் மீதும் ஷைத்தான்கள் புகுந்து விடுகின்றனர். இப்படிப் பட்ட இயல்புடைய கவிஞர்களையும் இக்கவிஞர்களைப் பின்பற்றுகிறவர்களையும் 'பாவிகள்' எனவும் 'வழிகேடர்கள்' எனவும் ஒருசேர இறைவன் கண்டித்துள்ளான். அந்த இறைவசனங்களின் அடிப்படையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அணுகும்போது ஷைத்தான்கள் கோலோச்சுகின்ற எத்தனையோ பொய்மொழிகள் அவற்றினூடே விரவிக் கலந்துள்ளமையைக் காண முடிகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள், "இவர் ஒரு கவிஞர்" என்று பழிக்குற்றம் சாட்டினர் [021:005]. அவர்களுக்குப் பதிலுரைப்பதைப்போல, "நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது இவருக்குத் தகுமானதன்று" [036:069] என்று அல்லாஹ் தன் மறையில் தெளிவுறுத்தினான். வருங்காலத்தில் உறுதியாக இன்னதுதான் நிகழும் என்பதை அறியாத நிலையில் அதைப் பற்றிப் பொய்யாக முன்னறிவிப்புக் கூறுகின்ற குறிகாரனையும் பகுத்தறிவிழந்து உளறுகின்ற பைத்தியக் காரனையும் பொய்புனைந்து பாடும் கவிஞனையும் ஒருசேர வைத்துப் பேசுகின்ற திருமறை வசனங்களும் [052:029-030] காணக் கிடைக்கின்றன. கவிஞர்கள் தங்களுடைய கவித்திறனால் பொய்யான ஒன்றையும் மெய்போலப் பாடிவிடுகின்ற சாதுர்யம் படைத்தவர்கள். இறைவன் சொல்லாதவற்றை "இறைவன் சொன்னான்" என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறாதவற்றை "நபி கூறினார்" என்றும் பாடும் தன்மையை நம் தமிழ்க் கவிஞர்களிடம் பரவலாகக் காண முடிகிறது. தாம் கேள்விப் பட்டதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டுக் கவிதை புனைகின்ற இவர்களுள் பெரும்பாலோர் பொய்யர்களே எனும் இறைவசனத்திற்கேற்ப, இல்லாதவற்றையெல்லாம் இருப்பதுபோலச் சில கவிஞர்கள் பாடிச் சென்றுள்ளனர். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், ஜூலை 03, 2006

ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்

"வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வ்ருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்"
என்பதாக குலாம் ரஸூல் திண்ணையில் குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச் சாட்டு எம் தலைவரை நோக்கியே வீசப் படுவதால் அவர்தாம் இதற்கு பதில் சொல்லத் தகுந்தவர். பிறந்த நாட்டை விட்டுத் துரத்தப் பட்ட அவர், எட்டே முக்கால் ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தபோது அந்த நாடே அவரிடம் தன்னை ஒப்படைத்தது. "இன்றைய நாளில் பழிக்குப் பழி - இரத்தத்திற்கு இரத்தம் என்பதில்லை; எல்லாருக்கும் பொது மன்னிப்பு" என்று அறிவித்தவர், உருவங்களையும் (+)உயர்த்திக் கட்டப் பட்ட சமாதிகளையும் அழித்தொழிப்பதில் மட்டும் மிக உறுதியாயிருந்தார். ஆதி இறையில்லமான கஃபாவுக்கு உள்ளே இருந்த தம் பெரும் பாட்டனார், அண்ணல் இபுராஹீமுடைய உருவத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவர்தாம் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
***
"வளக்கமா செய்யிறது .. இந்த வருஷமும் செய்யுறோம். இன்னக்கி ஒங்க தெருவுல வசூலு. எல்லாரும் எளுதியிருக்காங்க. நீங்களும் ஒங்களாலெ ஏண்டதெ .."

என் முன்னே நீட்டப் பட்ட அந்த 40 பக்க நோட்டையும் பக்கத்துத் தெருவிலிருந்து வசூலுக்கு வந்திருந்தவர்களையும் மாறி-மாறிப் பார்த்து விட்டுக் கேட்டேன்: "என்ன வசூலு?"

"அசனார்($) ஒசனாருக்கு(#) வர்ர மாசம் கந்திரில்ல? தம்பிக்கு தெரியாதா? நாங்க பெரிய தைக்கா சார்பா வந்திருக்கோம்"

"ஓ.. ஒரு தடவ ரிக்கார்ட் டான்ஸு ஆட வந்த பொண்ணுங்களோட நம்ம ஆளுக்களும் மேடையிலெ ஏறினதா ..?"

"அது பளய கத தம்பி. அதெ உடுங்க. நீங்க எளுதுங்க "

"எளுதுறது இருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா. ஒங்கள மாதிரி இதெ எல்லாம் எடுத்து நடத்துவறங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்கும்"

"என்னா தம்பி?"

"இல்லெ .. இந்த அசனாரு ஒசனாருங்கிறது யாரு சாபு?"

சாபுவின் முகம் சட்டென்று மாறியது. "நெசமாவே தெரியாமத்தான் கேக்கிறியளா? அசனாரு ஒசனாரு ரஸூலுல்லாவோட பேரப் புள்ளைங்க" 

"அசனாரெ மதீனாவுலேயும் ஒசனாரெ கர்பலாவுலேயுமுல்ல அடக்கிருக்கு? அப்போ .. நம்ம ஊர்ல அவுங்களுக்கு எப்டி கபுரு வந்துச்சி?"

"அது வந்து .. தம்பி .."

கூட வந்திருந்த ஒருவர் குறுக்கிட்டார் "சாபு, நோட்ட வாங்கிட்டு வாங்க. இவன் நஜாத்துக்காரன். சரியான வஹ்ஹாபியா இருப்பான்"

ஏற்கனவே வசூல் கொடுத்திருந்த நாலைந்து பேர் எங்களை நோக்கி வந்தனர். நான் சிரித்துக் கொண்டே சாபுவிடம் கேட்டேன்:

"என்ன வேணும்?"

"நோட்டு புக்கு"
***
இந்நிகழ்வுக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து ஒருவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது - என்னைச் சந்திக்க விரும்புவதாக. "என்ன விஷயம்?" என்று மட்டும் கேட்டேன். "பள்ளிவாசல் கட்ட வசூல் ஆரம்பிச்சிருக்கோம்; உதவி வேணும்". இடம் சொல்லி வரச் சொன்னேன். சந்தித்துக் கொண்டோம்.

எங்கோ பார்த்த நினைவு. "நீங்க ..."

அறிமுகம் செய்து கொண்டார் அந்த இளைஞர்.

"பள்ளியெ எந்த எடத்துலெ கட்டப் போறீங்க?"

"எங்க தெருப் பக்கமா நீங்க வந்து ரொம்ப நாளாயிட்டுதுன்னு நெனக்கிறேன். கட்டுமான வேல ஆரம்பிச்சாச்சு"

"ஆமா, அதான் எங்கேன்னு கேட்டேன்"

"எங்க பொறுப்புல இருந்த பெரிய தைக்கால இடிச்சுட்டுத்தான்".

வஹ்ஹாபிகளின் கடப்பாரைகளுக்கும் மண்வெட்டிகளுக்கும் வேலை இருந்து கொண்டுதானிருக்கிறது - இப்போது அவர்தம் வீட்டுத் தோட்டத்தில்.
ஃஃஃ
__________________________________________________
(+) அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175].

($) பெருமானாரின் மூத்த பேரன், அண்ணல் ஹஸன் (ரலி)

(#) பெருமானாரின் இளைய பேரன், அண்ணல் ஹுஸைன் (ரலி)

("முகமது நபியைப் பெருமானார் என்று வகாபி தனது கலங்கலான குழப்பமான மொழியில் குறிப்பிட்டு, பெயர் குழப்பத்தின் மூலமாகக் கருத்தியல் குழப்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்"என்ற குற்றச் சாட்டு குலாம் ரஸூலிடமிருந்து வந்தாலும் வரும்).