"மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு விழுமியங்களை புகழ்ந்தும் பாடப்பட்டிருப்பதற்கு புனித நூல்களான திருகுர் ஆன்,ஹதீதுகள், குர்ஆன் விரிவுரைகள்,ஹதீது விரிவுரைகள் மற்றும் வரலாற்று நூல்களில் பதிவுகள் நிறைய இருக்கிறது"முஜீப் ரஹ்மானின் மேற்காணும் நகைச்சுவைக்கு 500 டாலர் காத்திருக்கின்றது. பரிசு பெறுவதற்காக அவர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mawlid@muttaqun.com மவ்லிது ஆர்வமுள்ள வாசகர்களுக்குத் தமிழில் மவ்லிது இலவசமாகக் கிடைக்குமிடம்: http://www.angelfire.com/tv2/avmaulid/
சனி, ஜூலை 15, 2006
500 டாலர் நகைச்சுவை
வெள்ளி, ஜூலை 07, 2006
நியாயமான கேள்விகள்
உடன்படிக்கையில் இரு மறுப்புகள்
The Meccans deliberately made their terms as rigorous and provocative as they could, but Muhammad refused to be provoked. As always he wanted peace not bloodshed, therefore he accepted all the terms with all the hardships and all the humiliation they implied. This treaty is known as the Treaty of Hudaibia. It was one of the most outstanding events in the life of Muhammad. According to R.V.C. Bodley in "The Messenger" (London, 1946, p. 257), "In point of fact, that the treaty was Mohammad's masterpiece of diplomacy. It was a triumph." Tor Andrae writes in "Mohammed the Man and his Faith" (London, 1936, p. 229) that, "The self-control which Mohammed revealed at Hodaibiya, his ability to bear occasional humiliation in unimportant issues, in order to achieve an exalted goal, shows that he was a person of unique ability."
"இறைவனின் எல்லா பெயர்களையும் எல்லா இடத்திலும் உபயோகிக்க முடியாது மட்டுமல்ல உபயோகிக்கவும் கூடாது. அப்படி உபயோகித்தால் அதன் தன்மை முரண்பாடாகிவிடும்."
"அல்லாஹ் சொன்னான் என்றால் அவனது அனைத்து திருநாமங்களும் அவற்றின் பண்புகளும் உள்ளடங்கிவிடுகின்றன."
செவ்வாய், ஜூலை 04, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது --- உள்ள முறைகள் கதையெனக் கண்டோம் நன்று புராணங்கள் செய்தார் - அதில் --- நல்ல கதைகள் பலப்பலத் தந்தார் கவிதை மிக நல்லதேனும் - அக் --- கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.என இதனையே தமிழ்ப் பெருங்கவிஞர் பாரதியாரும் பாடுகின்றார். புராணக் கவிதைகள் பலவற்றைக் கவிஞர்கள் பாடினர். கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது. எனினும் அக்கவிதை சொல்லும் கதைகள் அனைத்தும் கடைந்தெடுத்தப் பொய்களாகும் என்கிறார் கவி பாரதி. கவிஞர் சுரதா கூறுகின்றார்:
எதார்த்தத்தில் எது உண்மையோ அதை நம்மவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. அடிப்படையை மறந்து விட்டுப் பின்னாளில் அதன் மீது எழுந்தக் கற்பனையைப் பெரிதாக நினைக்கின்றோம். ஒரு நாட்டில் ஒழுக்கம் இருக்க வேண்டுமென்றால் இலக்கியம் வளரக் கூடாது என்று கூடக் கூறுவேன். ஏனென்றால் அது கவர்ச்சி மயக்கத்தை உண்டாக்கும். மூலப் பொருளைக் காட்டாது. இலக்கியம் வந்த பிறகு உழைப்பு வீணாகி விட்டது. இன்னொன்று, கவிதை நயம் பார்க்க ஆரம்பித்து விட்டோம். "அருமையாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானே தவிர சரியாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானா? -நேர்காணல் சுபமங்களா, ஆகஸ்ட் 1993.கவிதை இலக்கியத்தின் தீமையைக் கவிஞர் சுரதா இங்குத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். பெரும்பாலான கவிஞர்களின் பொய்க்கவிதை காரணமாக, கவிதை இலக்கியமே கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஒரேயடியாக இதனை ஒழித்துக் கட்டக் குரல் கொடுக்கிறார் சுரதா. ஆனால், அல்குர் ஆன் இலக்கியத்தை - கவிதையைச் சில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்கிறது. "தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதற்காகப் பதிலுக்குக் கவிதை பாடுபவர்களாகிய - நம்பிக்கை கொண்ட - நற்செயல்கள் புரிகின்ற - அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற கவிஞர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கின்றான்" எனக் குர்ஆன் [026:227] கூறுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எதிரிகளுக்குக் கவிதையால் பதிலடி தருகின்ற கவிஞர்களைக் கீழ்க்காணும் ஹதீஸில் ஊக்குவித்துள்ளார்கள்: "அவர்களுக்கு பதிலடி கொடுங்கள், உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்" - முஸ்லிம் 4541. நல்ல கவிதைகளைப் பாடுவோருடன் வானவர் ஜிப்ரீல் இருப்பது போலவே, தீய கவிதைகளைப் பாடுவோருடன் ஷைத்தான் கலந்திருக்கிறான். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளை அறியும் ஆர்வம் கொள்ளாமல், தாம் கேள்விப் பட்டதையெல்லாம் கூறுவோரும் கவிஞர்களுள் உளர். அவர்கள் பொய்யையே புகல்கின்றனர். பொய்யுரைக்கும் அந்தப் பாவிகள் ஒவ்வொருவர் மீதும் ஷைத்தான்கள் புகுந்து விடுகின்றனர். இப்படிப் பட்ட இயல்புடைய கவிஞர்களையும் இக்கவிஞர்களைப் பின்பற்றுகிறவர்களையும் 'பாவிகள்' எனவும் 'வழிகேடர்கள்' எனவும் ஒருசேர இறைவன் கண்டித்துள்ளான். அந்த இறைவசனங்களின் அடிப்படையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அணுகும்போது ஷைத்தான்கள் கோலோச்சுகின்ற எத்தனையோ பொய்மொழிகள் அவற்றினூடே விரவிக் கலந்துள்ளமையைக் காண முடிகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள், "இவர் ஒரு கவிஞர்" என்று பழிக்குற்றம் சாட்டினர் [021:005]. அவர்களுக்குப் பதிலுரைப்பதைப்போல, "நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது இவருக்குத் தகுமானதன்று" [036:069] என்று அல்லாஹ் தன் மறையில் தெளிவுறுத்தினான். வருங்காலத்தில் உறுதியாக இன்னதுதான் நிகழும் என்பதை அறியாத நிலையில் அதைப் பற்றிப் பொய்யாக முன்னறிவிப்புக் கூறுகின்ற குறிகாரனையும் பகுத்தறிவிழந்து உளறுகின்ற பைத்தியக் காரனையும் பொய்புனைந்து பாடும் கவிஞனையும் ஒருசேர வைத்துப் பேசுகின்ற திருமறை வசனங்களும் [052:029-030] காணக் கிடைக்கின்றன. கவிஞர்கள் தங்களுடைய கவித்திறனால் பொய்யான ஒன்றையும் மெய்போலப் பாடிவிடுகின்ற சாதுர்யம் படைத்தவர்கள். இறைவன் சொல்லாதவற்றை "இறைவன் சொன்னான்" என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறாதவற்றை "நபி கூறினார்" என்றும் பாடும் தன்மையை நம் தமிழ்க் கவிஞர்களிடம் பரவலாகக் காண முடிகிறது. தாம் கேள்விப் பட்டதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டுக் கவிதை புனைகின்ற இவர்களுள் பெரும்பாலோர் பொய்யர்களே எனும் இறைவசனத்திற்கேற்ப, இல்லாதவற்றையெல்லாம் இருப்பதுபோலச் சில கவிஞர்கள் பாடிச் சென்றுள்ளனர். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.
திங்கள், ஜூலை 03, 2006
ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்
"வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வ்ருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்"
என் முன்னே நீட்டப் பட்ட அந்த 40 பக்க நோட்டையும் பக்கத்துத் தெருவிலிருந்து வசூலுக்கு வந்திருந்தவர்களையும் மாறி-மாறிப் பார்த்து விட்டுக் கேட்டேன்: "என்ன வசூலு?"
எங்கோ பார்த்த நினைவு. "நீங்க ..."
அறிமுகம் செய்து கொண்டார் அந்த இளைஞர்.
"பள்ளியெ எந்த எடத்துலெ கட்டப் போறீங்க?"
"ஆமா, அதான் எங்கேன்னு கேட்டேன்"
"எங்க பொறுப்புல இருந்த பெரிய தைக்கால இடிச்சுட்டுத்தான்".
வெள்ளி, ஜூன் 23, 2006
பொருள் மயக்கம்
"... (எனக்கு முற்றிலும் வழிப்பட்டவராகச்) சரணடையும் என்று (இபுராஹீமிடம் அவருடைய இறைவன்) கட்டளையிட்டபோது அவர், அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோனாக, இதோ, சரணடைந்து விட்டேன் என்று கூறினார்" [002:131]என்று தன் அருள் மறையில் வஹ்ஹாபு கூறுகிறான். இப்போது ஹமீது ஜா.பரின் ஊர்க்காரரான 'பண்டாரி வகாபோ', குலாம் ரஸூல் அடிக்கடி காட்டும் 'பூச்சாண்டி வகாபோ' வாசகர்களின் நினைவுக்கு வரார் என்று நம்புகிறேன்.
நல்லவேளை, சாமீ (சீன்+அலி· ப்+மீம்+யே) என்ற அரபு வார்த்தைக்கு உயர்ந்தவன் என்று பொருள். இதுவும் இறைவனின் திருநாமங்களில் ஒன்று. அதனால் சாமீ என்றால் இறைவன் எனவே சாமீ என்று சொல்வதில் தவறில்லை என்று ·பத்வா கொடுக்காமலிருந்தார் நம் வஹாபிஎன்பவை ஹமீது ஜா.பரின் அருஞ்சொல் அகராதிப் பக்கத்திலுள்ளவை. இந்தச் சாமீ எங்கிருந்து பெறப் பட்டது என்று அவர் குறிப்பிட்டால் நன்றியுடையவனாவேன். என்றாலும், அஸ்-ஸாமிஃ (السامع = செவியுறுபவன்) என்று அல்லாஹ்வைச் சிலவேளை நான் அழைப்பதுண்டு - மிக்குயர்ந்த டிக்'ஷனரியின். சான்றின் அடிப்படையில்:
"(நபியே,) கூறுவீராக! நீங்கள் (அவனை) அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(இன்னும் பல) அழகிய பெயர்கள் [சுட்டி-5] உள ... " [017:110].இன்னும் மயக்கம் தெளியவில்லையெனில் ... மீண்டும் திறக்கலாம், மிக்குயர்ந்த டிக்'ஷனரியை.
வியாழன், ஜூன் 22, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1
"ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை (நபியே) உமக்கு அறிவிக்கட்டுமா?" "இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்" "ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே!" "மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்." "நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா?" "நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்" "(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (கவிப்)பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே!) தாங்கள் செல்லுமிடம் எதுவென அநீதி இழைத்தவர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். -அல்குர்ஆன் 026:221-227.
ஞாயிறு, ஜூன் 04, 2006
நன்றி, இபுனு பஷீர் - 2
1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், " திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் ." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா?
2. "அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்." என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா?
-நன்றி: திண்ணை
இனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி!
3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை!
ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,
சில தூண்டி விடப்பட்டு..
சில தூண்டிலில் இடப்பட்டு..
நரிகளும் ஓநாய்களும் கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!
நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/06/02/hgrasool2/
சனி, ஜூன் 03, 2006
நன்றி, இபுனு பஷீர் - 1
‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’
வெள்ளி, ஜூன் 02, 2006
மிக்குயர்ந்த டிக்'ஷனரியிலிருந்து ...
"இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் வெறும் ஏட்டறிவை அதையும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தனக்குத் தோன்றியபடி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்"
"எந்த டிக்ஷனரியில் இருக்கிறது வஹ்ஹாப் என்றால் இறைவன்/அல்லாஹ் என்று?"
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியை அறிவித்ததன் பின்னர், எங்களுடைய உள்ளங்கள் தடம் புரண்டு விடுமாறுச் செய்து விடாதே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்]" 003:008.
"அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியான உங்கள் இறைவனின் [ரப்பிக்கல் அஸீஸில் வஹ்ஹாப்] அருட் கிடங்கு அவர்களிடம்தான் இருக்கின்றதா?" 038:009.
"என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்] என்று (ஸுலைமான்) பிரார்த்தனை செய்தார்." 038:35.
வியாழன், மே 18, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - முன்னுரை (சுருக்கம்)
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருங்கள். உங்களுக்கோ (உங்களின்) பெற்றோருக்கோ (உங்களின்) நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்காளாக இருங்கள் ..."என இறைமறை குர்ஆன் [004:135] எடுத்துரைத்துள்ளது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனப் பெயர் பண்ணிக் கொண்டு, தூய இஸ்லாத்திற்கு அநீதி இழைத்துள்ளன பல இலக்கியங்கள். இவற்றைப் பாடியோர் நமது புலவர் பெருமக்களாகிய 'அப்பா'மார்களாக இருக்கலாம். இந்த இலக்கிய அநீதியை எடுத்துரைப்பது, அந்தப் புலவர் பெருமக்களுக்கு விரோதமிழைப்பது போலிருந்தாலும் கூட, அல்லாஹ்வுக்காக நாம் உண்மை சாட்சியுரைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை முன்னிருத்தியே 'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்னும் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.
இஸ்லாத்துக்கு விரோதமாகப் "பொய்யையும் புனைசுருட்டையும் பாடுகின்ற கவிஞர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர்" என இறைமறை குர்ஆன் எச்சரிக்கிறது.
இஸ்லாத்துக்கு அநீதி இழைத்து இலக்கியம் பாடிவந்த ஒரு கவிஞனை 'ஷைத்தான்' என்றும் அவனது கவிதையை 'நாற்றமெடுத்த சீழ்' என்றும் நபி (ஸல்) அவர்கள், கடுமையான சொற்களால் வைதுள்ளனர்.
அப்பழுக்கற்ற இஸ்லாமியத் தடாகத்தில் அப்பாமார்களின் பாடல்கள் நஞ்சைக் கலந்துள்ளன. இதைக் காணும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நெஞ்சம் கொதிப்பது இயல்பே! அந்த நெஞ்சக் கொதிப்பு, இந்நூலில் சில இடங்களில் வெம்மையான சொற்களில் வெளிப் பட்டிருக்கலாம். அதுவுங்கூட நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதே என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வார்களாக!
இம்முயற்சியில் எம்மை ஈடுபடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்குச் சிரம் பணிந்து நன்றி பாராட்டுகிறேன்.
- ஹஸ்ஸான்
யாருக்குச் சொந்தம்?
"ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது இஸ்லாமிய உட்பிரிவுகள் பற்றிய சண்டைகள் - ஒரு தமிழ் வாசகனுக்கு இதனால் என்ன பயன்?? ஒவ்வொரு திண்ணை இதழிலும் இந்த இஸ்லாமியக் கருத்துத் தீவிரவாதத்திற்கு ஏன் இடமளிக்க வேண்டும்?"என்று ஒரு கண்டனக் குரல். வேற்றுமொழிப் பெயர்ச் சொற்களை அப்படியே குறிப்பதால் திண்ணையில் தீவிரவாதம் எப்படி ஏற்படும் என்று எனக்கு விளங்கவே இல்லை. தாய்மொழிப் பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் தேவையே. அதற்காக, 'மிஸ்ஸிஸ்ஸிப்பி' என்ற ஊரின் பெயர்ச் சொல்லை "சிப்பி என்பவள் செல்வி" என்று தமிழில் எழுதினாலோ 'மிடில்ஸெக்ஸ்'ஐ "நடு இனம்" என்றோ வேறு ஏதாவது தமிழ்ச் சொல்லால் எழுதினாலோ நன்றாகவா இருக்கும்? திண்ணையில் 'கடித இலக்கியம்' எழுதுபவரின் பெயரை, 'அவைத் தலைவர்' என்று நாம் தமிழில் எழுதுவது சபாநாயகம் அவர்களுக்குப் பெருமை சேர்க்குமா? அதுவும், 'மஹாத்மா'வைக் குறித்து 'பரமாத்மா'வின் 'ஜீவாத்மா'க்கள் திண்ணையில் சொல்லாடிக் கொண்டிருக்கும் 'தமிழ்ச் சூழ'லில் 'பாவாத்மா'க்களைக் குறை சொல்வதற்கு, 'ஜடாயு'வின் 'அந்தராத்மா'வுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ!.
"தமிழில் தொழுகை நடத்துவதற்கு வகாபி மறுப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஒருவேளை இப்படியான திருக்குர்ஆனிய சில வசனங்களை எப்படி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி சொல்வது என்ற தயக்கமாக இருப்பின் அல்லாவின் வார்த்தைகள் தான் அவை என்ற வகையில் அந்த தயக்கத்தை விட்டொழிக்க முயல வேண்டும் இவ்வசனங்கள் சொல்லப்பட்ட சூழலையும் கருத்திற்கொள்ள வேண்டும். என்பதே எனது வேண்டுகோள்"என்று சூபி எனக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குர்ஆன் பிரதிகளை யாராவது பதுக்கி வைத்துக் கொண்டு அஞ்சியஞ்சி விற்கிறார்களா என்ன? இத்தனை விரைவில் காலம்தான் எப்படி மாறிப் போய்விட்டது பாருங்கள்! சூபிகளே குர்ஆனுடைய 'சில' வசனங்களை எடுத்தெழுதுவது மகிழ்வுக்குரிய மாற்றம்தான்! - நோக்கம் எதுவாக இருப்பினும். அஃதென்ன 'சில வசனங்கள்'? அனைத்து வசனங்களையும் உள்ளடக்கிய குர்ஆன் பதிப்புகள், தமிழ் உட்பட உலகின் எல்லா மொழிகளிலும் மூலைக்கு மூலை கிடைக்கிறதே! காசு கொடுத்து வாங்கிப் படிக்க இயலாதவர்களுக்கு இப்போது வலைத் தளங்களிலும் குர்ஆன் 'வெளியே தெரியும்படி' திறந்துதான் கிடக்கிறது! திறந்து கிடந்ததைப் படித்துத்தான் கேட் ஸ்டீவன்ஸ், யூஸுஃப் இஸ்லாமாக மாறிதாகக் கூறுகிறார்:
Following a bout of TB early in his career he undertook an ongoing search for peace and ultimate spiritual truth. After almost drowning in the Pacific Ocean at Malibu he received a translation of the Qur'an as a gift from his elder brother, David. His spiritual quest for answers was fulfilled and he embraced Islam in December, 1977. Six months later he changed his name to Yusuf Islam, walked away from the music business to start a new life and raise a family.முழுச் செய்தியையும் இங்குப் படிக்கலாம்: http://www.yusufislam.org.uk/biodata.htm உள்ளேயே பூட்டி வைக்காமல், எல்லாருக்கும் வெளியே தெரியும்படி உள்ள குர்ஆனினால் ஈர்க்கப் பட்டோரின் பட்டியல் வெகு நீளம் என்பதும் அதில் குலசையைச் சேர்ந்த தமிழ் வலைப் பதிவர் http://iniyaislam.blogspot.com/ ஒருவரும் அடக்கம் என்பதும் சூபிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்புண்டு. கனவுலக முகமூடியைக் கழட்டி விட்டு, நனவுலகிற்கு சூபி வரவேண்டும் என்பதே என் அவா.
"அல்லாவின் 99 திருநாங்களில் வகாப் என்று திருத்தல்வாதம் செய்தாலும் இச்சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது"என்று கடிதம் எழுதிய குலாம் குறிப்பிடுகிறார். பாவம், அவருக்கு என்ன சூழ்நிலையோ? இவர் ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும் உண்மை, உண்மையில்லை என்றாகி விடுமா என்ன?. மீண்டும் சில பெயர்ச் சொற்களையும் உரிச் சொற்களையும் ஆகு பெயர்களையும் வேற்று மொழியில் பயன் படுத்துவதற்காக ஜடாயு அவர்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. அவற்றைப் பயன் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப் பட்டுள்ளேன் - அறியாமையை அகற்றும் விளக்கத்திற்காக. bin / ibn என்ற அரபுச் சொல் s/o என்று ஆங்கிலத்தில் பயன் படுத்தப் படும் சொல்லுக்கு ஒப்பானதாகும். மு.க. ஸ்டாலின் என்ற பெயர்ச் சொல்லை அரபியில், 'ஸ்டாலின் bin கருணாநிதி bin முத்துவேல்' என்று குறிப்பிடுவர். 1. "அப்துல்வஹ்ஹாபின் மகன் பெயர் முஹம்மது", அதே "முஹம்மதின் தந்தை பெயர் ஷெய்க்", "அந்த ஷெய்க் உடைய தந்தை அப்துல்வஹ்ஹாப் ஆவார்". எனில், முஹம்மது என்பாருக்கு அப்துல்வஹ்ஹாப் தந்தையா தாத்தாவா? குழப்பந்தானே! குழப்புவது நானல்ல; குலாம்:
"வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்"
இங்குக் குழப்பப் பட்டவர், முஹம்மது s/o அப்துல்வஹ்ஹாப் s/o ஸுலைமான் என்பவராவார். உறுதிப் படுத்திக் கொள்வதற்கும் கூடுதல் தகவல்களுக்குமான சுட்டி : http://www.ahya.org/amm/modules.php?name=Sections&op=viewarticle&artid=180 . மேற்படி முஹம்மது என்பார் தனெக்கென ஒரு கொள்கையைப் புதிதாக ஏற்படுத்திக் கொண்டு அதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் போராடவில்லை. இறைமறையும் நபிவழிமுறையுமே தமது உயிர் மூச்சு என்றார். கடிதம் எழுதியவரின் அதிமுக்கியக் கவலைக்கும் ஆத்திரத்திற்கும் காரணம் என்னவென்றால், வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியின் மறைவுக்குப் பிறகுக் கொஞ்சங் கொஞ்சமாக அரபு குலாம்களால் புதிதாக ஏற்படுத்தப் பட்ட சமாதி வழிபாட்டையும் வழிபாடு நடந்த சமாதிகளையும் முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் தரைமட்டமாக்கினார் என்பதே. அந்தத் தரைமட்டச் சேவையையும் தமது தலைவரின் கட்டளைப்படியே செய்தார் என்பதுதான் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த வரலாறு. இதோ ஒரு ஹதீஸ் - ஒன்பது சான்றுகளுடன்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175]. தரைமட்டச் சேவைக்கான/தேவைக்கான இன்னும் கூடுதல் சான்றுகள் திண்ணை இதழின் 24.02.200 பதிப்பில் எனது கடித இறுதியில் கிடைக்கும். இனி வஹ்ஹாபிஸத்துக்கு வருவோம். நேபாளத்தின் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளை அவ்வரசு விடுதலை செய்யப் போவதாக அண்மைச் செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸத்தைப் பின்பற்றுபவர்களே மாவோயிஸ்டுகளாவர். சீனப் புரட்சித் தலைவர் மாவோ ஸெடுங்கின் கொள்கை-கோட்பாடுகள்தாம் அவருடைய முதற் பெயரால் மாவோயிஸம் என்று வழங்கப் படுகிறது. முஹம்மது [bin அப்துல்வஹ்ஹாப்] என்பவருடைய தனித்த கொள்கை-கோட்பாடு என்று ஒன்றிருந்து, அதை இஸத்தோடு இணைத்து வழங்குவதென்றாலும் 'முஹம்மதிஸம்' என்றல்லவா சொல்ல வேண்டும்? மாறாக, ஏன் வஹ்ஹாபிஸம் என்று சொல்லுகின்றனர்/எழுதுகின்றனர்? இந்த இடத்தில்தான் மேற்கத்திய பூர்ஷ்வாக்களின் நரித்தனம் ஒளிந்திருக்கிறது. முஹம்மதிஸம் என்று சொல்லி விட்டால் நபி முஹம்மதின் கொள்கை என்று உலக மக்கள் புரிந்து கொண்டு விடுவர் என்ற அச்சமும் முஸ்லிம்களைக் கூறு போட வேண்டிய தந்திரமும் சேர்ந்து உருவானதே 'வஹ்ஹாபிஸம்' என்ற சொல். கார்ல் மார்க்ஸின் பெயரால் மார்க்ஸிஸம், விளாடிமீர் லெனினின் பெயரால் லெனினிஸம், ஜோஸஃப் ஸ்டாலினின் பெயரால் ஸ்டாலினிஸம் ஆகியவற்றைப் போல் இரண்டாவது பெயரில் ஓர் இஸத்தை இணைத்து வழங்குவதென்றாலும் நியாயப்படி, 'அப்துல்வஹ்ஹாபிஸம்' என்றுதான் வழங்க வேண்டும்.
ஏனெனில், அப்துல்வஹ்ஹாப் என்பது இரண்டு பெயர்கள் அல்ல; ஒரு பெயர்தான் [அப்த்+அல்லாஹ்= அல்லாஹ்வின் அடிமை என்பதுபோல், அப்த்+அல்வஹ்ஹாப்=பெருங் கொடையாளனின் அடிமை]. பலவேளைகளில் தந்திரங்கள் வெற்றி பெற்றாலும் சிலவேளைகளில் உண்மைகளின் முன் தந்திரங்கள் தோற்றுவிடும். மொழியறிவின்றி, தந்திர நோக்கோடு தவறாகக் கொடுக்கப்பட்டிருப்பினும், இறைவனின் பண்புப் பெயர்களுள் ஒன்றான அல்வஹ்ஹாப் [பெருங்கொடையாளன்] என்ற பெயராலேயே அவனுடைய மார்க்கமான இஸ்லாமை 'வஹ்ஹாபிஸம்' என்று வழங்குவதிலும் அந்தப் பெருங்கொடையாளனைச் சார்ந்து நிற்பவரை 'வஹ்ஹாபி' என்று அழைப்பதிலும் நபிகளாரை 'வஹ்ஹாபிகளின் தலைவர்' என்று குறிப்பிடுவதிலும் குழப்பமேதுமில்லை என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வர் - குலாமுக்கு வேண்டுமானால் குழப்பமாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
கேள்வி: 'வஹ்ஹாபி' என்று அழைக்கப் படுவோர் யார்? பதில் : இஸ்லாமிய மார்க்கத்தை அதன் பழைமையான தூய வடிவில் கடைப் பிடிப்போர்.மேற்காணும் வினாவும் விடையும் எந்த வஹ்ஹாபியும் புதிதாகக் கண்டு பிடித்துச் சொன்னதன்று. மாறாக, +2 வகுப்பிற்கான 'வரலாறு, நவீன உலகம்' என்ற பாடத்திற்கான தினமணி நாளிதழின் மாதிரி வினா-விடைப் பகுதியில் வெளிவந்ததாகும். நாள்: 19 மார்ச் 1984. 'பழைமையான தூய வடிவு' என்றாலே முந்நூறு ஆண்டுகளுக்கே முன்னர் பிறந்த, புதியவரான முஹம்மது அப்துல்வஹ்ஹாப் ஸுலைமான் என்ற 'முழுப் பெயரை' உடையவருக்குப் பழையதில் எவ்விதப் புதிய ஆளுமையும் இல்லை என்பது தெளிவு. [bin நவீனத்துவம் முடிவுக்கு வந்து அதிநவீனத்துவம் ஆரம்பித்து விட்டதால் இப்போதெல்லாம் யாரும் bin போட்டு எழுதுவதில்லை]. என்னுடைய ஆக்கங்களுக்கான 'வஹ்ஹாபிஸ'ச் சான்றுகள் அனைத்தும் வஹ்ஹாபுடைய வேதமான அல்குர் ஆனிலிருந்தும் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியவர்களின் வழிமுறைகளிலிருந்துமே எடுத்தாளப் படுகின்றனவேயன்றி, முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் என்பவரின் 'கிதாபுத் தவ்ஹீத்' என்ற நூலிலிருந்தன்று. 2. அன்னார் எழுதியவற்றுள், நஸீஹத்துல் என்றும் முஸ்லிமீன் என்றும் இரு நூல்களைக் குறிப்பிடுகிறார் குலாம். 'நஸீஹத்துல் முஸ்லிமீன்' [முஸ்லிம்களுக்கு அறிவுரை] என்பது ஒரேயொரு தலைப்பாகும்; இரண்டன்று. தெரியாதவற்றைத் தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டெழுதுவது குற்றமன்று; தெரியாதவற்றைத் தெரிந்ததுபோல் பாசாங்கு செய்து கொண்டு எழுதுவதே குற்றம்.
3. "இமாம் வகாப் அறுநூறுபேர் கொண்ட படையுடன் நேரடியாகப் பங்கேற்று உமர் பின் அல்கதாபின் சகோதரர் அஸ்வரின் சமாதி மக்பராவை இடித்து தள்ளி நிர்மூலமாக்கினார்"
இதுவும் 'அரபு வகைப் பட்ட' வரலாற்று ஆசிரியராகத் தன்னைத் திண்ணைக்கு அறிமுகப் படுத்த முயன்றுள்ள குலாம் எழுதியதுதான். அண்ணல் உமருக்கு அஸ்வர் என்றொரு சகோதரர் இருந்தார் என்பதை மட்டும் சான்றுகளோடு குலாம் நிரூபித்து விட்டால், அவரைப் பேராசிரியர் என்றே அழைக்க நான் தயார். சரி, இல்லையெனில்?
"அப்பட்டமான முட்டாள்தனமும், சமகால வரலாற்று மோசடியாகும்"
இவைதாம் குலாமின் திண்ணைக் கடிதத்தின் இறுதிச் சொற்கள்.
அவை 'யாருக்குச் சொந்தம்?' என்று முடிவுக்கு வர வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.
மயிலாஞ்சி எல்லையோடு நிறுத்திக் கொண்டிருந்தால் 'சவை நடுவே நீட்டோலை வாசியா' வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை குலாமுக்கு ஏற்பட்டிருக்காது!
ஃஃஃ
வெள்ளி, மே 12, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - அறிமுகம்
'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்ற பெயரில், இஸ்லாமியக் கல்வி வெளியீட்டு நிறுவனத்தாரால் 1999இல் ஓர் ஆய்வு நூல் வெளியிடப் பட்டது. மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் பணியாற்றியத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எனது அன்புக்குரியவருமான சகோதரர் 'ஹஸ்ஸான்' என்ற ஜமாலுத்தீன் அவர்களின் தெள்ளு தமிழ் நடையில் வெளிவந்த இவ்வாய்வு நூலை, வலைப்பூவில் பதிக்க வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை! என் ஆசைக்கு இரு காரணங்கள் உள. 1. அன்னாரின் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. 2. அன்னார் மறைந்து விட்டார்; அவர் எழுத்து மறையக் கூடாது. எனவே, அவருடைய மகனாரின் அனுமதி பெற்று என்னாசையை நிறைவேற்றும் முகமாக, இவ்வாரம் முதல் இங்குப் பதிக்கத் தொடங்குகிறேன். இந்நூலுக்கு 'இஸ்லாத்துக்கு எதிரான இலக்கியங்கள்' என்ற தலைப்பே மிகப் பொருத்தமானது என்பது என் கருத்து. " குவிபெருந்தானை நாப்பண் கூண்டவை அலீயென்றோதும் பவனியின் தருவை நோக்கிப் பல கொடி படர்ந்ததன்றே"(ஃபாத்திமா திருமணப் படலம், பாடல்: 135) நபித்தோழியராம் ஸஹாபிப் பெண்களை இவ்வாறு தரக்குறைவாகப் புலவர் வருணித்துச் செல்வதை இந்நூலாசிரியர் விளக்கமாக எடுத்தெழுதியுள்ளார். இந்துமதச் சித்தாந்தத்தின் 'ஜெராக்ஸ் காப்பி'யாகவே குணங்குடி மஸ்தானின் பாடல்கள் காணக் கிடைக்கின்றன என்பதை இந்நூல் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளது.
"ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நான்காம் ஓதிய ஷரீஅத்தென்றும் உவந்திடும் தரீகதென்றும் நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால் ஆதியைக் காணலாம் என்று அகுமதர் அருளிச் செய்தார்" (ஞானமணி மாலை, பாடல் : 11)போன்ற பீரப்பாவின் பாடல்கள் மெய்யான ஹதீஸுக்கு வெளிப்படையாகவே முரண்பட்டு அமைந்துள்ளன. 'அல்லாஹ்தான் முஹம்மது நபியாக அவதரித்தான்' என்ற கேடுகெட்ட அவதாரக் கொள்கையைப் பீரப்பா இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டிப் பாடியுள்ளார்.
"இப்புவியில் ஊனுருவாய் நீ அகுமது ஆனவனே"(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 134)
"நீயே உனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் நீயே புவிக்குள் ரசூலாக வந்தவன்"(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 118) இம்மாதிரிப் பாடல்களை மாபெரும் ஸூஃபிஸ இலக்கியங்களாக இஸ்லாமியர் போற்றிப் பயிலுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற இந்த இலக்கிய முரண்பாடுகள் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. மாறாக, இவற்றையே இஸ்லாமியக் கொள்கைகள் எனப் பெரும்பாலான முஸ்லிம்களும் மற்றோரும் நம்பியிருந்தனர்; நம்பியிருக்கின்றனர். அந்தத் தவறான நம்பிக்கையை இந்நூல் தகர்த்து விடும் என்பதில் ஐயமில்லை.
வெள்ளி, மே 05, 2006
தொடரும் வெளிச்சம் - பளீரென்று
"பிராமணர்கள் கருவறை மொழியாக சமஸ்கிருதத்தை புனிதப்படுத்தி வைத்திருப்பதுபோல் வகாபிகள் அரபு மொழியையும் புனிதப்படுத்தி சொர்க்கத்தின் மொழி அரபு என்று புனைவுபடுத்தியும் வைத்துள்ளார்கள்"
1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.
2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,
3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.
4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.
5- உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும்.
"நபிமுகமது மூலமாக கி .பி.ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகிறது"என்று.
வெள்ளி, ஏப்ரல் 21, 2006
எதிர்மறைகள்
வெள்ளி, ஏப்ரல் 14, 2006
மீண்டும் வெளிச்சம்
"இந்தக் குர் ஆனை அரபு மொழியில் அருளியிருக்கிறோம் - நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக" - இது அல் குர் ஆன் 012:002.
" ... இன்றைய நாளில் உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன்; என்னுடைய அருட்கொடை (இறைமறை)யையும் முழுமையாக்கி விட்டேன்; உங்களுடைய வாழும் வழியாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்." என்று அல்லாஹ் கூறுகிறான் [005:003].
