நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 14, 2009

பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!

நாகூர் ஹனீஃபா என்ற பாட்டுக்காரரைப் பற்றிக் கவிஞர் அப்துல் கையூம், 'நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி-1].
.
பெரியார், இஸ்மாயீல் ஸாஹிப், பன்னீர் செல்வம், பட்டுக்கோட்டை அழகிரி, கருணாநிதி, அன்பழகன் போன்ற பிரபலங்களோடு நாகூர் ஹனீஃபாவின் நெருக்கம் அதில் பேசப்பட்டாலும் அண்ணாவைப் பற்றி பேசியது மலர் மன்னனுக்கு அவரது பழைய நினைவுகளை மலர வைத்தது. நாகூர் ஹனீஃபாவோடு அவருக்கு இருந்த நெருக்கத்தையும் திண்ணை வாசகர்களோடு மலர் மன்னன் பகிர்ந்து கொண்டார் [சுட்டி-2].

கவிஞர் அப்துல் கையூம் தனது திண்ணைக் கட்டுரையில், தாயிஃப் நகரில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கல்லடிபட்ட நிகழ்வுப் பூக்களைக் வெகு இயல்பாகச் சரம் தொடுத்திருந்தார்:
பூ-1 : "கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே, கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே
பூ-2 : "தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு தங்க நிலவைத் துரத்துகிறார். அருமை நபியை ஆருயிரை, அணையா விளக்கை வருத்துகிறார்"
பூ-3 : "கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்"
பூ-4 : "சொன்மாரி பொழிந்ததற்காய்க் கன்மாரி பெய்துவிட்ட வன்மனத்தார் திருந்துதற்கு வழிவகுத்த நாயகமே"
பூ-5 : "கல்லடி ஏற்று, கடுமொழி கேட்டு, உள்ளம் துடித்து, உதிரத்தை வடித்து"
பூ-6 : "தாயிப் நகரில் கல்லடிகள் தந்த தழும்பிலே இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே"
பூ-7 : "தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள் தாஹா இரசூல் நபி நடக்கையிலே - பாவிகள் செய்த கொடுமையினை - எண்ணிப் பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!"

இவற்றுள் மூன்றாவது பூவான, "கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்" என்ற கவிக்கோ அப்துர் ரஹ்மானின் வரிகளைப் பற்றிச் சொல்லும்போதே, "வித்தியாசமான உவமைப் படிமம்" எனக் குறிப்பிடக் கவிஞர் மறக்கவில்லை. மலர் மன்னன் உட்பட எல்லாருக்கும் இயல்பாகத் தோன்றும் 'உவமைப் படிமம்' இயல்புக்கு மாற்றமான மனநிலையில் உள்ள ஒருவருக்கு மட்டும் விகாரமாகத் தோன்றுகிறது [சுட்டி-3].

திண்ணையில் உள்ள சொம்பை எடுத்து உள்ளே வைத்துக் கொள்வோம்; யோக்கியர் வரப் போகிறார்.
தனக்கு கீழ்ப்படிந்து தன்னிடம் ஆளும் உரிமையையும், நீதி வழங்கும் உரிமையையும், நிதி வசூல் செய்யும் உரிமையையும் ஒப்படைக்குமாறு கோர
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாயிஃப் நகருக்குப் போனதாகத் திண்ணையில் எழுதும் நேசகுமார் என்பவரது மனநிலையை/வரலாற்று அறிவை எதில் சேர்ப்பது?
இந்துக்களை விவரிக்கும் வரிகளாக (கல்லின் மீது பூவை எறிபவர்கள்) புரட்டிய புண்ணியம் அப்துல் ரகுமானுக்கு சேரும் என்றால், அந்த மதக்காழ்ப்பை இங்கே அப்துல் கையும் சம்பந்தமில்லாத வகையில் இழுத்து வரத்தான் வேண்டுமா?
என்று 'கல்லின் மீது பூவை எறிபவர்கள்' என்ற உவமை புரிபடாத மாதிரி கேட்டு, அரபு நாட்டுப் பாகன்களான தாயிஃப்வாசிகளை அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டதைத் திசை திருப்பி, 'கல்லின் மீது பூவை எறிபவர்களை' இந்திய இந்துகளாகத் திருகுதாளம் செய்ய முயலும் நேசகுமாருக்கு சுருக்கமான ஒரேயொரு கேள்வி:
காந்திஜி பிறந்தநாள் முதல் தியாகிகள் நினைவுநாள்வரை அந்தந்தக் கற்சிலைகளுக்கு/நினைவுச் சின்னங்களுக்குச் சென்று பூ அள்ளிப் போடும்/எறியும் நமது பிரதமர் மன்மோகன் சிங் இந்துவா?
உவமை/உண்மை விளங்காமல், "கல்லின் மீது பூவை அள்ளிப் போடுபவர்/வீசுபவர் எல்லாரையும் இந்துக்கள்" என்ற அபத்தக் கருத்தை இங்கு வலிந்து புகுத்தினால், கி. வீரமணியை இந்து என்று சொல்ல வேண்டிய அபாயம் ஏற்படும். அதைவிடவும் அவர் வீசும் பூக்கள் போய் விழும் கல்லான பெரியாரை, "கடவுள்" என்று சொல்ல வேண்டிய பேரபாயம் ஏற்படும்.

இத்தனைக்கும் கவிக்கோவின் இருவரிக் கவிதை, விளங்க முடியாத அளவு கடினமாக இல்லையே! "சிலை வணங்கிகளான தாயிஃப் நகர பாகன்கள் மென்மையான குணம் கொண்ட நபிகளாரைக் கல்லால் அடித்து ஊரை விட்டுத் துரத்தினார்கள்" இதுதானே அந்த இருவரிக் கவிதை சொல்லும் செய்தி!
இது அநாகரிகமான கூற்று என்பது கூட இவர்களுக்கு புலப்படாமல் போனதுதான் தமிழ் சமுதாயத்தின் துரதிர்ஷ்டம், உலகின் துரதிர்ஷ்டம் என்று தோன்றுகிறது
என்று உலகளாவிய அளவில் மாய்ந்து போகிறார் நேசகுமார்.
எந்த நேசகுமார்?

ஸைபர் ப்ரம்மாவோடு சேர்ந்து அசிங்கமான 'கிச்சு-கிச்சு தாம்பாளம்; கிய்யா-கிய்யா தாம்பாளம்' விளையாட்டு [சுட்டி-4] விளையாடிய நேசகுமார். கிச்சு மானஸ்தன் போலும்; 'நேசகுமாருடன் ஒரு நேர்காணல்' என்ற தனது 25.05.2005 தேதியிட்ட பதிவைத் தூக்கி விட்டார் [சுட்டி-5]. நேசகுமார் நாகூருக்குப் போய் நன்னாரி சர்பத் குடித்ததாக வெட்கமின்றிக் கதை சொல்லும் அப்பதிவு இன்றுவரை வேறோர் இடத்தில் பாதுகாப்பாகப் படிக்கக் கிடைக்கிறது [சுட்டி-6].

தனி மனிதத் தாக்குதலை அனுமதிக்காத திண்ணையின் விதிகள் புரிந்து கொள்ளத் தக்கவைதாம். ஆனால், 100 கோடி இந்தியர்களுள் 20 கோடி முஸ்லிம்கள் - அதாவது ஐந்தில் ஓர் இந்தியர் - உயிரினும் மேலாக மதிக்கும் உலகளாவிய தலைவர் ஒருவரை அவமதித்து எழுதுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவரது காழ்ப்புக் கழிவுகளைத் திண்ணை ஏற்றுக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இருப்பைக் 'காட்டி'க் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேசகுமாருக்கு இருக்கலாம்; திண்ணைக்கு அப்படி இல்லையே!

சென்ற வாரம் திண்ணையில் அவர் கக்கியதைப் போல் நூறு மடங்கு காழ்ப்புகளுக்கு ஏற்கனவே பலரால் விளக்கங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன [சுட்டி-7]. குறிப்பாக நல்லடியார் என்பவர் நான்காண்டுகளுக்கு முன்னர் தமிழோவியத்தில் அசைக்க முடியாத சான்றுகளுடன் 9 வாரங்கள் தொடர் விளக்கம் எழுதியிருக்கிறார் [சுட்டி-8].
என்றாலும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய் மீண்டும்,
மத்திய காலத்தில், மத்திய கிழக்கில் பரப்பப்பட்ட கருத்துக்களை புரிந்தும் புரியாத நிலையில் வன்முறை மூலம் பெரும் கூட்டத்தின் மீது திணித்து, அவர்களுக்கு பணம், பதவி, பெண்கள் என்று ஆசை காட்டி அந்தக் கருத்துக்களைப் பற்றிய விமர்சனங்கள், கேள்விகள் எதுவும் எழுப்பாதவாறு அவர்களிடம் ஆசை, வெறுப்பு ஆகியவற்றை தூண்டிவிட்டு அந்தகூட்டங்களின் சக்தியை மற்றவர்கள் மீது திருப்பிவிட்டு கட்டப்பட்ட இந்த இறைக்கோட்பாடு
என்று இஸ்லாத்தின் மீது சேறுவாரி இறைப்பதன் மூலம் - அதிலும் நாகூர் என்ற பெயர் கேட்டாலே நடுக்கம் கூடிப் போய்விடுவதைக் காட்டி விடுவதன் மூலம் - தனக்கு மிரட்சி முற்றிப் போய்விட்டதை மறுபடியும் நிரூபிக்கும் நேசகுமார், "இந்தியாவில் இஸ்லாத்துக்கு எதிர்காலமில்லை" என்ற கிழடு தட்டிய கிளிசோதிட நம்பிக்கையிலேயே இன்னமும் மூழ்கிக் கிடக்கிறார்; கிடந்து விட்டுப் போகட்டும்!

"எல்லாப் புகழும் இறைவனுக்கு" என்பது நாகூர் ஹனீஃபா பாடிய பாடல்களுள் ஒன்று. அதே வரிகளை, ஹாலிவுட்டில் உள்ள கோடாக் அரங்கில் உலகமெங்கும் கேட்கும்படி உரத்துச் சொன்னவரது - அதாவது ஐந்து இந்தியரில் ஒருவரது - முன்னாள் பெயர் திலீப் குமார் என்று 'ஐ லவ் இண்டியா' தளத்தில் செய்தி போட்டிருக்கிறார்கள் [சுட்டி-9].

ஜெய்ஹோ!

ஃஃஃ

திண்ணையில் : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80905127&format=html
சுட்டிகள்:
1 - http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20904235&edition_id=20090423&format=html
2 - http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20904303&edition_id=20090430&format=html
3 - http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20905071&format=html
4 - http://wahhabipage.blogspot.com/2008/03/2.html
5 - http://kichu.cyberbrahma.com/?p=61
6 - http://copymannan.blogspot.com/2007/04/blog-post_19.html
7 - http://wahhabipage.blogspot.com/2006/09/blog-post.html
8 - http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=1
9 - http://www.iloveindia.com/indian-heroes/ar-rahman.htm

ஞாயிறு, மார்ச் 09, 2008

கதை சொல்லும் வேளை ... 3

உள்ளூர் ஊதுகுழல்களுக்கு ஊதத் தெரியவில்லை என்று கருதி, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று ஊதுகுழல்களை சங் பரிவாரங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தன.
இந்தக் கதையில் துணைப் பாத்திரமாக சிறு வேடத்தில் பெல்ஜியம் ஊதுகுலான கொயன்ராட் எல்ஸ்ட் என்று ஒன்று வரும்.
அதுதான் இந்தக் கதையின் நாயகரையும் சிரிப்பு நடிகரையும் தூக்கி நிறுத்துவதாகும்.
எப்படி?
இணைய தளத்தில் சக தமிழருக்காக நூற்றுக் கணக்கான தமிழர்கள் 'உதவி வேண்டி' என்ற தலைப்பில் பல கால கட்டங்களில் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
மூடுவிழா நடத்துவதற்கு முன்னர் நம் கதையின் நாயகர் பவனி வந்த தமிழ் மணத்திலும் 'உதவி வேண்டி' கோரிக்கைகள் பல தமிழில் வெளியாயின.
அவற்றுள் எதையும் கண்டு கொள்ளாத கிச்சா, "யாரோ ஒரு அட்ரஸ் இல்லாத ஆள்" என்று பேரா. நாகூர் ரூமி குறிப்பிட்ட துணைப் பாத்திரத்துக்கு உதவுவதில்தான் முனைப்புக் காட்டி முன்னுரிமை அளித்தார். (பேரா. நாகூர் ரூமியின் கருத்துத் தவறானதாகும். எல்ஸ்ட்டுக்கு bjp.orgயில் அட்ரஸ் இருக்கிறது).
எப்படி இருப்பினும் உதவி, உதவிதான். கிச்சாவின் உதவியோடு எல்ஸ்ட்டுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது. உடனே கிச்சா நேர்காணல் கண்ட மனநோயாளி எல்ஸ்ட்டை நேரில் சென்று கண்டு வந்ததாராம்.
ஆனால்,
கிச்சாவுக்கு மனநோயாளியைத் தெரியாது; மனநோயாளிக்குக் கிச்சாவைத் தெரியாது என்பதாகக் கடைசிவரை க்ளைமாக்ஸ் உடையாமல் இந்தக் கதை விறுவிறுப்பாகவே செல்கிறது.
-தொடரும், இன்ஷா அல்லாஹ்

திங்கள், மார்ச் 03, 2008

கதை சொல்லும் வேளை ... 2

நம் கதையின் நாயகர் கிச்சாவின் 25.05.2005ஆம் தேதி காலை 07:53க்குப் பதிவு செய்யப் பட்ட, 'நேர்காணல்' பதிவிலிருந்து சில முத்துகள்:
சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். பலமுறை வலையுலகில் சந்தித்திருந்த போதிலும், நேரடித் தொடர்பொன்று நிகழும் என்று நான் எண்ணவேயில்லை. ஆனால் அது நிகழ்ந்ததுதான் ஒரு ஆச்சரியம்!நான் வசிக்கும் நுங்கம்பாக்கம் அருகேதான் அவரது அலுவலகம் இருக்கிறது என்று அவர் கூறியிருந்ததால், அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது எங்கள் வீட்டுக்கு வாருங்களேன் என்றழைப்பது வழக்கம். ஒரு முறை எதேச்சயாக அப்படி அழைத்து, அவர் வழக்கம்போல வரமாட்டார் என்று நினைத்து விட்டுவிட்டேன். பார்த்தால், வீட்டிலிருந்து போன், 'நேசகுமார்' என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒரு நபர் உங்களைப் பார்க்க வந்துள்ளார் என்று. உடனடியாக விரைந்து வந்தேன்.
ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!
ஒரு மனநோயாளிக்கு இத்தனை பில்ட் அப் கொடுத்திருக்கும் இதே கிச்சாதான் "அவரை நான் பார்த்ததே இல்லை" என்று சூடம் கொளுத்துகிறார். பேட்டியினுள்ளே இவ்வளவு பில்ட் அப் என்றால் பின்னூட்டத்திலும் குறைச்சலில்லை. எம். கே குமார் என்பவர், "நேசகுமார் பேட்டியை இன்னும் நீட்டித்திருக்கலாம். என்ன வயது அவருக்கு?" என்று அவரது பின்னூட்டத்தில் கேட்டு வைத்தார். நேரில் பார்க்காத கிச்சா கூறுகிறார்:
பார்வைக்கு அவர் சுமார் 30-35 வயதுள்ள இளைஞர் போலத் தோன்றினாலும், உண்மையில் கொஞ்சம் கூட இருக்கும் என எண்ணுகிறேன். இந்தக் காலத்தில் "டை" என்கிற வஸ்து வயதைப் பொய்யாக்குகிறதே! ஆனால், அவர் பேசத் தொடங்கியவுடன் ஒரு கலைக்களஞ்சியம்போல் தங்குதடையில்லாமல் (பொருள் செறிந்த) அருவியாகக் கொட்டும் scholarship உள்ளவர். எப்படி இவ்வளையும் படித்துத் தெளிந்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் அடங்கவில்லை.
நேரில் பார்க்காத நேர்காணலைக் கிச்சா பதித்தபோது இந்த மனநோயாளி "அது நேர்காணல் இல்லையே" என்று மறுத்துப் பின்னூட்டவில்லை. மாறாக, இந்த இரண்டு சிங்கியடிச் சப்தம் கேட்டவுடன் மிகப் பெரிய ஒரு கருப் பொருளைக் கட்டுடைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு ஓடி வருகிறார்:
எஸ்.கே, நான் டை அடிப்பதில்லை. வயது குறைவாகத் தெரிவதற்கு நாள் தவறாது செய்து வரும் நடைப்பயிற்சி, மனப்பயிற்சி ஆகியவை தான் காரணம். மன அழுத்தம் இல்லாமலிருந்தால் நரை-திரை விழாது, இளமையாகத் தென்படுவோம்.
என்று விளக்கம் சொல்கிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த 'நேர்காணல்' பதிவை முற்றாக அழித்து விட்டதாகக் கிச்சா நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளையில், ஒரு காப்பிக்காரார் (பெயரே காப்பி மன்னன்) 'கூட்டுக் களவாணித்துவம்' என்ற ஒரு பதிவைப் போட்டு, 'நேர்காணல்' பதிவை "பெட்டிக்கடைக்கே சென்று நேரடியாகவே படியுங்கள்" என்று கூறி வியப்படைய வைத்தார். சரி, முற்றாய் அழித்துத் தொலைப்பதற்கு இந்த நேர்காணல் பதிவில் என்னதான் பிரச்சினை? கிச்சா ஓர் 'உண்மையான' காரணம் சொல்கிறார்:
இந்த இடத்தில் ஒரு உண்மையை உங்களுக்குத் தெளிவாக்க விரும்புகிறேன். நேசகுமார் ஒரு முன்ஜாக்கிரதையான மனிதர். முன்பின் அறியாத என் முன்னால் தன்னை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. நான் நட்சத்திரப் பதிவராக இருந்தபோது புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி அவருடைய பேட்டியை வெளியிடலாம் என்ற அவாவை அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவித்தேன். அவர் நேரில் வரமுடியாது என்றும் என் கேள்விகளை ஈமெயில் மூலமாகவே அனுப்பினால் அவர் பதிலுரைப்பார் என்று சொன்னார். ஆனால் ஒரு "த்ரில்" இருக்கட்டுமே என்று சற்று adventurous-ஆக நேரில் பேட்டி கண்டதுபோல் எழுதியிருந்தேன். ஆனால் உண்மையை இணைய நுணுக்கங்கள் தெரிந்த "ஆப்பு" என்பவர் கண்டுபிடித்து எழுதிவிட்டார். உண்மையில் நேசகுமார் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள பலரைப் போல் நானும் ஆசைப்பட்டேன். ஆனால் தன்னை அவர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. "நான் எழுதுவதைப் படியுங்கள். தொடர்பு கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நேரில் வேண்டாமே" என்று கூறிவிட்டார். இதுதான் உண்மை.
ஆக, இருவரும் இதுவரை நேரில் சந்தித்ததே இல்லையாம்! (கதை தொடரும்) கதை சொல்லும் வேளை ... 1

சனி, பிப்ரவரி 09, 2008

கதை சொல்லும் வேளை ... 1

சென்ற வாரத் திண்ணையில் நேச குமார் எழுதியதைப் படிக்க நேர்ந்தது. இப்படி எடுத்தவுடன் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுவதற்கு, முன்/பின்/இடை/கடை/முற்போக்கு/பிற்போக்கு/இடைப்போக்கு/கடைப்போக்கு நவீனத்துவங்கள் இன்றுவரை எனக்குப் பிடிபடாதது காரணமாக இருக்கக் கூடும். என்றாலும், என் பாட்டனார் பர்மாவுக்குச் சென்று பொருளீட்டினார் என்பதையும் என் மாமன் மலேயாவுக்குச் சென்று, திரும்பி வராமல் அங்கேயே மரணித்தார் என்பதையும் நான்கு பக்கக் கதையாகச் சொல்வதில் வாசகர்களுக்கு எந்த ஒரு நவீனத்துவப் பயனும் விளையப் போவதில்லை என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், என் மாமன் தம் அன்னைக்கு இரு திண்ணைகள் வைத்த வீடு வாங்கிக் கொடுத்தார் என்பதில் 'திண்ணை' இருக்கிறது. எனவே, அந்தப் பழங்கதையை ஒரு வரியோடு நிறுத்திக் கொண்டு, வாசகர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிற, சுவை நிறைந்த புதுக்கதை ஒன்று சொல்லப் போகிறேன்:

ஓர் ஊரிலே கிச்சா,கிச்சா என்றொரு ஸைபர் ப்ரம்மா இருந்தாராம். அவர், நேச குமாரைத் தன் வீட்டிற்கு வரவழைத்து, நேரடியாகப் பார்த்து ஒரு நேர்காணல் நடத்தினாராம். இருவரும் இஸ்லாத்தைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டார்களாம் - அதாவது நாகூரைப் பற்றி. இரண்டு விஷயங்கள் முக்கியமானதாம். ஒன்றாவது நாகூர் ரூமியாம்; இரண்டாவது நாகூர் தர்ஹாவாம். மூன்றாவது தனி. அது சங்கராச்சாரியார் சம்பந்தப் பட்டதாம். எல்லாவற்றையும் அப்படியே தொகுத்து 'நேசகுமாருடன் ஒரு நேர்காணல்' என்று தலைப்பிட்டுத் தன்னுடைய தளமான, 'பெட்டிக்கடை'யில் கடந்த 25.05.2005ஆம் தேதி காலை 07:53க்குக் கிச்சா பதிவாகப் போட்டாராம். அதன் ஒரிஜினல் சுட்டி http://kichu.cyberbrahma.com/?p=61 என்பதாம் (ஆவலோடு இந்தச் சுட்டியைச் சொடுக்கினீர்களெனில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. எங்குக் கிடைக்கும் என்பதை அடுத்தப் பகுதியில் சொல்வேன்).

அந்த 'நேர்காணல்' வெளியாகி இரண்டாண்டுகள் கழித்து வலையுலகில் 'ஆபரேஷன் சல்மா அயூப்' என்ற சுனாமி ஏற்பட்டதாம். அதாவது, ஒரு முஸ்லிம் பெண்ணின் பெயரில் ஒளிந்து கொண்டு காமக் கதைகளை ஒருவர் எழுதிக் குவித்தாராம். கையும் களவுமாக அவர் பிடிபட்டவுடன் நம்ம கதையின் நாயகர் கிச்சா, "நேசகுமாரை நான் பார்த்ததே இல்லை" என்று சூடம் கொளுத்திச் சத்தியம் செய்து விட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'நேர்காணல்' பதிவையும் அழித்து விட்டாராம்.

ஏன்? ஏன்? ஏன்?
சல்மா அயூப் என்ற பெயரில் எழுதியவருக்கும் கிச்சாவுக்கும் என்ன தொடர்பு?
' ஆபரேஷன் சல்மா அயூபு'க்கும் 'நேர்காணல்' அழிப்பிற்கும் என்ன தொடர்பு?
அழிக்கப் பட்ட அந்த 'நேர்காணல்' கிடைக்குமா?
எங்குக் கிடைக்கும்?
விபரங்கள் அடுத்த வாரம்.

அதுவரைக்கும்,
1. பார்ப்பனரை எவ்வாறு குறிக்க வேண்டும்? (எதிர்கால பயன்பாட்டுக்காக).
2. சங்கர மடத்து ஆச்சாரியாரை எவ்வாறு குறிக்க வேண்டும்? (சங்கராச்சாரியார் என்று எனது திண்ணப் பதிவில் குறித்தேன்).

ஆகிய இரண்டு விளக்கங்களைத் தெரிந்தவர்கள் யாராவது தெரியப் படுத்துவீர்களாயின் நன்றியோடு ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், ஏற்றுக் கொள்வதற்கும் திருத்தி எழுதுவதற்கும் எனக்குச் சொல்லாண்மையும் எழுத்து நேர்மையும் இருக்கின்றன. அடுத்து, "பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதன குட்டை" என்ற சொற்களை நான் பயன் படுத்தி இருப்பதாக வழக்கம்போல் நேச குமார் உளறி இருக்கிறார். அவருடைய மனநிலை குறித்து எனக்கிருக்கும் பரிதாபம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காகத் திண்ணையில் நான் அவ்வாறெல்லாம் 'தகாத' சொற்களைப் பயன் படுத்தி இருப்பதாகக் குற்றச்சாட்டை வைத்திருக்கும் நேச குமாருக்கு எதிர்க் கேள்வி வைக்கவில்லை எனில் நான் குற்றவாளி ஆகிப் போவன். எனவே, ஒருவார காலத்தைப் பயன் படுத்திக் கொண்டு, நேச குமார் தன் குற்றச்சாட்டை நிரூபித்தே ஆகவேண்டும். அப்படியே திருத்தப் பட்ட குர்ஆன் பிரதிகள் கிடைத்த சவூதிப் பள்ளியைப் பற்றியும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கவும். அதை விசாரித்து உறுதி செய்யும் பொறுப்பையும் சவூதி நண்பருடைய தலையில் போட்டு விட எனக்கு ஏதுவாகும்.

(தொடரும்)
ஃஃஃ