ஞாயிறு, ஜூன் 04, 2006

நன்றி, இபுனு பஷீர் - 2

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது: 1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், " திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் ." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.  

இதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா? 

2. "அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்." என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா? 

-நன்றி: திண்ணை 

இனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி! 
3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை! 
ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,  
சில தூண்டி விடப்பட்டு.. 
சில தூண்டிலில் இடப்பட்டு.. 
நரிகளும் ஓநாய்களும் கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன, 
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/06/02/hgrasool2/

கருத்துகள் இல்லை: