சலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற் குலவு வீரமுங் கல்வியும் வெற்றியுங் குடியாய் நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத் திலகு செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்.(சலத ரத்தைநேர்=கருமேகத்தை ஒத்த) (வனசத் திலகு செல்வி=தாமரை மலரில் இலங்கும் லட்சுமி).
திங்கள், மார்ச் 19, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11
ஞாயிறு, மார்ச் 11, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10
"அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனைவிட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்?" [003:094], [061:007]
"அப்பொய்யர்கள் (மறுமையில்) வெற்றியடைய மாட்டார்கள்" [010:069], [016:116]
"என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர், தன் இருப்பிடத்தை நரகில் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்" (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது)
வியாழன், மார்ச் 08, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே
புதன், பிப்ரவரி 28, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8
அந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து அறிஞர்களை அணுகி, இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப் புலவர், ஆலிப் புலவர் ஆகியோர் முறையே சதக்கதுல்லா அப்பா, காழி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம். அவர்கள் இவ்வாறாக 'உரை' பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி, இயற்கை(உண்மை)யும் செயற்கை(பொய்)யும் கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.
படிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துகள் ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் அந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் 'முன்னுரை' என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்து விட்ட புருடாக்கள் அவற்றைவிட மேலாக துருத்திக் கொண்டு நின்றன.
உமறுப் புலவருக்கு வருவோம்! உமறுப் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்னி, சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று உரை (வரலாறு பற்றிய செய்தி) கேட்டாராம். உமறுப் புலவரின் அமுஸ்லிம் தோற்றத்தைக் கண்டு, அவரை சதக்கதுல்லா அப்பா புறக்கணித்து விடவே உமறுப் புலவர் கவலையில் நொந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலவரின் கனவில் தோன்றி, "உமறே! நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக!" என்று கூறினார்களாம். அதேபோல் சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கத்துல்லா அப்பா உமறுப் புலவருக்கு உரை வழங்கினாராம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்பு படுத்திப் பின்னப் பட்ட இந்த 'உரை' கதை பலரும் அறிந்ததே! வேறுசிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கின்றது.
சதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப் புலவர், மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள காழி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்குத் தேவையான செய்திகளைக் கேட்க, உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்த நெய்னா லெப்பை உமறுக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். அதனால் உள்ளம் உடைந்த உமறுப் புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, "ஷாஹுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும் சீறாப்புராணத்துக்கு நீங்கள்தான் தலைப்பெடுத்துத் தரவேண்டும். இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்" எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவரின் "திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய் ..." எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு, உமறுப் புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி, அதைத் தொடர்ந்து மடை திறந்த வெள்ளம்போல் பாடலானாராம்.
அதன் பின்னர் நெய்னா லெப்பையைச் சந்தித்து உமறு விபரம் கூற, "நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்வதற்கு நாகூர் பிரான் அவர்களுக்கு மனப் பொருத்தமானால் நமக்கும் மிக்கப் பொருத்தமாயிருக்கும்" எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை, காதிரசனா மரைக்காயரின் 'சீறா நபியவதாரப் படலம்' (முதற்பதிப்பு - ஜூலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.
திங்கள், பிப்ரவரி 19, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7
வியாழன், பிப்ரவரி 08, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 6
அரபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்ற மரபினை வாழச் செய்த முகம்மது நபியே போற்றி!என்ற இப்பாடலில் இஸ்லாமுக்கு முரண்பட்ட கருத்துகள் எதுவுமில்லை. திரு. வி.க.வின் உள்ளம் காஃபிராயிருப்பினும் அவருடைய இக்கவிதை ஈமான் கொண்டுள்ளதன்றோ? இதேபோன்று, உள்ளம் ஈமான் கொண்ட நிலையில் ஒருவருடைய கவிதை குஃரு(இறை மறுப்பு)க்குத் துணை போகுமானால், அக்கவிதையை மறுதலித்துவிட வேண்டும். இதுவே இஸ்லாமிய இலக்கியத்தை இனங்கண்டு கொள்ளும் வழிமுறையாகும். மிஃராஜ் மாலை, சீறாப்புராணம் போன்ற தொடக்க கால இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களின் தோற்றத்திற்குரிய காரணங்களை அந்தந்த நூல்களின் முன்னுரைகளே தெளிவாக எடுத்துரைக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், இந்துமதச் சகோதரர்களுடைய கோவில் திருவிழாக்களிலும் கதா-காலேட்சபங்களிலும் பெரும் திரளாகச் சென்று ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதைக் கண்ட முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், இஸ்லாமிற்கு எனக் காப்பியம் இல்லாமையால்தானே இந்த முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களை நாடிச் செல்கின்றனர் எனக் கவலைப் படலாயினர். அந்தக் கவலையின் விளைவாக, இந்த முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் எழுதப் பட்ட இலக்கியங்கள் அனைத்திலும் முன்னைய தமிழ்ச் சமயங்களின் தாக்கம் தவிர்க்கவியலாத அளவுக்கு இடம் பெறலாயிற்று. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.
திங்கள், ஜனவரி 15, 2007
சிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்
நாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, "திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்டங் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்" என்று சபதமேற்றாள். அவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.சிறப்புச் செய்தி-2
தென்காசிக்கு நாகூர்வலீ ஷாஹுல் ஹமீது வந்தவேளை அங்குக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அவரும் அவருடன் வந்த சீடர்களும் உண்ண உணவின்றித் தவித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாதாகோவில் மாட்டைத் திருடி, பலி கொடுத்து விருந்து வைத்துத் தின்று விட்டனர். இதையறிந்த மாதாகோவில் ஆட்கள் வந்து கேட்டபோது, ஷாஹுல் ஹமீது வலீயும் அவர்தம் சீடர்களும் சாப்பிட்டுப் போட்ட மாட்டின் எலும்புகளை ஒன்று திரட்டி, ஷாஹுல் ஹமீது வலீ தன் கோலால் அடிக்கவே மாடு எழுந்து (!) நின்றது. மாதாகோவில் ஆட்கள் தம் மாட்டை ஓட்டிச் சென்றனர்.சிறப்புச் செய்தி-3
சிறப்புச் செய்தி-4தன்னைச் சுற்றிக் கூடியிருந்த சீடர்களிடம் முஹைதீன் ஆண்டவர் கூறினார்: "காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் என்னிடம் வந்து ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை எனக்கு அறிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து அந்த ஆண்டில் நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும் தம்மிடம் என்னென்ன மறைவான விஷயங்கள், ரகசியங்கள் (இரண்டும் ஒன்றுதானே என்று யாரும் கேட்கக் கூடாது) நடக்கவுள்ளன என்பதை எனக்குத் தெரிவிக்கின்றன".
இவை போக, சிறப்புச் செய்தி-1இல் இடம்பெற்ற தாரியா மற்றும் அவளது வலீ குறித்தத் தொடர்ச்சியாக இம்மடலில் சிறப்புச் செய்தி-5ஷாஹுல் ஹமீது வலீ, ஹஜ்ஜுக்குப் போகும் வழியில் லாகூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது லாகூரின் முஃப்தியாக இருந்த ஷேக் நூருத்தீன் என்பார் (ஷாஹுல் ஹமீது வலீயைப் போலவே) பிள்ளைப் பேறற்று இருந்தார். தனக்குப் "பிள்ளைப் பேறு வழங்க வேண்டும்" என்று முஃப்தி ஷேக் நூருத்தீன் (பிள்ளைப் பேறற்ற) ஷாஹுல் ஹமீது வலீயிடம் வேண்டினார். அதற்கு, விடலைப் பருவத்தில் இறந்துபோன தம் சகோதரர் யூஸுஃப் என்பாரின் பெயரை முதலில் பிறக்கும் ஆண் மகவுக்கு இட வேண்டும் என்று ஷாஹுல் ஹமீது வலீ நிபந்தனை விதித்தார்; அதையும் முஃப்தி ஏற்றுக் கொண்டார். ஷாஹுல் ஹமீது வலீ வெற்றிலைக்குள் ஒரு பொருளைச் சுருட்டி வைத்துக் கொடுத்தார். அந்தப் பொருளினால் முஃப்திக்கு நான்கு ஆண் மக்களும் சில பெண் மக்களும் பிறந்தனர்.
தாரியா சூளுரைத்தபடி நடக்கும் என்று எதிர்பார்த்தது நடக்க வில்லை. அது மட்டுமா? அவளது அன்பிற்குரிய வலீ அதீக்குல்லாஹ் உணவருந்த உட்காரும்போதெல்லாம் சாரை சாரையாக எறும்புகள் ஓடிவந்து அவரது உணவைத் தூக்கி(?)ச் சென்று விடுவது வழக்கமானது. விடாது துரத்தும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க ஊர் முழுதும் ஓடி அலைந்தார். இறுதியாக நாக் மலையின் உச்சிக்கு ஓடிப் போனார். (31ஆவது ஹிக்காயத், கண்ணி 7, வரிகள் 33-35).சூபியின் உளறல்களுக்குச் சான்றுகளையும் அவற்றுக்கான சுட்டிகளையும் குறிப்பிட்டு இதுவரை விளக்கி இருக்கிறேன்; இனிமேலும் விளக்குவேன். ஆனால், "நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து, நாமிருவரும் ஊதி-ஊதித் திண்ணலாம்" என்ற கதை இனியும் நடக்காது. மேற்காணும் ஐந்து சிறப்புச் செய்திகளுக்கும் 'பண்பாட்டு'க்கும் உள்ள தொடர்பை சூபி விளக்கிய பிறகு யூனுஸ் நபி வாழ்ந்த வயிற்றுக்குச் சொந்தமான மீனைக் குறித்து எனது விளக்கம் கண்டிப்பாகக் கிடைக்கும். அதுவரை இம்மடலே சூபிக்கு மீண்டும்-மீண்டும் மீள்பதிவு மடலாகும். முன்னொருமுறை நான் திண்ணையில் குறிப்பிட்டிருந்ததை சூபிக்கு இங்கு நினைவூட்டுவது சாலப் பொருந்தும்: விளையாடுவது எனக்கு விருப்பமானதே - சிறுவர்களோடு; பூனைக் குட்டிகளோடும் - அவை காவி நிறமாக இருந்தாலும் சரியே!
வெள்ளி, டிசம்பர் 29, 2006
கால் நகங்களைப் பிய்த்துக் கொள்ளும் காவிப் பூனைக்குட்டி
The Year of the Elephant (عام الفيل `Âm al-Fîl) is estimated at 570 CE and reported in Muslim historical accounts as the same year as that of the birth of their prophet Muhammad.[1] It is so named for an event that occurred at Mecca, in which it is reported that Abraha, a Christian King of Yemen, marched upon the Kaaba with elephants in order to demolish it.[2]
வஹ்ஹாபிகளின் தலைவரின் பிறந்த ஆண்டை, 'யானை ஆண்டு' என்று ஏன் வரலாறு குறிக்கின்றது?
As Abraha neared Mecca, he sent them an emissary, telling them that he would not fight them if they did not resist his destruction of the Kaaba. Abdul Muttalib, the chief of Quraysh, responded that he would defend his own property, but God would defend His house, the Kaaba, and withdrew with his people. The next day, as Abraha prepared to enter the city, swarms of birds carrying small rocks came and bombarded the Ethiopian forces; each man that was hit was killed, and they fled in panic, as Abraha died a horrible death. The tribes saw this as a sign of the Kaaba's holiness."என்னைப் பொறுத்தமட்டில் தர்காக்களின் சமாதி வழிபாட்டிற்கு ஆதாரம் முஸ்லிம்களின் கபா வழிபாடே ஆகும்" என்கிறார் காவி. எங்களின் மார்க்கத்தில் சமாதி வழிபாட்டுக்கு எம் தலைவர் கிஞ்சிற்றும் இடமளிக்கவில்லை என்பது காவிக்குத் தெரியாமலேயே இருக்கட்டும்; ஆனால் திண்ணை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.
"கபாவின் ஹஸ்ருல் அஸ்வத் பெண்குறி வடிவமைப்பை முத்தமிடும் வழிபாட்டிற்கும்,தமிழக சக்ராயி தெய்வ பெண்குறி வழிபாட்டிற்கும் எப்படி ஒப்புமை ஏற்பட்டது ... " என்ற காவியின் இந்தக் கேள்விக்கு இரண்டு வகைப் பட்ட விளக்கங்கள் உள: 1. காவியின் தலைச்சோறு புளித்து நாறிப் போனதால் இந்த ஒப்புவமை ஏற்பட்டிருக்கலாம்."... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...": அஹ்மது 8449, அபூதாவூது 1746 .
"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .
"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.
"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.
The Stone is actually broken into several pieces, damage which occurred when the stone was stolen in 930 C.E. Ismaili (Qarmatian) warriors sacked Mecca and carried the Black Stone away. It was returned twenty-two years later. In the process, the Black Stone was cracked. It is now held together by a silver band, which is fastened by silver nails to the Stone.காவி பார்த்துச் சொல்லும் சக்ராயி யோனி, பல துண்டுகளால் இணைக்கப் பட்ட யோனியா என்று அவர் படம் போட்டால் நானும் திண்ணை வாசகர்களும் பார்த்துக் கொள்ள ஏதுவாகும். இடம் தெரியாமல் பிராண்டி, காவிப் பூனைக்குட்டியின் நகங்கள் பிய்த்துக் கொண்டன ... பாவம்.
வெள்ளி, டிசம்பர் 15, 2006
கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி
நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், 'உள்ளதும் போச்சுதே நொள்ளைக் கண்ணா' என்ற சொல்வழக்கை நினைவூட்டி வந்து நிற்கிறார் சூபி. இதிலே குலாம் ரஸூலின் கொ.ப.செ. ஆகத் தன்னை நியமித்துக் கொண்டது வேறு. தலைவர்கள் தளர்ந்து தடுமாறும்போது கை கொடுக்க வேண்டியது கொ.ப.செ.க்களின் பொறுப்பு என்ற கடமை உணர்வோடு வந்திருக்கும் சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல முடிவு! இந்தக் கடிதத்தின் இறுதில் 'திண்ணையில் வஹ்ஹாபி' என்றொரு சுட்டி இருக்கும். அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன. "சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு ' முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன? இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு?"லிருந்து தொடங்கி, 'வெற்றிலைப் பிள்ளை' வரைக்கும் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து எல்லாவற்றுக்கும் பதில்களைத் தந்து, வஹ்ஹாபியைத் தோலுறித்துக் காட்டி, கொ.ப.செ. பதவியை சூபி தக்க வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் .. அந்த 'முலையறு சபத'த்தை மறந்து விடவேண்டாம்!என்று நான் கேட்டிருந்தேன். எனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாத, கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டியாகிப் போன சூபி, உலகம் இருண்டு விட்டதாகப் புலம்புகிறார். அப்ரஹாவின் யானைப்படையைப் பறவைகள் அழித்த அதிசயம், வெறும் மூடநம்பிக்கையன்று. மாறாக, பதிவு செய்யப் பட்ட வரலாறு. எமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ஆண்டுதான் அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற 'யானை ஆண்டு'. சென்ற வாரத் திண்ணையில் சூபியின் கடிதமும் அதற்கான (ஹமீது ஜாஃபரின்) பதிலும் ஒரே இதழில் வெளிவந்ததும் ஓர் அதிசயமே! இன்னொரு அதிசயமும் உண்டு! அதுதான் சூபி என்னும் காவியை ஹமீது ஜாஃபர் இனங் கண்டு கொள்ள இத்தனை காலம் எடுத்துக் கொண்டது! பிப்ரவரி 24, 2006 திண்ணை இதழிலேயே 'சூபியின் முகமூடி மட்டும்' என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தில் அந்த முகமூடியைச் சற்றே நீக்கிக் காட்டியிருந்தேன். பின்னும், ஜூலை 6, 2006 திண்ணை இதழில் வெளியான 'நியாயமான கேள்விகள்' என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளில்
திண்ணை வாசக நண்பர்: பூனக்குட்டி வெளியே வந்து பொத்துன்னு விழுந்துடுச்சே தெரியுமா? நான்: என்ன சொல்றீங்க? நண்பர்: சூபிமுகமது என்ற பெயரில் திண்ணையிலெ எழுதுற ஆளு முஸ்லிமில்லே! நான்: எப்படிச் சொல்றீங்க? நண்பர்: அல்லாவின் சமாதி, அல்லாவின் சிலை, கபாவுக்குள்ளே இபுராகீம் பீடம், ஸ்ங்கே அஷ்வேத, சிவலிங்கம் அப்டில்லாம் எழுதுறது இருக்கட்டும். ஒரு முஸ்லிமுக்கு இப்டியெல்லாம் நினைக்க முடியுமா? இது அவ்ளவும் ஆர்.எஸ்.எஸ் சைட்டிலேர்ந்து சுட்டது. நான்: இருக்கட்டும். யாராயிருந்தா என்ன? சூபின்னோ முகமதுன்னோ முஸ்லிமல்லாதவங்க உண்மையிலேயே பேரு வச்சிகிட்டா நீங்க கேஸா போட முடியும்? நண்பர்: முடியாதுதான். ஆனா இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை சந்தேகம்ங்கிற பேர்ல எழுதி திண்ணையை ஏமாத்தலாமா முடியாதா? இதையே ஒரு கிரிஸ்டின் பேர்லெயோ இந்து பேர்லெயோ எழுதி இருந்தா ... திண்ணை பப்ளிஷ் செய்யுமா?என்று சூபியின் முகமூடியை முற்றிலும் கிழித்திருந்தேன். பொத்தென்று வந்து விழுந்த அந்தப் பூனைக்குட்டிதான் இப்போது கோரைப்பாயென்று நினைத்துக் கொண்டு மாமலையைப் பிராண்டுகின்றது. அந்தக் கொ.ப.செ. பூனைக்குட்டிக்கு எனது பழைய பதிலையே பதிவு செய்கிறேன்:
வெள்ளி, டிசம்பர் 01, 2006
இல்லாத இடம் தேடும் ...
என்று கூறி முடித்தார்கள். இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். ''நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?'' என்று கூறினான். அவனைக் கண்டித்து ''அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...'' என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் அருளப் பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதீ,ஃபத்ஹுல் பாரீ). அபூலஹபின் மீது தணியாத பாசம் கொண்ட சூபியின் கேள்வி யாதெனில், "கருணையாளனான அல்லாஹ் தெருச் சண்டைக்காரன் போல் சாபமிடலாமா?" என்பதே! முஸ்லிம்களின் இறைவனைக் குறித்து எதுவுமே தெரியாத அறிவிலித்தனத்தால் விளைந்த கேள்வியைத்தான் சூபி கேட்கிறார். அல்லாஹ் கருணையாளன்தான். அதேவேளை கையாலாகாதவன் அல்லன். அடக்கியாள்பவனும் அவனே! அவனுடைய அன்பிற்குரிய அடியார்கள் பலரையே அடக்கி வைத்தவன்; வைத்திருப்பவன் எனும்போது அபூலஹப் அவனுக்கு எம்மாத்திரம்? அடுத்து, "இது அல்லாவின் வார்த்தையா?" என்று சூபி ஒரு கேள்வியை வைக்கிறார் - அந்தக்கால அபூலஹபைப் போலவே. மேற்காணும் 111ஆவது அத்தியாயம் அருளப் பட்ட பின்னரும் பத்தாண்டு காலத்திற்கு மேல் அபூலஹப் உயிர் வாழ்ந்திருந்தான். அந்தப் பத்தாண்டுகளில் அவனுடைய குரைஷிக் குலத்தினரில் பெரும்பாலோர் சத்திய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டனர். சூபியைப் போலவே இறைவாக்கைப் பொய்ப் படுத்திவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்த அபூலஹப், சற்றே அறிவைப் பயன் படுத்தி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? "நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன்" என்ற ஓர் அறிவிப்பு அபூலஹபிடமிருந்து வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? 1 - "குர்ஆன் இறைவாக்கு இல்லை" என்று நிறுவுவதற்கு 1400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய பரிதாப நிலை தொடந்திருக்காது. 2 - நபி (ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் தூதர் என்ற உயர் பதவியிலிருந்து இறக்கி, வெறும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று ஆக்குவதற்கு இன்றுவரை செய்யப் பட்டுக் கொண்டிருக்கும் பூனையைக் கட்டி வைத்து சிரைக்கும் வேலை மிச்சமாகிப் போயிருக்கும். 3 - உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பின்பற்றுகின்ற - எதிர்ப்புகளை எதிர்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து செம்மாந்து நிற்கின்ற - வாழ்க்கை நெறியான இஸ்லாம், இல்லாமலாகி இருக்கும். கேள்வி: அபூலஹப் ஏன் அதைச் சொல்லாமலே அழிந்து போனான்? பதில்: அல்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இன்னொரு சாட்சியாக!''குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. கஅபு இப்னு லுவய்யின் வழித்தோன்றல்களே!
முர்ரா இப்னு கஅபின் வழித்தோன்றல்களே!
குஸைய்யின் வழித்தோன்றல்களே!
அப்துல் முனாஃபின் வழித்தோன்றல்களே!
அப்து ஷம்ஸ் வழித்தோன்றல்களே!
ஹாஷிம் வழித்தோன்றல்களே!
அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்களே!
அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே!
அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே!
உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே!
எனது செல்வத்திலிருந்து விரும்பியதைக் கேட்டு பெற்றுக்கொள். உன்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்! நிச்சயமாக நான் உனது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உனக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்''
வெள்ளி, நவம்பர் 17, 2006
மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்
1-"வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும் எங்களுக்கு அருளப்பட்ட(வேதத்)தின்மீதும் இதற்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்ற காரணத்திற்காகவே நீங்கள் எங்களைப் பழிக்கின்றீர்கள். திண்ணமாக, உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக (-தண்டனைக்கு உரியவர்களாக) இருக்கின்றீர்கள்" என்று (நபியே!)நீர் கூறுவீராக! [005:059].
2-"அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட தண்டனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எவர்களை அல்லாஹ் சபித்து, எவர்கள் மீது கோபமுங்கொண்டு, எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும் ஷைத்தானை வழிப்பட்டவர்களும்தாம் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! [005:060].
3-தடையை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம் [007:166].
4-சனிக்கிழமை (மீன் பிடிக்கக் கூடாது என்ற நம்) தடையை உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி, "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று நாம் கூறினோம் [002:065].மேற்கண்டவற்றுள் இரண்டாவதுதான் சூபியுடைய கேள்வியின் கரு. கேள்விகள் அனைத்தும் ஒரேயோர் உண்மைக் கடவுள் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற அல்லாஹ்விடம் கேட்கப் பட்டுள்ளன. எனவே, அவனே பதில் சொல்கிறான்:
அவன் உயிர் கொடுக்கிறான்; அவனே உயிர் பறிக்கிறான். ஆகவேண்டிய ஒன்றுக்கு, அவன் 'ஆகுக!' என்று கூறுவான். உடன் அஃது ஆகிவிடும் [040:068].சூபிக்கும் வஹ்ஹாபிக்கும் அவரவர்களுக்குரிய வேளையில், "சடலமாய் ஆகுக!" என்ற அவனது கட்டளை வரும். அப்போது கண்கள் நிலைகுத்தி விடும். உடல் விறைத்துப் போகும். அவனுடைய "ஆகுக!"வுக்கு எதிரே சூபியின் விஞ்ஞானம் மண்டியிட்டுக் கிடக்கும். "அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டி விடாதீர்கள் ..." [006:108] என்ற வஹ்ஹாபின் கட்டளைக்கு அடிபணிந்து, சூபி மதிக்கும் கடவுளர்கள் இருவருக்கு, தலைப்பில் கூடுதலாக மரியாதை செய்து விட்டேன். நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், 'உள்ளதும் போச்சுதே நொள்ளைக் கண்ணா' என்ற சொல்வழக்கை நினைவூட்டி வந்து நிற்கிறார் சூபி. இதிலே குலாம் ரஸூலின் கொ.ப.செ. ஆகத் தன்னை நியமித்துக் கொண்டது வேறு. தலைவர்கள் தளர்ந்து தடுமாறும்போது கை கொடுக்க வேண்டியது கொ.ப.செ.க்களின் பொறுப்பு என்ற கடமை உணர்வோடு வந்திருக்கும் சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல முடிவு! இந்தக் கடிதத்தின் இறுதில் 'திண்ணையில் வஹ்ஹாபி' என்றொரு சுட்டி இருக்கும். அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன. "சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு' முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன?" "இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு?"லிருந்து தொடங்கி, 'வெற்றிலைப் பிள்ளை' வரைக்கும் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து எல்லாவற்றுக்கும் பதில்களைத் தந்து, வஹ்ஹாபியைத் தோலுறித்துக் காட்டி, கொ.ப.செ. பதவியை சூபி தக்க வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் .. அந்த 'முலையறு சபத'த்தை மறந்து விடவேண்டாம்!
ஒன்றும் ஒன்றும் ஒன்று
சனி, நவம்பர் 04, 2006
சிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்
Al-Mashriqui, a graduate of Cambridge and a rationalist, started his movement through free interpretation of the Holy Quran. In his AT-TAZKIRAH (1924) and HADITH-AL-QURAN (1951), he explained his views on religion and politics. He abridged the teachings of the Quran to ten points that replaced the five accepted pillars of Islam. He was acclaimed by western scholars for his courage and reconstruction of Islamic Faith (AQAA'ID).' (Note: This is in line with the conspiracy of the West against Islam).Page 105 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT. பகுத்தறிவுப் பால் சுரந்து வழிந்த சுனைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். இனி, குலாம் அஹ்மது பர்வேஸைப் பற்றிய நத்வீயின் கண்ணோட்டம்:Professor C W Smith in his book MODERN ISLAM IN INDIA (pages 264-276) and Professor Kramer in his article in the THE MUSLIM WORLD, an American Journal, VOL 21, No.2 April 1930, have praised Al-Mashriqui for his ANTI-HADITH views and took special interest in his AT-TAZKIRAH, which is almost non-existent for the last 40 years.
Ghulam Ahmad Parwez not only continued and carried on the message of Al-Mashriqui, but he went further and expounded his own theories. He (Ghulam Ahmad Parwez) disowned the corpus of Hadith as well as classical Tafaaseer (commentaries of the Quran), which according to him cannot be trusted as a source for understanding the Quran by a modern man. Like Al-Mashriqui, he had to redefine and recoin Quranic terminology. Moreover, his translation of the Ouran had been mingled and fused with his personal views and reviews. The four volumes of his LUGHAAT-UL-QURAN were prepared in order to support their new messages and interpretations. They were jointly compiled and written by various authors with similar persuasions but were published under his name.Page 107 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT.
These theories, expounded by Parwez, sparked opposition among the orthodox Ulama as well as among the modernists. He was taken by many as a closer ally to Western economic thought and philosophy rather than to the Ouranic system. Dr. Aziz Ahmad, himself a modernist and a great admirer of Parwez, was very unhappy with his NIZAAM-E-RUBUBIYYAH concepts. In his book ISLAMIC MODERNISM IN INDIA AND PAKISTAN (pages 224-225), Dr Aziz Ahmad concludes that no modernist, right from the time of Sir Sayed Ahmad Khan to the present, was so close to Western thought as was Parwez.Page 108 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT. இன்னும் நிறைய உண்டு. இங்கு முழுதும் படிக்கலாம். அடுத்து, குலாம் ரஸூல் விளக்கம் கேட்ட இறை வசனம்:
என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய் என்பதை எனக்குக் காட்டேன்" என்று நபி இபுறாஹீம் கேட்டபோது, "நீர் நம்பவில்லையா?" என்று (அல்லாஹ் திருப்பி) வினவினான். "இல்லையில்லை (நான் நம்புகிறேன், அதைக் கண்களால் கண்டு) என் மனம் நிறைவு பெறும் பொருட்டு (காட்டுவாயாக! என்று வேண்டி நின்றார்). "நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை(ப் பெயர்கூறி அழைத்தால்) உம்மிடம் வருமாறு பழக்கிய பின்னர், அவற்றைத் துண்டு-துண்டுகளாக ஆக்கி, அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மலையில் வைத்ததன் பிறகு அவற்றை(ப் பெயர் கூறி) அழைப்பீராக! அவை உம்மிடம் பறந்து வந்து சேரும்(படிச் செய்வேன்)" என்றும் "அறிந்து கொள்வீர்! அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்" என்றும் அல்லாஹ் கூறினான் [002:260].படிப்பினைகள்: (1) சிறிதளவு ஐயம் இருந்தாலும் அந்த ஐயத்துடனே கண்மூடித் தனமாக எந்த ஒன்றையும் நம்பும்படி இஸ்லாம் கூறவில்லை. ஐயத்தைப் போக்கிக் கொள்வதற்கு சாத்தியமான எல்லா வழிகளையும் ஆராயச் சொல்லுகிறது. 2) பிற உயிரினங்களைப் பழக்கி, அடக்கியாளும் திறமையை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிறான். 3) மனிதனுடைய ஆற்றல் வரையறுக்கப் பட்டது. 4) வரையறையற்ற ஆற்றல் என்பது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது. இறைவனுடைய வரையறையற்ற ஆற்றல்களில் சிலவற்றின் அறிவியல் சான்றுகள் இந்தச் சுட்டியில் (குலாமுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக THE PHYSICS OF THE DAY OF JUDGMENT) ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. இறுதியாக, சிறப்புச் செய்திகள்-4 ஷாஹுல் ஹமீது வலீ, ஹஜ்ஜுக்குப் போகும் வழியில் லாகூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது லாகூரின் முஃப்தியாக இருந்த ஷேக் நூருத்தீன் என்பார் (ஷாஹுல் ஹமீது வலீயைப் போலவே) பிள்ளைப் பேறற்று இருந்தார். தனக்குப் "பிள்ளைப் பேறு வழங்க வேண்டும்" என்று முஃப்தி ஷேக் நூருத்தீன் (பிள்ளைப் பேறற்ற) ஷாஹுல் ஹமீது வலீயிடம் வேண்டினார். அதற்கு, விடலைப் பருவத்தில் இறந்துபோன தம் சகோதரர் யூஸுஃப் என்பாரின் பெயரை முதலில் பிறக்கும் ஆண் மகவுக்கு இட வேண்டும் என்று ஷாஹுல் ஹமீது வலீ நிபந்தனை விதித்தார்; அதையும் முஃப்தி ஏற்றுக் கொண்டார். ஷாஹுல் ஹமீது வலீ வெற்றிலைக்குள் ஒரு பொருளைச் சுருட்டி வைத்துக் கொடுத்தார். அந்தப் பொருளினால் முஃப்திக்கு நான்கு ஆண் மக்களும் சில பெண் மக்களும் பிறந்தனர். கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட - பகுத்தறிவுப் பால் குடித்த குலாமின் 'பண்பாட்டு' - மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 228-229இல் இரண்டாவது ஹிக்காயத்தாக மேற்காணும் 'வெற்றிலைப் பிள்ளை'ச் சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. சிறுவர்களோடு விளையாடுவதே எனக்கு விருப்பம் என்று முன்னர் கூறி இருந்தேன். நான் விளையாட விரும்பும் சிறுவர்கள் ரொம்ப நோஞ்சானாகிக் கொண்டே போகும்போது விளையாட்டில் ஆர்வம் குன்றி விடுகின்றது! இன்னும் வேண்டிய அளவு யாரிடமிந்தும் குலாம் பகுத்தறிவுப் பால் குடித்து விட்டு வரலாம்.
ஃஃஃ
வெள்ளி, அக்டோபர் 20, 2006
சிறப்புச் செய்திகள்-3 அல்லது குருட்டுத்தனக் கட்டுடைப்பு
வேண்டியதெல்லாம் அரபு மொழியறிவே! வேடம் பூண்டு வந்தால் விளங்கி விடாது; வேடம் கலைந்து விடும். "(நபியே! அவர்களிடம் கூறுவீராக:) அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளனவென்று நான் கூறவில்லையே! மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நான் ஒரு வானவர் என்றும் உங்களிடம் கூறவில்லை. எனக்கு இறைச் செய்தி மூலம் அறிவிக்கப் படுவதையன்றி எதையும் நான் பின்பற்றுவதில்லை ... [006:050].
"மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறிய முடியாது ..." [006:059].
ஞாயிறு, அக்டோபர் 08, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 5
"உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" புகாரீ-5688.இஸ்லாமியத் தமிழ்க் கவிதைகளைக் குர்ஆன்-ஹதீஸ் முன்னால் நிறுத்தி நுணுகி ஆராயும்போது - ஸ்கேன் செய்து பார்க்கும்போது - அவற்றினுள்ளே எந்த அளவுக்குச் சீழ் மண்டியுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. ஒருவருடைய உடலில் எங்கேனும் சீழ் கட்டியிருப்பது அவருடைய முழு ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஊறு விளைவிப்பதாகும். எனவே, எத்துணை வேதனையாலும் தாங்கிக் கொண்டு, சீழை அப்புறப் படுத்தி, நலம் பெறுவதையே எவரும் விரும்புவர். இப்படியிருக்க, நம் உயிரினுமினிய இஸ்லாத்தின் மீது சீழ் நிரம்பியுள்ள எத்துணையோக் கவிதைக் கொப்புளங்கள் கிளம்பிப் புரையோடிப் போயுள்ளதை நம்மில் பலர் கண்டும் காணாது போகின்றனர். இந்தச் சீழ் வடியும் கவிதைகளைப் பிதுக்கிக் காட்டும்போது, இவர்கள் வேதனையால் துடித்துப் போகின்றனர். இவ்வேதனை எந்த விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளத் தக்கதுவே என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர். இஸ்லாத்தைப் புண்படுத்தும் கவிதைகளை அடையாளம் காட்டுவோரை இவர்கள் புண்படுத்தத் தொடங்குகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத்துக்கு முரணான கவிதையைச் "சீழ்" என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, அத்தகையக் கவிதைகளைப் புனையும் கவிஞனை "ஷைத்தான்" எனவும் வெறுத்துக் கூறியுள்ளனர். அல்குர் ஆனின் 026:221ஆவது வசனத்தில் பொய் புனைபவர்களை ஷைத்தான் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றும் அமைந்துள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் 'அர்ஜ்' என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்; உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, அவருடைய உள்ளத்தில் சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" என்று கூறினார்கள் - முஸ்லிம் 4193.தொடரும், இன்ஷா அல்லாஹ்.
புதன், அக்டோபர் 04, 2006
சிறப்புச் செய்திகள்-2
நபிகள் நாயகத்தின் பிறந்த தேதியும் நேரமும் குர் ஆனில் இல்லை என்பதால் இஸ்லாமிற்கு ஏற்படும் இழப்புகள் யாவை?
நபிகள் நாயகம் பிறந்த தேதி, நேரம், குறித்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் எதற்கு என பூஞ்சைத்தனமான கேள்வியைக் கேட்கிறார் ஹாபி. (அப்படியா?) குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் இல்லை எனில் எதையும் ஏற்கமாட்டோம், நிராகரிப்போம் என்று முழங்கி வருகிறீர்களே... நபிகள் நாயகத்தின் பிறப்பு விவரங்கள் குறித்து எதுவும் குர்ஆனில் இல்லை. உங்கள் தர்க்கவாத அடிப்படையில் குர்ஆன் ஹதீஸ் படி பிறக்காத ஒருவரை எப்படி இறுதிநபியாக பின்பற்றுவீர்கள்? அவர் மூலம் அறிவிக்கப்பட்ட திருக்குர்ஆனை அல்லாவின் வேதமாக எப்படி நம்புவீர்கள்....
"மேலும், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அல்லாஹ் உணவாக அருளியுள்ள(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவனுடைய பெயர் நினைவு கூரப்பட்டு அறுப்பதற்காகவே பலியிடுதலை(க் கடமையாக) விதித்திருக்கிறோம்" [022:034].
"தென்காசிக்கு நாகூர்வலீ ஷாஹுல் ஹமீது வந்தவேளை அங்குக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அவரும் அவருடன் வந்த சீடர்களும் உண்ண உணவின்றித் தவித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாதாகோவில் மாட்டைத் திருடி, பலி கொடுத்து விருந்து வைத்துத் தின்று விட்டனர். இதையறிந்த மாதாகோவில் ஆட்கள் வந்து கேட்டபோது, ஷாஹுல் ஹமீது வலீயும் அவர்தம் சீடர்களும் சாப்பிட்டுப் போட்ட மாட்டின் எலும்புகளை ஒன்று திரட்டி, ஷாஹுல் ஹமீது வலீ தன் கோலால் அடிக்கவே மாடு எழுந்து (!) நின்றது. மாதாகோவில் ஆட்கள் தம் மாட்டை ஓட்டிச் சென்றனர்."
சனி, செப்டம்பர் 23, 2006
சிறப்புச் செய்திகள்-1
"வார்த்தைகளில் வாய்மையானது அல்லாஹ்வின் வேத(வார்த்தையா)ம். வழிமுறைகளில் சிறந்தது முஹம்மதின் வழிமுறை. செயல்களில் தீயது மார்க்கத்தில் புதிதாக ஒன்றைப் புகுத்துவதாகும். எல்லாப் புதுப் புகுத்தலும் பொல்லாப் புதுமைகளாம். பொல்லாப் புதுமைகள் எல்லாமும் வழிகேடே! எல்லா வழிகேடும் பொல்லா நரகில் சேர்க்கும்"
நாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, "திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்டங் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்" என்று சபதமேற்றாள்.
அவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.
